வேலையற்றோர் 90 இலட்சம் – நாக்கு வழிக்கவா தேர்தல் ?

21

தேர்தல் எனும் அபாயம் நெருங்கி வருகிறது இளைஞர்களே உஷார்…!

ன்பார்ந்த இளைஞர்களே,

பகத்சிங்நேற்று வரை நம்மை ஒரு மனுசனாக்கக்கூட மதிக்காத ஓட்டுக்கட்சியினர் இன்று வீடு தேடி வந்து ‘’ பார்த்து செய் தலைவா’’ என்று ஓட்டுப் பொறுக்க படையெடுத்து வருகிறார்கள். எமதருமை இளைஞனே, இவர்கள் வாசிக்கும் பேண்டு வாத்தியத்தில் குழம்பி ஓட்டுப் போட்டால் மாற்றம் வரும் என்று நினைக்காதே. சமூக மாற்றத்திற்காக சற்று மாத்தி யோசித்துப் பார்.

இன்று ஓட்டுக்கேட்டு வரும் ’யோக்கியவான்கள்’ நாட்டில் தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டிருக்கிறார்களா? ஆனால், இளைஞர்களைக் கவர வேலைவாய்ப்பு, வளர்ச்சி, முன்னேற்றம் என்று சினிமா பாணியில் பஞ்ச் டயலாக் அடிக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகிறது.

உழைக்கும் ஆற்றல் உள்ள இளைஞர்களை உலகிலேயே அதிகம் கொண்ட நாடு இந்தியாதான். மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 54 கோடி பேர் உழைக்கத் தகுதியான இளைஞர்கள். இதில் முறையான வேலையில் இருப்பவர்கள் வெறும் 8% பேர் தான். தமிழகத்திலோ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருப்போர் எண்ணிக்கை மட்டும் சுமார் 90 லட்சம். பதிவு செய்யாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் இருக்கும். ஆனால், முறையான வேலை கிடைக்கப்பெற்றவர்கள் 18 லட்சம்பேர்தான். இதை கேட்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறதில்லையா? இந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் கதி என்னாவது?

தமிழகத்தில் 2 1/2 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பலாம் இல்லையா? வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள், நர்சிங் படித்து முடித்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் போராடும் போதெல்லாம் ஆட்சியில் உள்ளவர்கள் செய்த கொடுமைகளை மறந்துவிட முடியுமா? கண் தெரியாத பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தது போலீசு மிருகம். வேலையில்லாக் காலங்களில் கிடைக்கும் அரசு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கச் சென்றவர்களை கருணையே இல்லாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்க உத்தரவிட்டது தமிழக அரசு. எத்தனை பேர்களின் மண்டையை உடைத்திருப்பார்கள், பொய் வழக்கில் எத்தனைப் பேரை சிறையில் தள்ளியிருப்பார்கள். ஆட்சியில் இருந்தவர்கள் மட்டுமல்ல, கைகட்டி வேடிக்கைப் பார்த்த பிற ஓட்டுக்கட்சியினரும் துரோகிகள்தானே. வாழ வேலை கேட்டவர்களின் வாழ்க்கையைப் பறித்த படுபாவிகள்தான் இன்று வெட்கம் இல்லாமல் மீண்டும் ஓட்டுக்கேட்டு வருகிறார்கள். நாம் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?

படித்த பட்டதாரி இளைஞர்கள் டீ க்கடைகளில், ஹோட்டல்களில் வேலை கேட்டு அலைகிறார்கள். எம்.ஏ, எம்.சி.ஏ எது படித்தாலும் மார்க்கெட்டிங் வேலைதான். அதுவும் ஒரு மாதம் தாக்குபிடிக்க முடியாது. டாக்டர், எஞ்சினியரிங் படித்தவர்கள் பியூன், வி.ஏ.ஓ, ரயில்வேயில் கலாசி வேலை ஆகியவற்றிற்கு அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளுக்காக லட்சக்கணக்கில் விண்ணப்பிக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளுக்கே சென்று ஆள் எடுத்த பன்னாட்டு நிறுவனங்கள் வேலைகாலி இல்லை என்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வெயிட்டிங்கில் வைத்திருக்கின்றன. அமெரிக்க கனவில் மிதந்தவர்களுக்கு அங்கேயும் கதவு அடைக்கப்பட்டுவிட்டது. மலேசியா, சிங்கப்பூரில் இந்திய இளைஞர்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

படித்த இளைஞர்களுக்கே இதுதான் நிலை என்றால், படிக்காதவர்களின் நிலையை சொல்ல வேண்டுமா என்ன? கடுமையான உழைப்பைச் செலுத்தும் சுமை தூக்குவது, கம்பி கட்டுவது, கொத்தனார், சித்தாள், பெரியாள், பெயிண்டர் வேலைக்கும் போட்டி, தன்மானம் பார்க்காமல் கார்துடைக்கச் சென்றாலும் போட்டி. வேலையில்லை. இப்படி கோரத்தாண்டவமாடும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு யார் காரணம்? இந்த ஓட்டுப் பொறுக்கிகளும், அவர்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டு புகுத்திய தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் நாசகாரக் கொள்கைகளும்தானே.

விவசாயத்தையும், சிறுதொழிலையும், பொதுத்துறை நிறுவனங்களையும் ஊக்குவித்து வளர்ப்பதன் மூலம் தான் அதிகப்படியான இளைஞர்களுக்கு வேலைகொடுக்க முடியும். வேலையில்லாத் திண்டாட்டத்தையும் ஒழிக்க முடியும். ஆனால் இவற்றையெல்லாம் அழித்து வருகிறார்கள். மேலும், தினம் ஒருவனைக் கூட்டி வந்து பெண்ணை கையைப் பிடித்துக்கொடுக்கும் மாமா வேலைசெய்யும் புரோக்கரைப் போல, ஓட்டுக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போது போட்டி போட்டுக்கொண்டு பன்னாட்டுக் கம்பெனிகளை கூட்டி வந்தார்கள். அவர்களுக்காக திட்டம் தீட்டி, விவசாய நிலத்தை பறிமுதல் செய்து, நிலம், கரண்ட், தண்ணீ, சாலை என அடிப்படை வசதிகளை செய்து, சலுகைகளை வாரிக்கொடுத்து கார்ப்பரேட் முதலாளிகளை குளிப்பாட்டும், ஒவ்வொரு முறையும் நமக்கு இவர்கள் சொன்னது என்ன? இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு. நாட்டிற்கு வளர்ச்சி, முன்னேற்றம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமக்கு போட்டது அனைத்தும் பட்ட நாமம்.

அப்படி கூட்டி வந்த நோக்கியாவின் யோக்கியதை பாருங்கள்? லட்சக்கணக்க்கானோருக்கு வேலை, கை நிறைய சம்பளம் என்றார்கள். ஆனால், சில ஆயிரம் இளைஞர்களைத்தான் வேலைக்கு எடுத்தார்கள். சம்பளமோ வெறும் ரூ 5,000 ஆயிரம்தான். 20 வயதில் வேலைக்கு சென்ற இளைஞர்கள், இளம் பெண்கள் பலரை மூன்றே ஆண்டுகளில் கசக்கிப் பிழிந்து வெளியில் தள்ளினார்கள். இருப்பவர்களை காண்ட்ராக்ட் வேலை என்ற பெயரில் கொத்தடிமைப் போல் நடத்துகிறார்கள். குறைந்த ஆட்களை வைத்து டார்கெட்டை முடிப்பது என்ற அவர்கள் லட்சியத்திற்காக சென்சார் எந்திரத்தை ஆஃப் பண்ணி வைத்தார்கள். கல்யாணம், குடும்பம், எதிர்கால வாழ்க்கை என பல லட்சியங்களோடு வேலைக்குச் சென்ற இளம்பெண் அம்பிகாவின் கழுத்தை சென்சார் மிஷின் அறுக்க பலி கொடுத்தார்கள். இது எவ்வளவு பெரிய கொடூரம்.

இறுதியில் கம்பெனிக்கு நட்டம் என்று கூறி மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். மைக்ரோசாப்ட் நிறுவனமோ ஒரே நாளில் பத்தாயிரம் பேரின் வேலையைப் பறித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது. வெறும் ரூ 1,500 கோடியை மூலதனமாக போட்டு இந்நாட்டு வளங்களையும், மனித உழைப்பையும் சூறையாடி ரூ 45 ஆயிரம் கோடியை சுருட்டிய நோக்கியா, இறுதியில் நட்டம் என ஊத்திமூடி பல ஆயிரம் இளைஞர்களை நடுத்தெருவில் நிற்க வைத்திருக்கிறது. இதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு கொடுக்கும் லட்சணம். ஓட்டுப் பொறுக்கிகள் ஊதிப்பெருக்கிய வளர்ச்சியின் உண்மை முகம்.

இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்கிறார்களே, அந்த இளைஞர்களின் எதிர்காலம் பற்றி எப்போதாவது அரசு கவலைப்பட்டிருக்கிறதா? ஒரு பக்கம் வேலையில்லை, வருமானம் இல்லை. மறுபக்கம் செல்போன், லேப்டாப், டேப், துணி வகைகள், டூ வீலர்கள் என இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான நுகர்வுப் பொருட்களை மார்க்கெட்டில் குவித்து, ஓயாது விளம்பரம் செய்து எப்படியாவது வாங்க வேண்டும் என்று தூண்டுகிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இளைஞர்களின் வேலைக்கு வழி செய்யாத அரசு, முதலாளிகளின் பொருட்களை நம்மிடம் திணிக்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. இளைஞர்களை திட்டமிட்டே சீரழிக்க டாஸ்மாக் சாராயத்தையும், சூதாட்டமான கிரிக்கெட்டை 20/20 ஐ.பி.எல் என்று இளைஞர்களுக்கேற்ப அரசே நடத்துகிறது. இந்த வலையில் சிக்கும் இளைஞர்கள் நல்ல வேலை, கவுரவமான வாழ்க்கை என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் அஜித்தின் மங்காத்தா, சிம்புவின் வானம், விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் போன்ற தமிழ் சினிமாக்கள் காட்டிய வழியில் வாழ சமூக விரோதிகளாக சீரழிகிறார்கள். இதற்கெல்லாம் யார் பொறுப்பு? இந்த அரசுதானே.!

இப்படி அன்றாடம் இளைஞர்கள் அனுபவிக்கும் வாழ்க்கைப் பிரச்சனைக்கு இதுவரை 15 முறையாக நடந்த தேர்தல்கள் தீர்வைத் தேடித்தராதபோது, இந்தத் தேர்தல் மட்டும் என்ன தீர்வைத் தந்துவிடப்போகிறது. இந்தத் தேர்தல் என்பதே அன்றாடம் நம்வாழ்வைப் பறித்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக, அவர்களால் நடத்தப்படும் சூதாட்டம்தான்.

’ஜெய் ஜக்கம்மா காசு போடாம இந்தக் கோட்டத்தாண்டி போனா ரத்தம் கக்கி செத்துடுவனு மிரட்டும்’ வித்தைக்காரனைப்போல, தேர்தலில் ஓட்டுப் போடலனா ஓட்டுரிமை போயிடும், சலுகைகள் கிடைக்காது, நோட்டாவிலாவது போடனும்னு இளைஞர்கள் மிரட்டப்படுவதாக தெரிகிறது. அப்பாவி மக்கள் வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுப்பதை மூட நம்பிக்கை என்கிறோம். எல்லாம் தெரிந்தபின்னும் நாம் ஓட்டுப் போட நினைத்தால் அதை என்னவென்று சொல்வது, அது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் வேட்டாகிவிடும்.

கார்ப்பரேட் முதலாளிகளிடம் நாட்டையும், நம்மையும் அடகுவைக்கும் ஓட்டுப் பொறுக்கிகளோ, கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திட்டம்போடும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளோ நம் வாழ்க்கைப் பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை. நாம் தான் போராடித் தீர்க்க வேண்டும். இளைஞர்களாகிய நாம் மட்டுமல்ல, நம்மைப்போன்றே கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்கான இந்த அரசால் பாதிக்கப்படும் உழைக்கும் மக்களோடு ஒன்றுதிரள்வோம். இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம். இந்த அரசமைப்பை தகர்த்தெரிவோம். உழைக்கும் மக்கள் அதிகாரத்துக்கான புதிய ஜனநாயக அரசை கட்டியெழுப்புவோம்!

இவண்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

21 மறுமொழிகள்

 1. வேலையில்லா திண்டாட்டம் – உண்மையில் சொல்லப்போனால் பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு இருந்தும் சரியான திறனுள்ள பணியாளர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.

  தற்கால இளைஞர்களிடம் உள்ள சில குறைகளினால் இந்த வேலை இல்லா திண்டாட்டம் என்ற பிரம்மை ஏற்படுகிறது.

  1. வேலை இல்லா திண்டாட்டத்திற்கு அரசை குறை கூறி பிரயோசனம் இல்லை. உண்மையில், தேடினால் வேலை கிடைக்கும். தகுதிக்கு ஏற்ற வேலை என்ற மாயையிலிருந்து முதலில் விலக வேண்டும். வேலை என்றாலே அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு கோப்புகளை பார்க்கும் அரசாங்க வேலை போன்ற வேலையோ இல்லை கணினியை தட்டி கொண்டே முப்பதாயிரம், நாற்பதாயிரம் வாங்கும் வேலை தான் வேண்டும் என்று அடம் பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

  2. படித்தால் மட்டும் வேலை கிடைக்காது. படித்த பின் குறிப்பிட்ட துறை சம்பந்தமாக மேலும் சில திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். போட்டி மிகுந்த தற்போதைய நிலவரத்தில் மற்றவரை விட நமக்கு ஒரு படி மேலே திறமை இருக்க வேண்டும் என்ற உந்துதல் வேண்டும்.

  3. பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நாயகனும் சந்தானமும் பேசுவதை போல தான் தற்போதைய இளைஞர்கள் யோசிக்கிறார்கள்: மார்கெடிங் வேலையா – நாய் பொழைப்பு என்பார்கள். பொழைப்பே இல்லாமல் இருப்பதற்கு நாய் பொழைப்பு எவ்வளவோ மேல்.

  4. கணினி தான் உலகமா. மென்பொருள் வேலை கிடைத்தால் தான் போவேன் என்பதாலேயே பலர் வேலைக்கு போகாதிருக்கிரார்கள். எத்தனையோ இயந்திரவியல், கட்டிடவியல் துறை வேலைகள் இருந்தும் இயந்திரவியல் கட்டிடவியல் துறையில் படித்த பொறியியல் மாணவர்கள் படித்து முடித்ததும் மென்பொருள் வேலை கிடைக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். கணினியில் உட்கார்ந்த இடத்தில் ஏசி குளிர் அறையில் வேலை, அமேரிக்கா, கனடா நாடுகளுக்கு போய் செட்டில் ஆகும் வாய்ப்பு. இதற்காக தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்.

  5. ஏன் வேலை வேலை என்று அடுத்துவனுக்கு கூலியாக இருக்கவேண்டும் என்றே இருக்க வேண்டும். சிறு தொழில் செய்யலாம். வசதி இருந்தால் நீங்களே ஒரு சிறு பாக்டரி தொடங்கலாம். அதற்கெல்லாம் அதிகம் உழைக்க வேண்டுமே, உட்கார்ந்த இடத்தில் வேலை கிடைத்தால் சரி என்று யோசித்தால் வேலை இல்லா திண்டாட்டம் என்று தான் தோன்றும்.

  6. தென்னிந்தியர்களுக்கே உண்டான ஒரு குணம் – தொழில் செய்வதை விட ஒரு அரசு வேலை இல்லை மென்பொருள் கணினி வேலை தேடுவது தான் நல்லது என்று நினைப்பது. இந்த குணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆயிரம் பேர் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்வதை விட ஆயிரம் பேருக்கு வேலை தரக்கூடிய தொழிலை தொடங்க யோசிக்க வேண்டும். இதற்கு கடின உழைப்பு மிக மிக முக்கியம்.

  7. ஒரு வட இந்தியர் என்னுடன் பேசும்போது அவர் கூறியது – நீங்கள் தென் இந்தியர்கள் உங்கள் வருவாய்க்கு ஏற்றார் போல உங்களது செலவுகளை குறுக்கி கொள்கிறீர்கள். நாங்கள் வட இந்தியர்கள் எங்கள் செலவுகளுக்கு ஏற்றார் போல எங்களது வரவுகளை பெருக்கி கொள்கிறோம். அது தான் உங்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் என்றார். எனக்கு சுரீர் என்று உரைத்தது. நமது திறமைகளை நாமே வேலி போட்டு கட்டி கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. ஒரு தனி மனிதனாக ஒரு தொழில் தொடங்குவதற்கான தைரியம், தில், நமது தென் இந்தியர்களுக்கு கொஞ்சம் குறைவு தான்.

  8. அடுத்தவரை நம்பி வேலை தேடாதே, உன்னை நம்பு.
  If God solves your problems, it means, you have faith in God.
  If God doesn’t solve your problems, it means God has faith in you to solve your problems on your own.

 2. வேலை வாய்ப்பு இப்ப மிகவும் குறைந்து விட்டது உண்மைதான் எதற்க்காக் பண்ணாட்டு கம்பேனிகள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆசைப்படுகின்றன் குறந்த்த கூலிதன் கற்றது கையளவு நம்மள தொழில் தொடங்க சொல்லுறார் அட்வைஸ் பன்றது ஈசி பா தொழிற்சாலை நீ தொடங்கி எஙளுக்கு வேலை குடுப்பா நான் என்ன வேலைனாலும் செய்வேன் எனா நானும் கற்றது கை அளவுதான்

  • ஜோசெப் சார்,

   நான் திரைப்படங்களில் காட்டுவதை போல ஒரே பாட்டில் தொழிலாளி முதலாளி ஆகும் மேஜிக் வித்தையை பற்றி சொல்லவில்லை. படிப்படியாகவே முன்னேறுவோம். ஆயிரம் பேருக்கு வேலை தரக்கூடிய தொழிற்சாலைகளை தொடங்கும் வசதி இல்லை என்றாலும், நான்கு ஐந்து பேருக்கு வேலை தரக்கூடிய சிறிய தொழிலை முதலில் தொடங்கலாமே. கடின உழைப்பு, ஆளுமை திறன் இருந்தால் போதும். முன்னேறலாம்.

   நான் கண்ட வரை தற்போதுள்ள இளைஞர்கள் உடல் வருத்தி, மெய் வருத்தி வேலை செய்ய விருப்பமில்லாமல் சோம்பேறியாக ஏதாவது வேலை இருக்கிறதா, அதற்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறதா என்று தான் பார்கிறார்கள்.

   வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற வெறி, நெருப்பு உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது தற்கால இளைஞர்களிடம் கொஞ்சம் குறைவாக தான் உள்ளது (நான் கண்ட வரை).

   ஒரு முறை சாக்ரடீசிடம் ஒரு பதினைந்து வயது சிறுவன் கேட்டான் – வெற்றி பெற என்ன தேவை என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் அவனை நதிக்கரை ஓரம் அழைத்து சென்று நதியினுள் முங்கி எழுந்திருக்க சொன்னார். அச்சிறுவன் முன்கும்போது சாக்ரடீஸ் தனது பலமிக்க கைகளினால் அச்சிறுவன் மேலே வர முடியாமல் அழுத்தினார். ஒரு நிமிடம் அச்சிறுவனுக்கு உயிர் பயம் வந்து திமிறி வெளியேற பார்த்தான். மேலும் சாக்ரடீஸ் அவனை அழுத்தினார். பின்னர் அவனை மேலே இழுத்து சொன்னார் – நீ தண்ணீருக்குள் இருக்கும்போது காற்றுக்காக திமிறிக்கொண்டு முயற்சித்தாயே, அதை போல தீவிரமாக முயற்சித்தால் நீ எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம் என்றார்.

   அது போன்ற வெறித்தனமான நோக்கம், வெற்றிக்கான தாகம், உள்ளுக்குள் நெருப்பு இருந்தால் யார் தடுத்தாலும், அரசாங்க உதவி இல்லாமலும், குடும்ப உதவி இல்லாமலும், பெரும் பண முதலீடு இல்லாமலும் நம்மால் முன்னுக்கு வர முடியும்.

   நாடு எனக்கு என்ன செய்தது, அரசாங்கம் எனக்கு என்ன கொடுத்தது என்பது சோம்பேறிகளின் வாதம். நாம் நாட்டுக்கு என்ன செய்தோம், நாட்டு முன்னேற்றதுக்கு நம்மால் ஆனா கடமையை நாம் செய்தோமா என்று யோசிப்பது உழைப்பாளிகளின் எண்ணம்.

   • நல்லா பேசுறிங்க சுய முன்னேற்ற புத்தகஙள் எழதி சம்பாதிக்கலாமே அம்பானி பெட்ரொல் போட்டார் காஸ்டப்பட்டார் இப்பிடி நிறைய பாயின்ட் எடுத்து சொல்லி மக்கள முன்னேற்றலாம் அவன் மட்டுதான் ரெம்ப உழைச்சான் விவசாயி மீனவர் கட்டிட தொழிலாளி,எல்லாம் உக்காந்து சோம்பேறியா சாப்பிட்டான் இன்னும் இத்தியாதி இத்யாதி,,,,,,,

    • நான் அம்பானி பற்றி பேசவே இல்லையே ஜோசெப் சார், நீங்கள் ஏன் நான் அம்பானி வகை முன்னேற்றத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். நாட்டில் உள்ள 120 கோடி மக்களில் உழைத்து முன்னேறியவர்கள் ஒருவர் கூட இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?

     விவசாயி, மீனவர், கட்டிட தொழிலாளிகள் எல்லாம் சோம்பேறிகள் என்று எப்போது நான் சொன்னேன்? ஏன் தவறான கோணத்தில் என் பதில்களை பார்க்கிறீர்கள்?

     உழைப்பிற்கேற்ற ஊதியம் வேண்டும் என்ற கருத்தினை நான் ஆமோதிக்கிறேன்.
     என்னை தொழிலால விரோதியாக சித்தரிக்க வேண்டாம் நண்பரே.

 3. வேலை வேண்டும் வேலை வேண்டும் என்று ஏன் எப்போதும் இன்னொருவர் கீழே வேலை செய்ய இத்தனை பிரயத்தன படுகிறோம்?

  சொந்தமாக ஒரு சிறு தொழில் செய்யலாம் இல்லையா?
  பெரிய தொழில் செய்ய தான் முதலீடு தேவை.
  நமக்கு தெரிந்த துறையில் சிறிய அளவில் ஒரு நான்கு அல்லது ஐந்து பேருக்கு வேலை தரக்கூடிய தொழிலை இளைஞர்கள் தொடங்கலாமே.

  ஆக்கபூர்வமாக யோசிக்கலாமே?

  உட்கார்ந்த இடத்திலேயே நமக்கு வேலையை அரசாங்கம் தேடி தராது. நாம் தான் நமக்கு உண்டான வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.

  வாழ்நாள் முழுதும் தினம் பத்து அல்லது பனிரெண்டு மணிநேரம் நம் உழைப்பை யாருக்காகவோ கொடுத்து அவர்கள் கொடுக்கும் கூலியை வாங்குவதை விட, நமக்கு நாமே உழைத்து அதன் பலனை முழுவதுமாக அடையலாமே?

  தொழிலாளி என்றால் பாதிக்கப்பட்டவன், சுரண்டப்படுபவன், முதலாளி என்றால் தொழிலாளியை சுரண்டுகின்றவன் என்று ஏன் ஒரு குறுகிய வட்டத்துக்குள் Stereotyping செய்ய வேண்டும்.
  முதலாளிகளில் நல்லவர்கள் இருக்க முடியாதா? நீங்களே ஒரு நல்ல முதலாளியாக ஏன் மாறக்கூடாது. ஒரு தொழிலாளியினால் முதலீடு செய்ய முடியவில்லை எனில் பத்து தொழிலாளிகள் சேர்ந்து ஒரு சிறு தொழிலை தொடங்கலாமே. தீவிரமாக, வெறித்தனமாக உழைத்த எவரும் முன்னேறாது இருந்தது இல்லை. எத்தனை தடைகள் வந்தாலும், அரசாங்க உதவி இல்லாமலேயே, அதிகாரிகள் உதவியில்லாமலேயே ஜெயித்து காட்ட முடியும்.

  தன்னம்பிக்கை வேண்டும். தில் வேண்டும்.
  அது இருந்தால் மூலதனம் ஒரு முக்கியம் அல்ல.
  யோசித்து பாருங்கள். இத்தனை காலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் தொழிலாளியாக இருந்திருப்பீர்கள். அந்த தொழிலின் நுணுக்கங்களை நன்கு ஆராய்ந்து தெரிந்து வைத்திருப்பீர்கள் என்றால் நீங்களே உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அந்த தொழிலை ஒரு சிறிய அளவில் தொடங்கலாம்.

  எவ்வளவு காலம் தான் செங்கொடியை பிடித்து கொண்டு தொழிலாளியாக இருப்பீர்கள்?
  தொழிலாளி முதலாளியாக என்ன வழி, அந்த வழியை யோசியுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

  Venture Capitalists என்று சொல்வார்கள். இவர்கள் தொழில் முதலாளிகள். இவர்களிடம் உங்கள் ஐடியாக்களை பேசி அவர்களை உங்களது தொழிலுக்கு மூலதனம் செய்ய நீங்கள் முயற்சிக்கலாம். வரும் இலாபத்தில் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு கொடுக்க வேண்டும்.
  நம்ம ஊரிலும் பணத்தை வைத்து கொண்டு அதனை எப்படி பெருக்குவது என்று தெரியாமல் பலர் முழித்து கொண்டு இருக்கின்றனர். அத்தகைய நபர்களை பிடித்து உங்கள் ஐடியாக்களை விளக்கி அவர்களை தொழிலில் மூலதனம் இட செய்ய வைக்கலாம்.

  அட, மூலதனம் செய்ய பணக்காரன் கிடைக்கவில்லையா, நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் ஒரு குழுவாக உருவாக்கி மூலதனம் செய்யலாம். நாம் எந்த அளவு முன்னேறுகிறோம் என்பது அடுத்தவன் கையிலோ, இல்லை அரசாங்கத்தின் கையலோ இல்லை.

  If you are Born Poor, it is not your fault.
  If you Die Poor, it is your choice.

  கிணற்று தவளையாக இருக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் முடிவு செய்யலாம்.
  அக்கம் பக்கம் நடப்பதை கூர்ந்து கவனியுங்கள். மக்கள் எதில் ஆர்வம் காட்டுகிறார்கள், எந்த சேவை மக்களுக்கு இப்போது அவசியம் தேவைப்படுகிறது? எந்த பொருளை விற்றால் மக்கள் ஆர்வமாக வாங்குவார்கள்? இருக்கும் பொருட்களில் என்ன மாற்றம் செய்தால் மக்கள் அதனை ஆர்வமாக வாங்குவார்கள்? இரு வேறு கருத்துருக்களை இணைத்து ஒரு புதிய பொருளையோ, புதிய சேவையையோ தந்தீர்களானால் மக்கள் அந்த புதிய கருத்துருவுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.

  எல்லாம் நம் கையில் தான் உள்ளது.
  கூர்ந்து கவனிக்கும் திறன், பணத்தை விரயம் செய்யாமல் சரியான வகையில் உங்கள் கருத்துருவை விளம்பரம் செய்யும் திறன், எதனையும் சமாளிக்கும் தைரியம், கடின உழைப்பு, தீவிரமான வெறி, இவை இருந்தால் யாராக இருந்தாலும் முதலாளி ஆகலாம்.

  • Hi KK,

   //இத்தனை பிரயத்தன படுகிறோம்? //

   There are people who cannot find their next day food, leave alone a small capital to start a smallest business. If there is no one to stand beside him, this poor youth will be subjected to inhumane exploitation. Communism is not about oneself getting food. It is about every one getting food.

   //*** தீவிரமான வெறி, இவை இருந்தால் யாராக இருந்தாலும் முதலாளி ஆகலாம்.//

   Communism is not about individuals trying hard, creating something, ensuring their livelihood, etc. It is about ensuring livelihood to one and all. It is a very old approach that we are/were made to forget. I know it is very hard to grasp it.
   The leaders in Communism know very well your formula. But they are not after insuring their own lives or a small group around them.
   Then there is a limit one can do individually but world is the limit when we join hands. Communism means joining hands in widest possible sense. You may do a small business and find your livelihood. Can you imagine infrastructure like roads that are for the entire humanity being done by individuals? As per Communism, even food is an infrastructure that is for the entire humanity. Large farms are touted to be efficient as it brings economy of scale in Capitalism. Communism can bring the highest possible economy of scale.
   This is for today. Let us discuss.

   • @Univerbuddy:

    //There are people who cannot find their next day food//

    Unless these people are differently abled or old aged people or children, If they cannot find their next day food,it means that they don’t try hard. They don’t want to put efforts to earn their food. We should not make people lazy by giving free food. Instead we should encourage them to earn for their food. I agree with you in supporting old age, differently abled and abandoned children. But for healthy adults, they should earn their own food. The world is big. If one says he cannot find a way to earn for his daily food, then it means that he is not trying hard.

    I agree with you on the economy of scale and mass production of food and other things. It brings more efficiency and optimum usage of resources. But at the same time, the system should not abuse the resources. Workers, Labourers should not be enslaved. Proper salaries and proper work timings and proper work environment and safety should be maintained.

    Remember the adage – THERE IS NO FREE LUNCH!
    Everything given free is done with some ulterior motive and return consideration.

    India’s major strength and asset is its population. But if this resource (Human Resource)is not utilized properly, it becomes the biggest liability. Unless a person is differently abled or old person, every single person’s energy should be channelized properly. The main problem with our youth is not unemployment, but not having an intention to work hard for the employment. They want everything easy. Nothing comes easy in this world.

    If we avoid laziness and procrastination, our country would have grown far better.

   • //The leaders in Communism know very well your formula//

    Snatch the power and enjoy the life till death. is that the formula ?

    //even food is an infrastructure that is for the entire humanity//

    Learn the history. You want to take somebody’s hard work and distribute it to poor people and lazy people. This experiment brought great famine in China and North Korea.

    Theory is good but not possible practically.

    Let me know if you are ready to donate your excess salary to poor person next door.

    • இராமன் அவர்களின் கருத்துக்கு முற்றிலும் உடன்படுகிறேன்.
     புரட்சி ஆட்சி அமைந்த நாடுகளில் ஜனநாயக அளவுகோலில் எப்படி இருக்கின்றன என்று தீவிரமாக ஆராய்ந்தோமானால் உண்மை வெளிவரும்.

     உழைப்பவனின் உழைப்பை கொண்டு சோம்பேறியின் வயிறு வளர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை உணவிற்கு வழி இல்லை என்று ஒருவன் சொல்வானானால் அவன் நிச்சயம் ஒரு சோம்பேறி தான். மெரினாவில் சுண்டல் விற்கும் சிறுவர்களிடம் பழகி பாருங்கள். உங்களுக்கு தெரியும் உழைப்பு என்றால் என்னவென்று.

     தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
     மெய்வருத்த கூலி தரும்.

     மெய்வருத்தி முயற்சி செய்தால் உங்களுக்கான கூலி உங்களுக்கு கிடைக்கும்.
     தெய்வத்தின் உதவியும் தேவை இல்லை, அரசின் உதவியும் தேவை இல்லை.

     முதலில் எல்லாவற்றிற்கும் அரசை நம்புவதை நம் மக்கள் கைவிட வேண்டும்.
     முதலில் உங்களை நம்புங்கள்.

     தெய்வம் தன்னை காக்கும் தனக்கு சோறு போடும் என்று ஒரு சோம்பேறி சொல்வதற்கும்,
     அரசு எனக்கு உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம் எல்லாம் கொடுக்க வேண்டும் என்று சொல்பவனுக்கும் என்ன வித்தியாசம்.

     அரசை நம்பாதே, தெய்வத்தை நம்பாதே, உன்னை நம்பு!!!

 4. //எல்லாம் நம் கையில் தான் உள்ளது.
  கூர்ந்து கவனிக்கும் திறன், பணத்தை விரயம் செய்யாமல் சரியான வகையில் உங்கள் கருத்துருவை விளம்பரம் செய்யும் திறன், எதனையும் சமாளிக்கும் தைரியம், கடின உழைப்பு, தீவிரமான வெறி, இவை இருந்தால் யாராக இருந்தாலும் முதலாளி ஆகலாம்.

  // Wow.. what an idea? so all will become muthalali – Like Ambani, Mallaya, Jayalalitha. And believe Me and கற்றது கையளவு, above examples are Muthalali’s because they are “கூர்ந்து கவனிக்கும் திறன், பணத்தை விரயம் செய்யாமல் சரியான வகையில் உங்கள் கருத்துருவை விளம்பரம் செய்யும் திறன், எதனையும் சமாளிக்கும் தைரியம், கடின உழைப்பு, தீவிரமான வெறி, இவை இருந்தால் யாராக இருந்தாலும் முதலாளி ஆகலாம்.”

  • Ambani, Mallaya started business and made money out of business. Yes they did tricked the banks and govts for their need, but it is your system is to be blamed.

   If Your country is corrupt and if your law system is not capable of punishing the corrupt, You have to fix the law implementation. There is no point in blaming those people.

   Is Ambani and Mallaya are the only examples of business success in this country?
   Read economic times and firstpost, there are people who started redbus/flipkart.

 5. //so all will become muthalali – Like Ambani, Mallaya, Jayalalitha. //

  I never mentioned about Ambani, Mallya and Jayalalitha. I was referring a proper business model with proper utilization of the resources available in hand. Not about swindling public money and squeezing the human resources.

  The business model I was referring is more like a cooperative society. Every employee becomes an investor of the organization. Encouraging people to come up with new ideas, new concepts.

  People who have the technical knowhow and the money to invest in a small business unit, can help provide work for 5 or 10 persons, to start with, and grow the business to support 100s and 1000s of workers down the line.

  I am not talking about instant success. I am talking about Step by Step growth, an Organic Growth.

  I am again repeating, Success of a person is not decided by others, but by the person himself.

  If you think you can succeed, you are right.
  If you think you cannot succeed, you are still right.
  All depends on how positive our mind set is.

  If I talk about Mudhalali, why you are always considering Ambani,Mallya and Jayalalitha?
  Your neighbouring grocery shop owner, your barber, the thallu vandi parotta person all are also self employed. They dont depend on government to give them a job or food. They create their own job, find means to get their own food. When I talk about constructive efforts, please do not talk about negativities like Ambani, Mallya and Jaya.

 6. Hi KK & Raman

  //You want to take somebody’s hard work and distribute it //

  Where did I say so? You have misunderstood my points. You need to do some effort to follow the discussion and understand it, no need of hard work in it.
  Remember that this post is about unemployment.
  Mr. KK advises those who are unemployed to become a small entrepreneur with a small investment.
  I replied to that as //There are people who cannot find their next day food//. அவ்வாறு நான் சொன்னது சில மக்கள் முதலீடு செய்து தொழில் செய்யும் நிலையில் இல்லை என்பதையும், அவர்கள் சம்பளத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள் என்பதையும், அவர்களுக்கு வேலை வேண்டும் என்பதையும் காட்டத்தான். அதைப் புரிந்து கொள்ளாமல் நீங்கள் free food, free lunch, lazy, வயிறு வளர்ப்பது, சோம்பேறி, என்று ஏதேதோ எழுதுகிறீர்கள். (You need to have some more empathy.)

  The following phrases might have made you write so.

  // If there is no one to stand beside him//
  //It is about every one getting food.//
  // even food is an infrastructure that is for the entire humanity.// etc.

  None of these phrases mean taking somebody’s work and distributing it.

  //If there is no one to stand beside him, this poor youth will be subjected to inhumane exploitation.//

  Here I mean, if people, who can withstand for some months/weeks/days without depending on the salary/wage, don’t speak for the people who depend on their wages [அன்றாடங்காய்ச்சிகள், வார/மாத சம்பளத்தை நம்பியிருப்பவர்கள்], they would be exploited more and more. And Communists are standing beside them.
  பிறகு நான் //Then there is a limit one can do individually but world is the limit when we join hands.// என்று எழுதியிருக்கிறேன். இங்கே கூட்டு முயற்சியினால் பரந்துபட்ட மக்களின் தேவைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றுதான் இதற்கு பொருள்.

  எல்லோரும் வேலையை நம்பியிராமல் தனித்தனியாக ஏதேதோ செய்து கொண்டால் சாலைகள் போன்ற பொதுகட்டமைப்புகள் எப்படி அமையும் என்றும் கேட்டிருக்கிறேன். உணவும் ஒரு பொதுகட்டமைப்பு என்று சொல்கிறேன். அதாவது அதை கூட்டு முயற்சியினால் [i.e. every one in the group work and all of them get share] உற்பத்தி செய்து கொள்ளலாம் என்றுதான் இதற்குப் பொருள்.

  Please do some easy thinking. Let’s discuss.

  • Yes Buddy, The reason I sent my previous reply was because of this comment:
   //There are people who cannot find their next day food//.
   Thanks for the clarification, Now I understood your view point.
   In my opinion, if financially they are poor, people should not restrict themselves with one income. They should try to find more ways to earn or find better ways to earn or just find a better job with better remunerations.

   ஒரு மனிதனின் வளர்ச்சி எப்போது தடைபடுகிறது? அவனது தேடல் நிற்கும்போது அவனது வளர்ச்சியும் அத்துடன் நின்று விடுகிறது. எனக்கு இந்த சம்பளம் போதும், இந்த வேலை போதும் என்று நினைப்பவர்கள் எதிர்காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நமக்கு கிடைக்கும் வருவாயில் 20 சதவீதம் சேமிக்க வேண்டும். அப்போது தான் அது நல்ல வருவாய். இல்லையென்றால் அந்த 20 சதவீதம் சேமிக்கும் அளவிற்கு வருவாயை பெருக்கி கொள்ள என்ன வழி என்று யோசிக்க வேண்டும். இந்த சேமிப்பு தான் ஒரு அவசர மருத்துவ செலவுக்கோ, நீண்ட நாள் கனவான சொந்த வீடு போன்ற தேவைகளுக்கோ உறுதுணையாக இருக்கும். தேவையில்லாமல் மார்வாடி வட்டிக்கடைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

   ஒன்று, வருவாய்க்கு ஏற்ப நம் செலவுகளை குறைத்து கொள்ள வேண்டும்.
   இல்லை, செலவுகளுக்கேற்ப நம் வருவாயை பெருக்கி கொள்ள வேண்டும்.

   சம்பளத்தை நம்பியே இருப்பவர்கள் கூட இப்போது வேலை நேரம் போக மற்ற நேரத்தில் வெளியே உழைத்து கொண்டோ, இல்லை தம்மிடம் உள்ள ஏதாவது ஒரு திறனை கொண்டு சிறிய அளவிலாவது அதிகம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.

   விசுவாசம் என்ற பெயரில் நம் மக்கள் அவர்களை கொத்தடிமையாக நடத்தினாலும் அதே நிறுவனத்தில் ஓய்வு வயது வரை வேலை செய்கிறார்கள்.

   There is a saying,
   Love your Profession, But Dont love your company.

 7. Hi KK,

  //I agree with you on ***. But at the same time, *** Labourers should not be enslaved*** //

  நீங்கள் ஏன் இவ்வாறு எழுதினீர்கள் என்று எனக்கு புரியவில்லை. பொதுவுடமைக்கொள்கை தொழிலாளர்களை மட்டுமல்ல யாரையும் அடிமைப்படுத்த்க்கூடியதல்ல.

  • உண்மையான பொதுவுடைமை கொள்கைகளை பயன்படுத்தும் நாடு இப்போது எங்கு உள்ளது?
   Is there any Model State, Model Governance showing the benefits of your Revolutionary form of government in the world now, at present?

   Please show us the proofs.
   Are the people of those countries happy on all quotients – Economically, Democratically, are they having freedom of expression? Are they able to topple their rulers if the rulers misbehave? Can you show us some real life proofs in the present world that the undemocratic rulers of any revolutionary government (if it existed) being toppled and another revolutionary government formed?

   If anybody with weapons can capture the governance of a country, it will only be like pakistan. Coup after Coup after Coup…. Is that what is expected?

 8. Hi KK,

  //In my opinion, *** இந்த சேமிப்பு தான் ஒரு அவசர மருத்துவ செலவுக்கோ, நீண்ட நாள் கனவான சொந்த வீடு போன்ற தேவைகளுக்கோ உறுதுணையாக இருக்கும். *** இல்லை தம்மிடம் உள்ள ஏதாவது ஒரு திறனை கொண்டு சிறிய அளவிலாவது அதிகம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.//

  I am afraid people know these things. Please don’t waste your time, Vinavu’s time, my time, etc by writing such points. I hope you would understand.

 9. Sorry Univerbuddy,

  There are many people who still dont understand the importance of saving. Particularly the working class people who earn daily wages. They spend most of their hard earned money in TASMAC. If they atleast spend half of the money spent on tasmac to their families, their families can live a better life. It may be considered as waste of time for you, because you know. But there are many people who still dont understand and still waste almost 80% or even 100% of their daily wages on TASMAC.

  I hope you understand.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க