தோழர் கோட்டையன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது !
மக்கள் அதிகாரத்தை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசு !

கடந்த மே22, 2018 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, 25, மே, 2108 அன்று இரவில் தோழர் கோட்டையனை உசிலம்பட்டிக்கு அருகில் இருக்கும் ஆரியப்பட்டியில் கைது செய்தது போலீசு.

இந்தக் கைதுக்கான, காரணம் கேட்டிருக்கிறார் கோட்டையனின் மனைவி செல்வி. தூத்துக்குடி போராட்டத்திற்கு சென்றதால் கைது செய்கிறோம் என்று பதிலளித்திருக்கிறது போலீசு. அப்படியெனில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பேரையுமல்லவா கைது செய்திருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். கைதிற்குப் பின்னர் ஒருநாள் கடிதம் கொடுக்க வந்ததாகக் கூறி நள்ளிரவில் வந்து தொல்லை கொடுத்திருக்கிறது போலீசு.

“எங்க அப்பா எந்தத் தப்புமே செய்யல. பொதுமக்களுக்காக கண்டிப்பா போராடணும். அவர் என்ன கொலையா செஞ்சார்?, அவரை எதுக்கு கைது பண்ணீங்க?” என அதிகாரவர்க்கத்தை நோக்கி வினவுகிறார் அவரது மகள் நிவேதா.

”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மீண்டும் அங்கு போய் நாங்கள் போராடுவோம். நீ எத்தனை பேரை சுட்டாலும் சரி, எத்தனை பேரைக் கைது செய்தாலும் சரி நாங்கள் எங்கள் வேலையை தொடர்ந்து செய்வோம்” என உறுதியோடு கூறுகிறார் செல்வி !

பாருங்கள் , பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க