கடந்த 5 ஆண்டுகளாக பல தரப்பில் இருந்தும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கேள்வி, மோடி மோசமானவர் என்றால் எப்படி அவர் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது?
மோடி ஆதரவாளர்கள் இதை நக்கலாகவும், எதிர் தரப்பில் இருப்பவர்கள் குழப்பத்திலும் கேட்கிறார்கள். காரணமே இல்லாமலா ஒருவரை இத்தனை பேர் ஆதரிப்பார்களா எனும் குழப்பம் ஏனையோருக்கு இருக்கிறது.
எல்லாவற்றையும் கடந்து மோடி / பாஜக ஆதரவு கும்பலை பகுதி வாரியாக பிரித்து அதன் பின்னணியை புரிந்து கொள்வது நமக்கு அவசியமாகிறது. இல்லாவிட்டால் இந்த கும்பலை அம்பலப்படுத்துவது பெரும் சிரமமளிப்பதாக இருக்கும். மேலோட்டமான பார்வையில்கூட மோடி / பாஜக ஆதரவு நிலைப்பாடு என்பது பல வகையினரால் பல்வேறு நோக்கங்களுக்காக எடுக்கப்படுகிறது என்பது புரியும்.
முதல் வகையினர் ஆல் பர்ப்பஸ் பார்ப்பனர்கள் !
பார்ப்பனர்கள் பாஜக உறவு என்பது தந்தைக்கும் மகனுக்குமான உறவு. நான்கு வயது ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்தின் அப்பா ஏன் குற்றவாளி என தெரிந்தே தன் மகனை ஜாமீனில் எடுத்தார்? ஆண்டாளுக்காக கொதித்த மயிலை ஆன்மாக்கள் அவர்கள் ஜாதியில் பிறந்த நித்யஸ்ரீ மகாதேவனை சங்கப் பரிவார காலிகள் ட்ரால் செய்தபோது ஏன் அமைதியாக இருந்தார்கள்?
காரணம் மிக எளியது, பாஜக அவர்கள் பிள்ளை. அது பொறுக்கியோ தறுதலையோ எதுவானாலும் பிரச்சினையில்லை. பிரச்சினைகளில் இருந்து தப்பிச் செல்லும் இயல்புடைய பார்ப்பனர்கள்கூட அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்றாலும் பாஜகவை தாங்கிப் பிடிப்பது இதனால்தான். அவர்கள் பிள்ளையை அவர்களால் ஒருபோதும் விட்டுத்தர இயலாது.
குஜராத் கலவரம் தொடங்கி போனவாரம் தாக்கப்பட்ட முஸ்லீம் முதியவர் வரை எல்லா பிரச்சினைகளை எழுப்பினாலும் அவர்கள் அதெல்லாம் தவறுதான் என பெயரளவுக்குகூட ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
இந்தியாவில் இருக்கும் பல கட்சிகளின் அரசியல் அதிகாரம் மெல்ல மெல்ல இடை சாதி மக்கள் கைகளுக்குச் சென்றுவிட்டது. பார்ப்பன அதிகாரத்தை வெறித்தனமாக காப்பது பாஜக மட்டுமே. இப்போதும் உயரதிகாரிகள் லாபி அனேகமாக அவர்கள் வசம்தான் இருக்கிறது (நீங்கள் பாஜகவை குறை சொன்னால்கூட சகித்துக் கொள்வார்கள், ஆனால் அதிகாரிகள் வர்க்கத்தை குறை சொன்னால் உங்களை வார்த்தைகளாலேயே சம்ஹாரம் செய்து விடுவார்கள், சந்தேகம் இருந்தால் வெங்கடேஷ், பத்ரி வகையறாக்கள் பங்கேற்ற விவாதத்தில் தேர்தல் கமிஷன், நீதிமன்றங்களை விமர்சனம் செய்யப்பட்டபோது என்ன நடந்தது என்று தேடிப் பாருங்கள்).
படிக்க:
♦ மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
தங்கள் அரசியல் அதிகாரத்தை காத்துக் கொள்ள இருக்கும் கடைசி வாய்ப்பு பாஜகதான். அதனால்தான் தங்கள் நம்பகத்தன்மை போனாலும் பரவாயில்லை என முடிவெடுத்து நடுநிலை வேடமிடும் பார்ப்பனர்கள்கூட பாஜகவுக்காக வேலை செய்கிறார்கள். பத்ரி தன்னை ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ள அதிகம் மெனக்கெடுபவர், அவர் எந்தெந்த விசயங்களில் மவுனமாக இருக்கிறார் என்று பாருங்கள். காரணம்கூட சொல்லாமல் நான் பாஜகவுக்கு ஓட்டு போடப் போகிறேன் என்று என்று ஏன் சொல்கிறார் என யோசியுங்கள்.
ஒயிட் ஸ்கின் சைக்கோக்களை நகலெடுக்கும் ஒயிட்போர்டு சைக்கோக்கள்.
திராவிட இயக்க எழுச்சிக்குப் பிறகு பெருமளவில் உருவான நியோ மிடில் கிளாசின் (புதிய நடுத்தர வர்க்கம்) ஒரு பகுதிக்கு எப்படியாவது தாமும் ஒரு பார்ப்பனராகிவிடும் வெறி இருந்தது. துக்ளக் வாங்குவது, பார்ப்பன தெய்வங்களை சுவீகரித்துக் கொள்வது என்பதில் தொடங்கி அய்யருங்க என்ன பாவம் பண்ணினாங்க என அக்ரஹாரத்தை தடவிக் கொடுப்பதுவரை அவர்கள் செயல்பாடுகள் யாவும் பார்ப்பன அங்கீகாரத்தை யாசிப்பதையே பெருமிதமாகக் கொண்டிருந்தன.
இந்த வகைமாதிரியின் ஒரு புளுக்கைதான் ஒயிட்போர்டு சைக்கோ மாரிதாஸ். இப்படி வீதிக்கு இரண்டு ஒயிட்போர்டு சைக்கோக்கள் உலவுகின்றன, வாட்சாப்பிலோ குழுவுக்கு நான்கு திரிகின்றன. தடவிக் கொடுத்தால் குரைக்கும் நாயாக இவர்களை பார்ப்பனியம் பயன்படுத்துகிறது.
அய்யரே தடவிக்கொடுக்குறாரே என இவர்கள் பரவசம் கொள்வதால் “அவன் உன்னை நாயாக நடத்துகிறானே” எனும் நமது ஓலம் அவர்களுக்கு கேட்பதே இல்லை. இப்படிப்பட்ட பார்ப்பன-நாடார், பார்ப்பன-தேவர், பார்ப்பன-கவுண்டர் தொடங்கி பார்ப்பன-தலித் வரை எல்லா உப பிரிவுகளும் காணக் கிடைக்கின்றன. இவர்களுக்கு தேவையெல்லாம் பார்ப்பன அங்கீகாரம் மட்டுமே.
போட்டியை வெறுக்கும் இன்னொரு மத்தியதர பிரிவு !
இன்னொரு பிரிவுக்கு பார்ப்பன அங்கீகாரம் பிரதானம் அல்ல. ஆனால் அவர்களுக்கு எல்லா வாழ்வியல் வசதிகளும் இருக்கும். அதற்கு இணையாக மற்றவர்கள் வருவதை இவர்கள் விரும்புவதில்லை.
நான் கஷ்டப்பட்டு படிப்பதை நீ ஓசியில் படிப்பாயா என்பது போன்ற ஒப்பீடுகள் இவர்களை செலுத்தும். சமச்சீர் கல்வி அறிமுகமான போது உன் பிள்ளையும் என் பிள்ளையும் ஒன்னா என இவர்கள் வெளிப்படுத்திய அசூயைதான் இவர்களது நிஜ முகம்.
இடஒதுக்கீடு, இலவச திட்டங்கள், உதவித்தொகை என ஏழைகளுக்கு பயன்படும் எல்லாமே இவர்களது பொறாமைத்தீயில் பெட்ரோல் ஊற்றுகிறது. “அவா அவா… அவா அவா இடத்துலதான் இருக்கனும்…” எனும் பாஜகவின் சித்தாந்தம் இவர்களுக்கு ஒரு ஆறுதலைக் கொடுக்கிறது. அதனை மறைத்துக் கொள்ள இலவசம் ஒருத்தனை சோம்பேறியாக்கிடும் எனும் மந்திரத்தை இவர்கள் அடிக்கடி உச்சாடானம் செய்வார்கள்.
வளர்ச்சிக்காக பாஜக-வை ஆதரிக்கிறேன் என்பார்கள் வேற எந்த கட்சிதான் கொலை செய்யல என சமாதானம் பேசுவார்கள். அப்பட்டமான சுயநலம் பச்சையான பொறாமை இவைதான் இவர்களை பாஜகவுக்கு நெருக்கமாக கொண்டு போய் நிறுத்துகிறது. இவர்களுக்கு பாஜகவின் கொலைகளோ சுரண்டலோ ஒரு பொருட்டே அல்ல, ஆனால் ஏழைகள் மீதான இவர்களது அசூயைக்கு பாஜக தீனிபோடுவதால் அதற்கு கைமாறாக பாஜகவுக்கு இவர்கள் முட்டுக் கொடுப்பார்கள்.
பேராசைக்கார மிடில் கிளாஸ் !
நவ மத்தியதர வர்கத்தின் பெரும்பான்மைப் பிரிவுக்கு உள்ள பெரிய பலவீனம் பேராசை. ஏதோ ஒரு வகையில் நமக்கு அதிருஷ்டம் அடிக்காதா எனும் ஏக்கம் இவர்களுக்கு உண்டு. புதிய கடவுள்கள், சாமியார்களை நோக்கி ஓடுவது, உங்களுக்கு ஆன்லைன் லாட்டரி விழுந்திருக்கிறது என்றால் கண்ணை மூடிக் கொண்டு நம்புவது இப்படியான சேட்டைகளை பெருமளவுக்கு செய்வது இந்த வர்க்கமே.
மோடியின் மதவாத முகம் நம்மை ஒன்றும் செய்து விடாது எனும் அபார நம்பிக்கை இவர்களிடம் இருந்தது. பெரும் பணக்காரர்கள் பாஜகவை ஆதரிப்பதில் அவர்களுக்கு ஒரு பொருளாதார நலன் இருக்கிறது. ஒரு இரக்கமற்ற அடியாளைப் போல அவர்களால் பெரும் கோடீஸ்வரர்களுக்கு சேவை செய்ய இயலும்…
ஆனால் இந்த மிடில் கிளாஸ் தமது அல்ப அரிப்புகளுக்காக பாஜகவை ஆதரிக்கிறது. பாஜக நமக்கு விசுவாசமான நாய் போல இருக்கும் எனும் நம்பிக்கை இந்த வர்க்கத்தவர் பலருக்கும் 2014-ல் இருந்தது. ஆனால் காலம் இன்று அவர்களை பாஜகவின் நாயாக மாற்றியிருக்கிறது. யார் நாசமாய் போனால் என்ன மோடி வந்தால் நாடு குஜராத்தைப்போல தொழில் வளர்ச்சியை சந்திக்கும், அதனால் நம் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கண்மூடித்தனமாக நம்பியவர்கள் இவர்கள். இன்பத்தை அள்ளித்தரும் சின்னவீடாக பாஜகவை அன்று கருதினார்கள்.
இப்போது அதே சின்னவீடு மேற்கொண்டு சுரண்டாமல் இருந்தால் சரி எனும் நிலைக்கு அதில் பலரும் வந்திருக்கிறார்கள். இந்த வகை மிடில் கிளாஸ் மட்டும்தான் மோடி நம் முகத்தில் பீயை அப்பிவிட்டார் என உணர்ந்து கொண்டிருக்கிறது. ஏனைய வகையினர் எல்லோரும் அது பீயல்ல பிரசாதம்தான் என வெறித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வர்க்கம்தான் நமது வாக்கு வங்கி என்பதை தெளிவாக அறிந்ததால்தான் மோடி தனது கோவை கூட்டத்தில் மிடில்கிளாசை இலக்கு வைத்து பேசினார். மேலும் ராகுலின் வாக்குறுதியை மறைமுகமாக சொல்லி (ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய் கொடுக்கும் திட்டம்) அது உங்கள் (மிடில் கிளாஸ்) வரிச்சுமையை கூட்டும் என பயமுறுத்தினார்.
வெறும் மத்தியதர வர்க்கம் மட்டும் பாஜகவை தாங்கிப் பிடிக்கும் காரணியல்ல. பார்ப்பனர்கள் எப்படி மத்தியதர வர்க்கத்தின் மாடலாக இருக்கிறார்களோ அவ்வாறே ஏழைகள் மத்தியதர வர்க்கத்தை தமது மாடலாக கருதுகிறார்கள். ஆகவே இவர்கள் சரியென நம்பும் அரசியல் கருத்துக்களை அவர்களும் நம்பி விடுகிறார்கள். இவையெல்லாம் பாஜகவை வெளியில் இருந்து ஆதரிக்கும் கூட்டம். ஆனால் பாஜவுக்காக களமாடும் சக்திகள் எங்கிருந்து முளைக்கின்றன?
பலவீனமான சுயமரியாதை கொண்ட அடையாமின்றி அல்லாடும் இளைஞர்/மாணவர்களே பாஜகவின் இலக்கு.
இன்றைய நிலையில் சிறார்களிடம் அதிகம் வேலை பார்ப்பது பாஜக கும்பல்தான். யோகா, மோட்டிவேஷன் வகுப்புக்கள் போன்ற பல லேபிள்களோடு பள்ளிகளை மென் இந்துத்துவ கும்பல்கள் அணுகுகின்றன. யோகா பயிற்சிகள் ஊடாக இந்து மத பெருமிதங்கள் இந்திய பெருமிதங்களாக கற்பிக்கப்படும். இந்தியா இதுவரை எந்த நாட்டின் மீதும் போர் தொடுத்ததில்லை, நவீன கண்டுபிடிப்புக்கள் எல்லாமே வேதத்தில் இருக்கிறது போன்ற எண்ணற்ற பிளா.. பிளாக்கள்… கொட்டப்படும்.
பல பேராசிரியர்களே இந்துத்துவ விஷமத்துடன் பேசியதை பார்த்திருக்கிறேன். சிறார்கள் கிரிக்கெட்டுக்கு ரசிகனானதைப்போல தம்மையறியாமல் இந்த பெருமிதத்துக்கு ரசிகனாகிறார்கள். பிறகு வெளியே உலவும் மிதமான கொடூர கும்பல் இந்து மதம் ஆபத்தில் இருப்பதாக பிரச்சாரம் செய்யும்.
தனியார் பள்ளிகளில் இத்தகைய பிரச்சாரம் மூலம் பாஜகவுக்கு நிதியளிக்கும் கும்பலையும் இணையப் போராளிகளையும் உருவாக்குகிறார்கள். களப் பணியாளர்களை (அதாவது கலவரம் செய்வோரை) உருவாக்க கோயில் திருவிழாக்கள் ஊடுருவி ஆள் பிடிப்பது, பிள்ளையார் ஊர்வலம் மூலம் ஆள்பிடிப்பது ஆகியவற்றை செய்வார்கள். இவற்றின் இலக்கு ஏழை குழந்தைகள்தான். ஏழைப் பெற்றோர்கள் வெள்ளேந்தியாக சாமி காரியம் என அதற்கு அனுப்பி வைப்பார்கள். நான் பார்த்தவரை எந்த மிடில்கிளாஸ் பிள்ளையும் விநாயகன் ஊர்வலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதில்லை. அங்கே மதவெறி மட்டுமல்ல சரக்கும் அறிமுகமாகிறது.
இதில் அதிகம் சிக்குவது தனிப்பட்ட எந்த அடையாளமும் இல்லாத (உதாரணம் : கல்வியில் சிறப்பாக இருக்கிறேன் என்றோ விளையாட்டில் சிறப்பானவன் என்றோ சொல்லிக் கொள்ள முடியாத ) மாணவர்களும் இளைஞர்களும்தான். அவர்களுக்கு ஒரு இந்துத்துவ போராளி எனும் அடையாளம் ஒரு நிறைவை கொடுக்கிறது. கோயில் விழா பேனர்களிலோ அல்லது சாதிச்சங்க பொறுப்பிலோ உட்கார வைக்கும்போது உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. கள்ளர், கவுண்டர், வன்னியர் போன்ற சாதிச்சங்களில் இந்த கும்பலின் ஊடுருவல் மிகத்தீவிரமாக இருக்கிறது. ஏனைய சாதிகளிலும் இருக்கலாம், எனக்கு நேரடியாக தென்படவில்லை. இப்படி பரவசமூட்டப்பட்ட அடையாளச் சிக்கல் கொண்ட மாணவர்கள்/ இளைஞர்கள் அந்த பரவசத்தை பெறும் பொருட்டு மேலும் மேலும் இந்துத்துவச் சார்பையும் பிற மத வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால் பார்ப்பன சாந்த சொரூப பாஜக ஆதரவாளரைவிட இவர்களுக்கு விஷம் கம்மிதான். சாதிவெறி, இஸ்லாமிய வெறுப்பை வேறு வழிகளில் கற்றுக் கொண்டவர்களும் இந்த கும்பல்களில் வந்து ஐக்கியமாகிறார்கள். இதற்கான பயிற்சி சிலருக்கு வீடுகளில் கிடைக்கிறது வேறு சிலருக்கு அவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிறரால் கிடைக்கிறது. பிற மத வெறுப்பு கொண்ட ஆசிரியர்கள் எனக்கும் வாய்த்திருக்கிறார்கள். (குறிப்பு : உங்கள் பிள்ளை ஏதேனும் வித்யாலயாவில் படித்துக் கொண்டிருந்தால், இல்லை யோகா கற்பதாக சொன்னால் அவர்களை தொடர்ந்து கண்காணியுங்கள். விநாயகர் சதுர்தி பஜனைகளில் பங்கேற்றால் சந்தேகமே வேண்டாம் நோய் தொற்றிவிட்டது என்று பொருள்.)
தமிழகத்தில் இந்துத்துவ இன்ஃபெக்ஷன் பல்வேறு வகை மாதிரிகளில் பல்வேறு அளவுகளில் ஊடுருவியிருக்கிறது. அதில் மிக அபாயகரமான ஊடுருவல் இப்படி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நிகழ்வதுதான்.
இதனை எதிர்கொள்ள நாம் என்ன செய்யலாம்?
மேற்சொன்ன பிரிவினரில் அனேகமானவர்களை நீங்கள் மாற்ற இயலாது. இவர்களால் மூளைச்சலவை செய்யப்படும் ஆட்களை காப்பாற்ற இயலும். இப்போது இந்துத்துவ கும்பலின் களம் ஃபேஸ்புக் அல்ல. அவர்கள் ஜாகை முழுக்க வாட்சப்தான். காலை எழுந்ததுமே கருணாநிதியை திட்டியும் இந்துமதம் அபாயத்தில் இருப்பதாகவுமான செய்திகளை நீங்கள் எல்லா குழுக்களிலும் காண இயலும்.
படிக்க:
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”
♦ மோடியின் உத்தமர் வேடம் கலைந்தது !
இத்தகைய வீடியோக்கள் சிறார்களது வாட்சப் குழுக்களிலும் காண முடிகிறது. இவர்களோடு விவாதிக்க அவசியமில்லை, ஆனால் அதே குழுக்களில் பாஜகவை அம்பலப்படுத்தும் பதிவுகளை பகிருங்கள். எளிய வாக்கியங்களில் சுருக்கமாக எழுதப்பட்டால் இன்னும் சிறப்பு.
சாத்தியமுள்ளவர்கள் 3 அல்லது 4 நிமிட வீடியோக்களில் அதனை செய்யுங்கள். அல்லது அப்படி செய்ய வாய்ப்புள்ளவர்களை செய்யும்படி கேளுங்கள். பொதுப்படையான கருத்துக்களைவிட ஒவ்வொரு பிரிவு மக்களையும் அவர்கள் எப்படி வஞ்சிக்கிறார்கள் என விளக்கலாம். இது பொதுப்படையான கருத்துக்களைவிட வலுவானது. குழுவாக நடக்கும் விவாதங்களில் நாகரீகம் கருதி ஒதுங்காதீர்கள். அழுத்தமாக நேரடியாக உங்கள் தரப்பை சொல்லுங்கள். பார்த்துக் கொண்டிருக்கும் விவரம் அறியாத ஒருவனை அவர்கள் மதத் தீவிரவாதியாக்குவதைவிட நமக்கு ஒரு சங்கி நண்பனின் இழப்பு ஒன்றும் பெரிதல்ல (வழக்கமாக இத்தகைய விவாதங்களில் ஒரு மூத்த மாமா, விவாதத்தில் வெல்பவன் நண்பனை இழப்பான் என அறிவுரை சொல்வார். நிச்சயம் அது சங்கிகள் பலவீனமடையும் தருணத்தில் வெளிப்படும். ஷெத்த மூடுங்க என அப்போது நாகரீகமாக சொல்லலாம், தோஷமில்லை).
பெண்களை மட்டமாக கருதுபவர்கள் சங்கிகள் என்பதால் அவர்களிடம் இந்த நச்சுப் பிரச்சாரம் இன்னமும் முழுமையாக சென்று சேரவில்லை. ஆகவே குடும்பம் அலுவலகம் என வாய்ப்புள்ள இடங்களில் பெண்களிடம் பாஜகவின் நிஜ முகத்தை அம்பலப்படுத்துங்கள். குஜராத் கலவரம் முதல் பசு குண்டர்களின் கொலைகள் வரை எல்லாவற்றையும் பேசுங்கள். தெரிந்தவர்கள், உறவினர்களின் பிள்ளைகள் யாரேனும் பிள்ளையார் பொறுக்கிகளோடு சகவாசம் வைத்திருந்தால் அதன் கொடூரமான பின்விளைவுகளை பெற்றோரிடம் விளக்குங்கள்.
உங்கள் பிள்ளைகளை மதச்சார்பற்றவர்களாக வளர்ப்பதைவிட முக்கியம் அவர்கள் அதனை துணிவோடு பேசுபவர்களாக வளர்ப்பது. அவர்கள் பள்ளிகளில் நண்பர்களோடு உரையாடட்டும். வாய்ப்பிருந்தால் சிறார்களுக்கு அவர்களை வெளிப்படுத்தும் மாற்று வாய்ப்புக்களை உருவாக்க முயலுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை அடிப்படைவாதத்தின் எதிரி என்று வெளிப்படையாக அடையாளப்படுத்துங்கள். வெளியே பலரும் அப்படியான முன்மாதிரி நபருக்காக காத்திருக்கிறார்கள். இதன் மூலம் அப்படியான பல ஆட்களை நம்மால் செயல்பாட்டுக்கு கொண்டுவர இயலும்.
பாஜக எதிர்ப்பு என்பது வெறுமனே தேர்தலோடு முடிந்துபோகும் விசயமல்ல. அது தேர்தலால் வீழ்த்தக்கூடிய கிரிமினல் கும்பலும் அல்ல. இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டிய வேலை அது. கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக தமிழகத்தில் மோடி சித்தாந்தரீதியாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக மிக தீவிரமாக அது நடந்தது. அதன் விளைவுதான் கோ பேக் மோடி எனும் வீச்சான எதிர் நடவடிக்கையாக இன்று மாறியிருக்கிறது. அதுதான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மோடியை எதிர்ப்பதற்கான உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.
பாஜக – ஆர்.எஸ்.எஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதுதான் இந்திய குழந்தைகளுக்கு நம்மால் கொடுக்க முடிகிற மிகப்பெரிய பரிசு. அதனை உருவாக்க உழைப்பது என்பது வெறும் சித்தாந்தம் அல்ல அடுத்த தலைமுறைக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை.
வில்லவன் இராமதாஸ்
மலம் என எழுதக் கூடாதா?. உளவியல் அனுகுமுறை உங்களுக்கு தெரியாததா?
தட்டச்சு பிழைகளை சரி செய்யவும்.
கீற்றில் மகஇக தோழர்களுக்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரைக்கு விளக்கம் தருவீர்களா?
தட்டச்சு பிழைகள் சரி செய்யப்பட்டது. தவறுகளுக்கு வருந்துகிறோம். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
வினவு செயலி offline லும் மக்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கவும்.
கட்டுரைக்கு கீழ் இருக்கும் மறுமொழிகள் option ஐ கட்டுரைக்கு உடனடி கீழே வைக்கவும். தேட வேண்டியிருக்கிறது.
மாரிதாஸ் போன்றவர்களை எப்படி அணுகுவது.அதை நம்பும் இளைஞர்கள் தான் இதன் மீது அதிக பற்று உள்ளவராகவும் இருக்கிறார்கள்..
உங்களை போன்ற தேசவிரோதிகள் மக்கள் விரோதிகளை பார்த்த பிறகு தான் என்னை போன்றவர்கள் பிஜேபிக்கு ஆதரவாக மாறினோம், அதற்கு முன்பு RSS அமைப்பு பற்றி கூட ஒன்றும் தெரியாமல் இருந்த என்னை உங்களின் பொய்களை அவதூறுகள் ஹிந்து விரோதம் தேசவிரோதம் முற்றிலும் மாற்றி விட்டது.
உங்களின் ஹிந்து விரோத, மக்கள் விரோத, தேசவிரோத செயல்களை இன்னும் வெளிப்படையாக செய்யுங்கள் அப்போது தான் இன்னும் பல ஆயிரம் பேர் பிஜேபிக்கு ஆதரவாக மாறுவார்கள்.
திரும்ப திரும்ப எத்தனை காலத்துக்கு தான் பார்பணர் ஆர்.எஸ்.எஸ் என்று எழுதுவீர்களோ தெரியவில்லை. ஆனால் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி நிறைய செய்துள்ளார். அவரால் முழுவதுமாக மாற்ற முடியவில்லை என்றாலும் தீர்க்கமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆகவே நீங்கள் என்ன தான் எழுதினாலும் இங்கிருக்கிற ஊழல் கட்டப்பஞ்சாயத்து நில அபகரிப்பு போன்ற கழக கண்மணிகளுக்கு மோடி எவ்வளவோ மேல்.
திக மற்றும் திமுக இந்து விரோத கட்சிகள் என்பது இப்போது தெள்ள தெளிவாக தெரிந்து விட்டது. இது ஒன்றே போதும் மோடி ஆதரவாளராக மாற
மாரிதாஸ் தான் சொல்வதையெல்லாம் நம்ப தேவையில்லை. இந்திய அரசாங்க அறிக்கைகளையும் நம்ப வேண்டாம். நீங்களே தேடி உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்பதை வெளிப்படையாகவே தன்னுடைய வீடியோவில் கூறியுள்ளார். மீம்ஸ் மற்றும் FB போஸ்ட்க்ளை நம்பாமல் நாமே தேடி தெளிவதே சிறந்தது
நன்றி