கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!

30

கிழக்கு பதிப்பகம் வழங்கும் டயல் பார் ஷிட்! கார்டூன்!!கிழக்கு பதிப்பகம் கார்டூன்(படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)

நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. தமிழின் இலக்கிய வானில் சில பதிப்பாளர்கள் அற்புதமான பணியாற்றி, சிறந்த இலக்கியத்தை வெளியே கொண்டுவர உதவுகிறார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்லன். புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். நன்றாக விற்பனை ஆகாது என்றால் அவற்றைப் பதிப்பிக்க நான் விரும்புவதில்லை. சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன். எங்கள் புத்தகங்களை மட்டும் விற்பனை செய்வதற்காக என்று நான் உருவாக்கியுள்ள கட்டுமானத்தை இப்போது அனைவருடைய புத்தகங்களையும் விற்பனை செய்ய என்று பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன்.

– பத்ரி சேஷாத்ரி, தொழிலதிபர் (கிழக்கு பதிப்பகம் – நியூ ஹொரைசன் மீடியா) கட்டுரையிலிருந்து

30 மறுமொழிகள்

 1. “‘நம்பர் ஒன்’ பப்ளிகேஷன்” என்று திரும்பத் திரும்ப ஒலிபெருக்கிகள் புத்தகக் கண்காட்சியில் அலறிக்கொண்டேயிருந்தன. இப்பப் புரியுது!

  • அட, நம்பர் ஒன் பப்ளிகேஷன் இந்த கார்ட்டூன் மூலம் நம்பர் ‘ட்டூ’ பப்ளிகேஷனா மாறிடுச்சு; அத கவனிங்க. (இருந்தாலும் பத்ரி வெளிப்படையாக இருக்கும் நல்லவர். வேற யாருக்கும் இந்தத் தைரியம் இல்லை. அவர்களெல்லாம் இலக்கிய உலகத்தை உய்விக்க வந்ததாகத்தான் சொல்கிறார்கள்)

 2. அரவிந்தன் கையில் ஒரு வெடிகுண்டை கொடுத்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். 🙂

  • திரிசூலம் வெடிகுண்டை விட ஆபத்தானது இல்லையா? 🙂

   ஆனால், சொம்புக்கு பதிலாக கமண்டலம் கொடுத்திருக்கலாம்.

 3. விமர்சனம் வரும் என்று அறிந்தே, பத்திரி வெளிப்படையாக சொல்லி இருப்பதில் தவறு இருப்பது போல் தெரியவில்லை, ஒருவேளை அவர் தன்னை தமிழ் இலக்கியத்தை காக்க வந்த இலக்கிய போர்வாள் என்று கூறி இருந்தாலும் நீங்கள் இதே கார்டூனைப் போட்டு தான் நக்கல் அடித்திருப்பீர்கள்.

  • //இலக்கியத்தை காக்க வந்த இலக்கிய போர்வாள்// என்று சொன்னதை கோட் செய்து போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். Any problems?

  • வியாபாரத்துக்கும் இலக்கியத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் இருக்கிற வித்தியாசம்தான். 🙂 அ.நீலகண்டன் படம் ரசித்தேன்

 4. பத்ரி சொன்னதில் என்ன தவறு என்று புரியவில்லை? இதே கருத்தை மற்ற பதிப்பாளர்கள் வெளிப்படையாக சொல்ல முடியுமா?
  Harry Potter நாவலே எட்டு பதிப்பாளர்கள் நிராகரித்து கடைசியாக Bloomsbary வெளியிட்டது.எட்டு பதிப்பாளர்கள் ஏன் நிராகரித்தார்கள் என்று வினவு பதிவு போட்டால் பத்ரி கருத்துக்கு விடை கிடைக்கும்..

 5. ஒங்களுக்கெலாம் ஒலகத்துல எவனுமே தொழிலதிபரா இருக்ககூடாது, அதுவும் வெற்றிபெறும் தொழிலதிபரா இருக்க கூடாது. வயிறெஞ்சிறும். சிகப்பு சட்டைக் கோடீஸ்வரனுங்க பிச்சைக்காரனுங்களை வளக்கத்தான் ஆசைப்படறீங்க! இதுக்கு ஏன் மத்தவனை சும்மா நோண்டிக்கிட்டு இருக்கனும்.

  உங்க நக்ஸலைட்டு பொளப்பை நீங்க பாருங்க! தடைசெய்யப்பட்ட நக்ஸலைட்டுங்களான உங்களை கைது செய்யாமல் இவ்வளவு நாள் அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறதுன்னு தெரிய்வே இல்லை!

   • \\தில் இருந்தா கைது செய்ய சொல்லு.\\
    அப்ப நக்ஸலைட்டுன்னு ஒத்துக்குறீங்க…

    • சென்னைல எம்.ஜியார் நகர்ல மேடை போட்டு மைக் வச்சு மக்கள் கூட்டத்தின் முன்னாள் அரசின் காதில் பலமாக விழுற மாதிரி எத்தனை தடவை சொல்லியிருப்பாங்க- “நாங்கள் நக்சல்பாரிகள்”- என்று?

     விடிய விடிய கதை கேட்டுட்டு …..

     • நானும் ரௌடி நானும் ரௌடி, நானும் ஜெயிலுக்கு போறேன், நல்லா பார்த்துக்க நானும் ஜெயிலுக்கு போறேன்….நானுன் ஜெயிலுக்கு போறேன்… – வடிவேலு… 🙂

      • ஏன் பாஸ், உங்களுக்கு வீட்ல பேசவே சொல்லிக் குடுக்கலியா? எப்பப் பாத்தாலும் வடிவேலு டையலாகையே பேசிட்டு திரியுறீங்க.

  • மிகவும் சரி. 100% சரி. இந்தியால, அதுவும் தமிழ்நாட்டுல ஒருதன் பணம் சம்பதிச்ச பேதும். அவனை வறுத்தெடுக்கவே ஒரு குருப் அலையும். ஆனா அவிங்க பணம் சம்பதிச்சுடு போய்கிட்டே இருபாங்க. இவிங்க வயறு எரிஞ்சுகிட்டே இருக்குர பணத்த விட்டுடே இருப்பாங்க

 6. கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வினவு போன்ற நபர்கள் இருக்கும் போதே இந்த பாடுபடுத்தும் நீங்கள், அவர்களையெல்லாம் நக்ஸலைட் என்ற பெயரில் கைது செய்து அடைத்துவிட்டால் என்ன ஆட்டம் போடுவீர்கள் திருவாளர் ராம் போன்றவர்களே?

 7. பத்ரி சொல்லிட்டுத்தான் செய்றார்.
  //சில புத்தகங்களை என் சொந்த ஆசைக்காகப் பதிப்பிப்பதும் உண்டு. கமெர்ஷியலாகப் பார்க்கும்போது அவை தவறான முடிவுகள் என்று நன்கு தெரிகிறது. வரும் காலங்களில் இந்தத் தவறைக் குறைத்துக்கொள்வேன்//

  ஆக, தரமான எழுத்து விற்பனை ஆகாது; அதனால் அவற்றை வெளியிடுவதைக் குறைத்துக் கொள்வேன் என்கிறார்;

  ஆனால் அவர் மூலம் கழிவு விலையில் தாங்கள் ‘வெளி’யிடுவதை உலகத்தரம்னு சொல்கிறார்கள் படைப்பாளர்கள். அப்போ ஏமாறுவது யார்?

 8. “எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். ”
  எந்தக் கேடுகெட்ட நிலையில் இருக்கும் சமூகத்திலும் படிப்பும் நல்ல இலக்கியங்களும் தான் ஒரே நம்பிக்கை கீற்றாக இருக்க முடியும். காலத்தின் கட்டாயத்தின் பேரில் எந்தவொரு வணிகமயமாவது தவிர்க்க முடியாதது தான். அதற்காக வெளிப்படையாகப் பேசுகிறேன் என்ற பேரில் பொறுப்பை உணராமல் (அல்லது மதிக்காமல்)பேசி இருக்கும் ஆபத்தான் பேச்சு இது. நூலகங்களை மூடும் பேயாட்சியில் இதுவும் ந‌ட‌க்கும் இத‌ற்கு மேலும் ந‌ட‌க்கும்.

 9. //“எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். ”//

  இந்த வரிகள் எல்லாவிதமான போலித்தனங்களையும் போட்டுடைத்துவிடுகின்றன என்பதாகவே உணர்கிறேன். இந்து ராம் என்ற முதலாளி சாய்நாத் என்ற மனிதரின் எழுத்துக்களை பிரசுரிப்பதின் நோக்கமும் இதுதானே.

 10. பத்ரி சொல்லிட்டார்.. மத்தவனுங்க சொல்லல! வெளிப்படையா பேசுனவங்கள மட்டும் ஏன் திட்டுறீங்க? மட்டமா புக் போடுறவன், அதிக விலைக்கு விக்குறவன்,மட்டமா புக் எழுதுறவன், நீலகண்டன், சாரு ன்னு எல்லாரையும் சேர்த்து திட்டும்மையா.. பதிப்பளார்ன்னா இலக்கிய சேவை மட்டும் தான் புரியணும், பணம் முக்கியம் இல்லேன்னா – ராயல்டி கேக்குற எல்லாரையும் திட்டு!

  //எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால்//

  இந்துத்வா புத்தங்களை மட்டும் தான் விற்பேன்ன்னு சொல்லலையே.. எது விக்குமோ அத பதிப்பேன்ன்னு தான் சொல்லிருக்கார்! அது அவர் தவறா, வாசகர்களின் தப்பல்லவா?

 11. கீழைக்காற்று நம்பருக்கு ஃபோன் போட்டாலும் லம்பு லம்பா ரஷ்யாவிலிருந்து இருக்குமதியாகுதாமே…

  • நடுத்தர பார்பு,
   அது என்ன ரசியாவுலேருந்து இருக்குமதி?
   உளரலாம் அதுக்காவ இப்படியா?

 12. நிலவும் பிற்போக்குத்தன்மான சமூகம் உருவாக்குகிற பாப்கார்ன் தலைமுறைக்கு ஏற்ற வெளியீட்டகமாக கிழக்கு பதிப்பகம் பொருந்துகிறது.

  அருமையான‌ கார்ட்டூன். கார்ட்டூனிஸ்டிற்கு வாழ்த்துக்கள்.

 13. அது போகட்டுமையா அந்த என்.எச்.எம் எழுதி இருக்கில்ல அந்த மென்பொருளிலேயே தட்டச்சு செய்யும் எழுத்துக்களை அப்படியே சேமித்து கிழக்குப் பதிப்பகத்துக்கு அனுப்புமாமே! வாழ்க என்.எச்.எம் எழுதி.

  அதனால விவரம் அறிஞ்ச சிலர் அந்த மென்பொருள பயன்படுத்திறது இல்லையாமே
  உண்மையா?

  அதனால வேறு ஒரு தமிழ் எழுதி மென்பொருள் ” சோர்சு கோடு” வெளிப்படையா வெளியிட்டு அப்படி நாங்க செய்யில வேணுன்னா பாத்துக்குங்க என்று சொன்னதாக கேள்வி உங்களுக்கு இந்த செய்தி தெரியுமோ!!.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க