04.06.2026
அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை உடனே வெளியிடு!
பத்திரிக்கைச் செய்தி
2014 – 2016 காலகட்டத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (Archeological Survey of India – ASI) சார்பாக கீழடி அகழாய்வு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. கீழடியில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் 982 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திற்கு 2023 ஜனவரி மாதத்தில் முறைப்படி சமர்ப்பித்துள்ளார். அறிவியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் கீழடியின் காலம் கி.மு.800 – 500 வரை என்பதாக அவர் வரையறுத்துள்ளார்.
ஆனால், போதிய உண்மையான காரணங்களோ, மதிப்புயர் நியாயங்களோ இன்றி அமர்நாத் சமர்ப்பித்த ஆய்வறிக்கையினை மறுத்து, அவரின் ஆய்வறிக்கையை மேம்படுத்தி அனுப்புமாறு இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அவருக்கே திருப்பி அனுப்பியது. இந்த அறிக்கையை அனுப்பிய இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் உறுப்பினர் குழுவில் உள்ள எவரும் கீழடிக்கு வந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தனக்கு அனுப்பிய அறிக்கை செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப் பட்டதாக அமர்நாத் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்.
பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கீழடியின் தொன்மையைக் கணித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் கால மதிப்பீட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஏற்கத் தயாராக இல்லை. அதை மாற்ற வேண்டும் என அது வலியுறுத்துகிறது. இதுதான் இச்சிக்கலின் சாரம்.
ஆனால், எவ்விதப் புறச் செல்வாக்கிற்கும் உள்ளாகாமல், உண்மையான மற்றும் சரியான அறிக்கையைக் கடமை உணர்வோடும் மனசாட்சியோடும் சமர்ப்பித்ததாகக் கூறி, தனது ஆய்வறிக்கையை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அமர்நாத் அவர்கள் திட்டவட்டமாக எழுத்து வடிவில் தெரிவித்துள்ளார்.
ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்து மூன்று ஆண்டுகளாகியும் கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருப்பதை மக்கள் கலை இலக்கிய கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கீழடி தொல்லியல் புதையல்கள், பழங்காலத் தமிழ்க் கல்வெட்டுகள், சமணர் குகைகள் போன்ற தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாகவும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு – டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு – ஜல்லிக்கட்டு போராட்டங்களின் தொடக்கப்புள்ளியாகவும், விடுதலைப் போரின் தொடக்கப் புள்ளியாகவும், திருப்பரங்குன்றம், பறம்பு மலை என மதநல்லிணக்க அடையாளங்களின் தாய்மண்ணாகவும் பார்ப்பனிய எதிர்ப்பு நாட்டார் தெய்வ, குல தெய்வ வழிபாடுகளின் அடையாளமாகவும் திகழ்கின்ற மதுரை மண்டலத்தை தமிழ்ப் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திடு! இந்த மரபுக்கு எதிராகச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சங்கப் பரிவார அமைப்புகள், ஆதிக்கச் சாதிவெறிச் சங்கங்களைத் தடை செய்!
![]()
இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு-புதுச்சேரி.
9791653200
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











