மக்கள் அதிகாரம் மீது தொடரும் அடக்குமுறை – கைது – அவதூறு
மக்களிடம் நேரலையில் விளக்குகிறார் தோழர் ராஜு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஊர்வலத்தில் மக்களைச் சுட்டுக் கொன்ற போலீசு தொடர்ந்து மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் போராடும் மக்கள், முன்னணியாளர்களை தேடிப்பிடித்து அச்சுறுத்தி, கைது செய்து வருகிறது. போலீசின் துப்பாக்கிச் சூடு குற்றத்தை மறைக்க ‘கலவரத்தை’ மக்கள் அதிகாரம்தான் தூண்டியது என அவ்வமைப்பின் தோழர்களை மாவட்டம் தோறும் கைது செய்திருக்கிறது. அறுவர்  மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞரும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவின் சட்ட ஆலோசகருமான தோழர் வாஞ்சிநாதனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

தற்போது தூத்துக்குடியில் சில மீனவ சங்க பிரதிநிதிகளை அச்சுறுத்தி, மக்கள் அதிகாரம்தான் தூண்டியதாக பேசவைத்து ஊடகங்களில் செய்தி வெளியிட வைத்திருக்கிறது போலீசு. இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் கருத்தைக் கூட கேட்காமல் அந்த செய்திகளை ஊடகங்கள் அப்படியே வாந்தி எடுத்திருக்கின்றன.

இப்படி அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்! எட்டுவழிச்சாலை முதல் தூத்துக்குடி வரை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் அடக்குமுறைகள், கைதுகள், மிரட்டல்கள்…

இந்த சூழலில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கருத்தென்ன? இந்த அடக்குமுறையை எப்படி எதிர்கொள்வார்கள்? போராடும் மக்களுக்கு என்ன பாதுகாப்பு? அனைத்துக் கேள்விகளுக்கும் வினவு நேரலையில் பதிலளிக்கிறார் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.

இன்று செவ்வாய்க்கிழமை 03.07.2018 மாலை 7.30 மணி
வினவு யுடியூப், வினவு பேஸ்புக் பக்கங்களிலும், வினவு தளத்திலும் பார்க்கலாம். இணைந்திருங்கள்!

உங்கள் கேள்விகளை அறியத் தாருங்கள்!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க