இந்த வாரம் 19.06.2017 முதல் 23.06.2017 வரை வினவு தளத்தில் வெளியான குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. நீங்கள் படிக்கத் தவறிய செய்திகளையும், பின்னர் படிக்கலாம் என்று தள்ளி வைத்த செய்திகளையும் கண்டுபிடிப்பதற்கு உதவியாக இந்த தொகுப்பை வெளியிடுகிறோம். இந்தக் குறுஞ்செய்திகளில் அமெரிக்கா, மத்திய கிழக்கு, அறிவியல், ஆவணப்படங்கள, புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. சோதனை முயற்சியாக துவங்கப்பட்ட இந்தக் குறுஞ்செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களையும் அறிய விரும்புகிறோம். நன்றி
– வினவு
இந்த போராட்டத்தை சீர்குலைக்க போலிசு கைது செய்யப்போவதாக மிரட்டியது. ஆனால் எதற்கும் தயாரக இருந்த தொழிலாளிகளை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. |
பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும். |
இக்கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள், இக்கும்பலிடம் இருந்து தப்பி வந்தாலும், பலர் செய்வதறியாது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கின்றனர் |
தற்கொலை செய்துகொள்கிற விவசாயி, தான் செத்தபிறகு யார் நம்ம குடும்பத்தை காப்பாத்துவது? என குடும்பத்தோடு செத்தாலும், நிலம் விவசாயி பேரில் உள்ளதால், அவர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார். |
2014 வரை வெள்ளாற்றில் கார்மாங்குடி மற்றும் முடிகண்ட நல்லூர் பகுதி குவாரிகளில் அரசு கணக்கில் வராமல் சுமார் 200 கோடி அளவில் மணல் கொள்ளை அடிக்கபட்டுள்ளது. |
பிகினித் தீவில் ஹைட்ரஜன் குண்டு வெடித்த சம்பவம் நடந்து, சரியாக நான்காவது நாள் பிகினி என்ற நீச்சல் உடை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. |
குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்கு சென்ற முருகனை, திடீரென்று வழிமறித்த காட்டு யானைத் தாக்கியதில் 13 வயது மகன் அழகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனான். |
கடந்த 17 -ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரில் திறந்தவெளியில் ஆய் போகிறவர்களை கையும் களவுமாக பிடிக்க அதிகாரிகள் படை ஒன்று களமிறங்கியுள்ளது. |
உள்ளுர் தி.மு.க. மணல் மாஃபியா கும்பலும் கட்சி கடந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மக்களை தாக்கினர். திட்டச்சேரி காவல் எஸ்.ஐ அம்சவள்ளி குண்டர் படைக்கு பாதுகாப்பு கொடுத்ததோடு மக்களைத் தாக்கினார். |
பிரிட்டிஷ் படைகளின் ஆதரவில் உருவாக்கப் பட்ட கிரேக்க முதலாளித்துவ அரசு, கம்யூனிஸ்ட் கொரில்லாக்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியது. தளபதி ஆரிஸ் அதற்கு சம்மதிக்க மறுத்தார். |
நாளொன்றிற்கு வெறும் மூன்று மணிநேர மின்சாரம் மட்டுமே காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் தற்போது பெறுகிறார்கள். |
ஆணையத்திடம் புகார் அளிப்பது குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் பரவலான விழிப்புணர்வு இல்லை. ஆகையால் மிக மிக சொற்பமான மனுக்கள் அளித்திருந்தார்கள். போலீசின் புகார் மனுக்கள் மட்டுமே ஆயிரத்தை தொட்டது. |
இந்த புதிய அளவிடல், விஞ்ஞானிகளுக்கு புதிராக உள்ள வெள்ளைக் குள்ளன் விண்மீன்களைப் பற்றிய புரிதலை அதிகப்படுத்தியுள்ளது. |
நீதிபதி சந்துரு அவர்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பார்த்துவிட்டு ‘மதுக்கடைகளை சட்டப்படி ஒழிப்பது எப்படி?’ என்று தான் எழுதிய கையேட்டை கிழித்து கீழே போடுவதைத் தவிர வேறுவழியில்லை என்று கூறியிருக்கிறார். |
அப்துல் கலாம் என்கிற ஒரு முஸ்லிமை ஜனாதிபதி ஆக்கியதால் முஸ்லிம் சமுதாயத்தின் எந்த இன்னலும் இதுவரை நீங்கியதே இல்லை. |
மக்களை கஞ்சிக்கில்லாத நிலைக்குப் பராரிகளாக தள்ளி விட்ட பின் அவர்களைப் பார்த்து “பொருட்களின் மூலம் மகிழ்ச்சி கிடைக்காது” என்று போதனை செய்ய எந்தளவுக்கு மனவக்கிரம் இருக்க வேண்டும்? |
முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் வேலையின்மை, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை ஆகியவை உருவாக்கியிருக்கும் மனச்சிக்கல்கள், அதனால் நடத்தப்படும் சைக்கோத்தனமான, இனவெறி, மதவெறித் தாக்குதல்களாலும் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். |
டாஸ்மாக் திறப்பதற்கு முன்னரும், மூடிய பிறகும் டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது விற்பனைக்கு ஆதரவளித்து கல்லா கட்டிய போலீசு கும்பல் தான் இத்தகைய கள்ளச் சந்தை விற்பனைக்கும் பின்னணியில் இருந்து ஆதரவு தருகிறது. |
இந்த விபச்சார விடுதிக்கு எப்படி வந்தேன் என்று எனக்குத் தெரியாது. எதையும் நினைவில் வைத்து கொள்ள முடியாத அளவிற்கு நான் மிகவும் சிறியவளாக இருந்தேன். |
நடிப்பு, ஒளிப்பதிவு, காட்சி பொருட்கள், இசை, இளையராஜா, படத்தொகுப்பு, கதை, இயக்கம் என்று அனைத்திலும் அடித்து விளையாடுகின்றனர், நக்கலைட்ஸ் குழுவினர். |
தமிழகத்தில் வரிவிலக்கு பெற்ற 589 பொருட்களில் பூணூல், விபூதி, குங்குமம் உள்பட 80 பொருட்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
அர்ஜெண்டினா மக்களின் வாழ்வாதாரமோ உலகமயமாக்கலின் விளைவாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெஸ்ஸி உள்ளிட்ட ஏராளமான தனி நபர்களிடம் சொத்தாக எழுதித்தரப்படுகிறது. |
அந்த நேரத்தில் ஈராக்கிலோ, ஆப்கானிலோ, காஷ்மீரிலோ ஒரு குழந்தை தனது இடிக்கப்பட்ட வீட்டில் கொல்லப்பட்ட பெற்றோருக்காக அழுது கொண்டிருக்க கூடும் |
ராம்தேவை வைத்து ஏன் யோகாவை விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று கேட்டவுடன் நாராயணனுக்கு பி.பி ஏறத்தொடங்கியது. |
உறுதியாக நின்ற விவசாயிகள் மீது ‘பெல்லட்’ துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு. இதில் விவசாயிகள் உட்பட சுமார் 26 பேர் படுகாயமடைந்தனர். |
தனது இசை அமைப்புகளோடு நாடு முழுவதும் நடக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் பங்கெடுத்து தனது இசை நிகழ்சிகளை வழங்க அவர் பயணம் செய்கிறார். |
உலகத்திலேயே தன் சொந்த நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது என்ற கருத்தோட்டம் அமெரிக்கர்களின் மனதிலிருந்து வெளியேறி வருகிறது. |
ராம் நாத் கோவிந்து, தனது அமெரிக்க எஜமானர்களிடம் தலித்துகளின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-ன் ’பாஷையை’ அப்படியே பேசியுள்ளார். |
ஜெயாவின் பிணத்தருகே வெங்கய்யா நாயடு ஆணி அடித்த மாதிரி அமர்ந்திருந்த போதே அடிமைகள் தமது புதிய எஜமான்களை தொழுது வாழ போற்றிப் பாடல்களை இயற்றிவிட்டனர். |