privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅரசியல் பாடசாலை - ஓவியா, செல்வம்

அரசியல் பாடசாலை – ஓவியா, செல்வம்

-

என் பார்வையில் வினவு – 35 : ஓவியா

2009 – ஈழம்; முத்துக்குமார் தீக்குளிப்பு; சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டங்கள்; உயர்நீதிமன்ற வக்கீல்கள் மீதான காட்டுமிராண்டித்தமான அரச வன்முறை; ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மூன்றாம் அணிகளின் துரோகம்; வீண் வாத தமிழ் தேசியம்; கடைசியாக, மனிதம் தோற்றதின் இன்னொரு வடிவமாய் ஈழம்…

டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை
டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை

என்னுடைய இயலாமை; சுயநலம்; சந்தர்ப்பவாதம்; அருவருப்பு; முதல் முதலாய் பெரிதாய் தோற்று போனேன். எனது தோல்வியை என் கண்முன்னே கணிப்பொறியில் காட்டி நின்றது…வினவு. அந்த 6 மாதங்களில் வினவு கண்ட வளர்ச்சியோடு… என்னை எனக்கு கண்டெடுத்து தந்ததிலும் வளர்ச்சி அடைந்திருந்தது.

வினவு – ஓராண்டு நிறைவு” கட்டுரையில் வாசகரின் ஒவ்வொரு மறுமொழிக்கும்… உடனுக்குடன், வினவு தோழர்கள் பதிலளித்து வந்தார்கள்., என் மறுமொழிக்கு உற்சாகமூட்டும் பதில் அளித்தார்கள்.

வினவும் ம க இ க வின் ஆர்ப்பாட்டங்களும் சமூகம், அரசியல் பற்றிய , அன்று வரை காணக்கிடைக்காத புது கோணங்களாக அமைந்தன.

சோனியா Go Back” போன்ற ஆர்ப்பாட்டங்கள், “டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை” என போராட்ட குணங்கள் வெளிச்சத்திற்கு வருவதை காண முடிந்தது. பார்ப்பனீயத்திற்கு எதிராக புரட்சிகர அமைப்பு போராடி வென்ற “தில்லை ” செய்திகளும் முன்னேற்ற பாதையை காட்டி சென்றது.

2010″முத்துக்குமார் மன்னித்துவிடு! சந்தர்ப்பவாதிகளிடம் தோற்று போனோம்” கட்டுரை சுயவிமர்சனமாகவும் அரசியல் விமர்சனமாகவும் படிப்பினையாகவும் அமைந்தது. மாற்றத்திற்கான அடுத்த கட்டத்தை வலியுறுத்தி நின்றது.

அவ்வப்போது மாறிய வினவின் வடிவமைப்பு ஆதராளர்களின் பெருகிய எண்ணிக்கையை பறைசாற்றியது.

மார்ச் – 8 “மகளிர் தின சிறப்பு கட்டுரைகள்” பெண் வாசகராக இருந்த எனக்கு பெரிய வரம். ஒவ்வொரு கட்டுரையும் தனித்தனியே சிறப்பு வாய்ந்தவை. உள்ளுக்குள் ஊறியிருந்த பிற்போக்குத்தனத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் உரித்து வெளியில் எடுத்தது.

அதிலும் தோழர். துரை சண்முகம் கவிதை “வரலாற்றை படித்து வர்க்கமாய் எழு தோழி” மீண்டும் மீண்டும் படித்து வரலாற்றை கிளர தூண்டியது. பெண்ணென்பதால் நசுக்கப்பட்டு தோய்ந்து போகும் எந்த பெண்ணையும் போர்க்குணத்திற்கு இட்டு செல்லும் அர்த்தமுள்ள வரலாற்று பக்கங்கள் அவை.

அந்த கட்டுரைகள், எனக்குள் இருந்த எழுத்துக்களையும் வெளிக்கொணர சூழல் அமையும் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. என்றேனும் என் கட்டுரை வினவில் வெளியாக வேண்டும் என்ற கனவையும் தந்தது.சில மாதங்கள் வினவு படிக்க இயலவில்லை.

2011

தமிழக தேர்தல் பற்றிய துல்லிமான அரசியல் ஆய்வு.. தேர்தல் புறக்கணிப்பு கட்டுரைகள் சிறப்பாக அமைந்தன. மே தினத்தன்று “ஒரு பறையும் பல விசில்களும்” கட்டுரை புரட்சிகர அமைப்பின் வீரியத்தை உலகிற்கு உணர்த்தியது.

“சமச்சீர் கல்விக்கான” போராட்டமும் , ” மூவர் தூக்கு ” எதிர்ப்பலையும் வினவு செய்தியாளர்களின் செய்தி பதிவுகள் உடனுக்குடன் வெளிவந்து செய்தி தந்தன.

“ஈழம் : போர் இன்னும் முடியவில்லை” , சீமான், நெடுமாறன், வைகோ ஆகியோரின் பிழைப்புவாதம் துகிலுரிக்கும் கட்டுரைகள் , ஈழம் பற்றிய தமிழ்தேசிவாதிகளின். பொய்யுரைகளை வெளிச்சம் போட்டு காட்டியன.

“முல்லை பெரியாறு போராட்டம்” மற்றும் “கூடங்குளம் போராட்டம்” தமிழகத்தை குலுக்கிய காலத்திலும், உதயக்குமார் தலைமையில் அணுமின் நிலைய முற்றுகயின் போது அரசு நிகழ்த்திய வன்முறையையும் உடனுக்குடன் வினவு செய்தியாளர்கள் பதிவு செய்தார்கள்.

அமெரிக்காவின் தனித்தீர்மானத்தில் ஒளிந்திருக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் வினவால் அத்தனை அறிவுபூர்வமாக விளக்கப்பட்டு இருந்தது.

“அறிவாளிகளின் அந்தரங்கத்தை” வினவு கட்டுரை பற்றிய விவாத்தில் புரிந்து கொள்ளலாம். எத்தனை பொருத்தமான “நல்லவர்” வேஷத்தையும் வினவு நார் நார் கிழித்து காட்டிவிடும். எடுத்தக்காட்டாக சிபிஎம், இலக்கியவாதிகளான ஜெயமோகன், சாரு, லீனா என்ற அறிவாளிகளை பட்டியலிடலாம்.

“ஆம். ஆள் பிடிப்பது தான் எங்கள் வேலை” என்று பகிரங்கமாக எதிர்கொள்ள வினவால் மட்டுமே முடியும். வினவு கட்டுரை படிப்பதாலோ, சமூக வலைத்தளங்களில் பகிர்வதாலோ ஏற்படும் விளைவுகளை அழுத்தமாய் சொல்லும் உறுதி…. வாசகரின் மன உறுதியையும் அதிகப்படுத்துகின்றது

இதில் நூல் அறிமுகங்கள், உலக திரைப்படங்கள், கம்யூனிஸ தத்துவங்கள் மிக பயனுள்ளதாக இருந்தன. ஆனால் போதுமானதாக இல்லை. வாழ்க்கையை , வரலாறை புரிந்து கொள்ள இலக்கியங்களும் நமக்கு தேவைப் படுகின்றன. இந்த வகையில் வினவின் உதவி எங்களுக்கு இன்னும் அதிகமாக தேவைப் படுகின்றது. கம்யூனிஸ ஆதரவாளர்கள் மட்டுமே வினவு படிக்கின்றார்கள் என்று முடிவு செய்தால்.. அது சரியான ஆய்வல்ல. கம்யூனிஸ பூதத்தை. பார்த்து அலறும். சாமானியராலும் முதலாளிகளையும் வினவு வெகுவாய் படிக்கப்படுகின்றது.

ஏகாதிபத்தியம் ஒவ்வொருவரையும் போராட வீதிக்கு அழைத்து வருகின்றது. அரசியல் சொல்லி அறிவூட்டும் களஞ்சியமாய் வினவு திகழ்கின்றது. எங்கோ எப்போ விதைக்கப்பட்ட விதை இங்கு வினவாக உருவெடுத்து உள்ளது. இங்கே இப்போது விதக்கப்படும் “வினவு” எங்கோ எதுவாகவோ வளர்ந்து , ஏகாதிபத்தின் குரல்வளையை நெறிக்கும்.

உயிர் துவங்கி , பிழைப்புக்காக தேடலை முடித்துக் கொள்ளாதவர்களின் அறிவு பெட்டகம், வினவு.

போராட்ட குணத்தோடு அறிவும் அறிவோடுபோராட்ட குணமும் இணையட்டும்.

வினவு வளர்க! புரட்சி ஓங்குக!

– ஓவியா

என் பார்வையில் வினவு – 36 : செல்வம்

வினவு தோழர்களுக்கு வணக்கம். முதலில் நான் மாணவன் என்பதையும் பின்பு வினவு தளம் எனக்கு 2011 ஆம் ஆண்டு என் அண்ணன் மூலம் அறிமுகமானது என கூறிக்கொள்கிறேன். நான் முதன் முதலில் வினவில் படித்த கட்டுரை “சாமியே அய்யப்பா மகர ஜோதி பொய்யப்பா” எனும் கட்டுரை. இந்த கட்டுரை என்னை முதன் முதலாக கடவுள் இருப்பை சந்தேகிக்க வைத்த கட்டுரை. மேலும் அது சபரிமலை சீசன், என் வகுப்பில் ஒரு கேரள நண்பரிடம் வாதம் செய்து அவரையும் புரிய வைக்க உதவியாக இருந்த கட்டுரை இது. இந்த வாக்குவாதம் என் வகுப்பில் நல்ல மாற்றத்தை தந்தது. வினவில் வரும் முக்கிய கட்டுரைகளை என் நண்பர்களிடம் கொடுத்து படிக்க வைத்து உணவு இடைவெளியில் விவாதம் செய்வோம். அதில் “சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையும் சுயமரியாதை பறிபோன மாணவ்ர்களும்” பிரபலமானது.

பல சமயங்களில் தனிப்பட்ட நண்பர்களிடம் பகிர்வது மட்டுமல்லாது “செமினார்”(Seminar) போன்ற நேரங்களிலும் வினவு எனக்கு உதவியுள்ளது. நான் சுற்றுசூழல் பற்றி படிக்கும் மாணவன் ஆதலால் வினவில் சில கட்டுரைகள் உதவியாக இருந்துள்ளது. குறிப்பாக,“கோபன் ஹேகன் தட்பவெப்ப நிலை மாநாடு:பூவுலகின் எதிரிக்கு முதன்மை வெற்றி”, “டர்பன் மாநாடு ஆடுகள் மீது பழி போடும் ஓநாய்கள்” போன்றவை முக்கியமானது.

மேலும் விவசாய மாசுபாடு பேசும் போது விவசாயிகளின் தற்கொலை விவசாயத்தை ஒழித்துக் கட்ட அரசு மேற்கொள்ளுதல், பசுமை புரட்சி மறுமுகம் போன்றவற்றை பற்றி பேச வினவு உதவியுள்ளது.

பின்பு செமினார் எடுக்கும் போதெல்லாம் தொழிற்நுட்பாக பேச தரவு தயாரிப்பதோடு வினவில் இதை பற்றி ஏதாவது கூறியுள்ளனரா? எனவும் தேடுவது வழக்கமாகி விட்ட்டது.நான் தங்கியிருந்த அறையிலும் வினவை பற்றி பேசுவோம்.

ஈ மு கோழி வளர்ப்பு மோசடி எனும் கட்டுரை மோசடி பூதாகரமாக அம்பலமாகும் முன் வெளிவந்தது, அதை விவாதம் செய்தோம். வினவு கூற்றின் படி மோசடி நடந்தது, வினவு கருத்தின் உண்மையும் புரிந்தது.

பின் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டம் பொழுதும் ஈழம் பற்றிய வினவின் தொகுப்பு உதவியாக இருந்தது.

எனக்கு வினவில் சில மறக்க முடியாத கட்டுரை,கவிதை உள்ளது.

பிச்சை புகினும் கற்கை நன்றே

மார்ச் 23 தியாகிகளின் தினம்:நினைவுக்கு உயிர் கொடு” போன்றவையும் “அதோ அந்த மனிதர் போல வாழ வேண்டும்” எனும் கட்டுரை நேர்மையாக வாழ்வதின் உயர்வையையும் உணர்த்தியது.

பின் 6- 9 மாதங்கள் வினவு தொடர்ச்சியாக படித்ததின் விளைவாய் தோழர்களை சந்திக்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது. பின் அதுவும் வினவு தோழர்களால் பூர்த்தி செய்யபட்டது.

வினவிற்கு ஆலோசனைகள்:

  • தோழர்களின் முக்கிய பழைய உரைகளை பகிருங்கள்
  • தோழர் கலையரசன் மதி மாறன் போன்றோர் கட்டுரை பகிருங்கள்
  • குழந்தை, மாணவர்களுக்கு என கருத்தை பகிருங்கள்

இறுதியாக கல்லூரியிலும் சரி வெளியிலும் சரி சுற்றியுள்ள பிற்போக்கு, தமிழ் தேசிய வாதிகளிடம் வாதிட உதவியாக இருந்தது வினவுதான். மேலும் நடை முறை வாழ்க்கையிலும் தோழர்களுடன் இணைந்து செயல்பட உந்து சக்தியாக இருந்தது வினவு தளம் மற்றும் வினவு தள தோழர்கள் தான். என் கல்லூரி நாட்களில் வினவும் ஒரு ஆசானாகவே பயணித்துள்ளது. அந்த வகையில் வினவிற்கும், அதில் கட்டுரைகள் எழுதிய தோழர்களுக்கும் நன்றி. 6ஆம் ஆண்டு காணும் வினவு மென்மேலும் வளர , ஆழமான நற்கருத்துகளை பகிரவும் எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

– செல்வம், மதுரை