”மக்கள் அதிகாரத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு! தோழர் சரவணன் NSA -ல் கைது!”

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக திட்டமிட்டுக் கொன்ற அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் மக்களை பயமுறுத்தும் விதமாகவும், மக்களோடு துணை நிற்கும் மக்கள் அதிகாரம் அமைப்பை தடை செய்யும் முனைப்போடும், பல்வேறு பொய்வழக்குகளைப் புனைந்து வந்தது போலீசு.

கடந்த மே 25, அன்று கோவில்பட்டியில் தோழர் சரவணனை அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் ஏறிக் குதித்து கைது செய்தது போலீசு. அவருக்கு வலிப்பு நோய் வரும் என்பது குறித்து கைது செய்த போலீசிடம் எடுத்துக் கூறிய அவரது மனைவி சுப்புலட்சுமியை எகத்தாளமாக கேலி பேசியுள்ளது கிரிமினல் போலீசு.

மக்கள் அதிகாரம் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும், பொய் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். மக்கள் அதிகாரம் என்றும் மக்களோடு நிற்கும் என்று  கூறுகிறார் சுப்புலட்சுமி.

திருடன் போல வீட்டின் கதவை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை போலீசு எடுத்துச் சென்றதையும், உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது கணவர் குறித்தும், சுப்புலட்சுமி கண்ணீர் மல்க விவரிக்கிறார். சுப்புலட்சுமியின் கண்ணீருக்கு என்ன பதில்?

பாருங்கள் பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க