1983 -இல் காசி விசுவநாதர் கோயில் திருட்டுப்பற்றி பிரபலமாகப் பேசப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோவில் திருட்டு, சிவலிங்கம் பதிக்கப்பட்ட அடித்தளத்தில் உள்ள 2 கிலோ தங்கம் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. திருடர்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு பிடிபட்டார்கள். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் பல்பீங்சிங்பேடி கோவிலின் உள்ளே இருப்பவர்கள் உதவி இல்லாமல் வெளியிலிருந்து வந்து திருட முடியாது என்று கூறுகிறார்.

காசி விஸ்வநாதர் கோயில்

திவாரி என்ற பார்ப்பனர் கோவிலில் ஒரு மகன்ட். மகன்ட் என்றால் தர்மகர்த்தா. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளிவந்தவர். கோவிலின் கர்ப்பக்கிரக கதவின் பூட்டு உடைக்கப்படாமலே திறக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னால் இரண்டு மிகப்பெரிய இரும்பு கதவுகள் உள்ளன. அவைகள் திறந்தே வைக்கப்பட்டிருக்கிறது. இரவு முழுவதும் காவல் காக்க வேண்டிய பார்ப்பன இரண்டு அர்ச்சகர்கள் இரவு தூங்கிவிட்டதாக கூறுகிறார்கள். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?

அப்போதே நாராயணக் கடவுளின் வெள்ளி கிரீடமும் களவாடப்பட்டிருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும். இந்த மிகப்பெரிய திருட்டு கோவிலின் உள்ளேயே கருவறைக்குள்ளேயே எந்த சேதமும் இல்லாமல் நடந்திருக்கிறது. இது புதியதல்ல. இந்த மாதிரி திருட்டுகள் பலமுறை இந்த கோவிலில் நடந்து இருக்கிறது. இது ஆறாவது திருட்டு ஆகும். ஒவ்வொரு தடவையும் திருட்டு நடந்த பிறகு அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவார்கள். பிறகு கோவில் நிர்வாகம் அவர்களை வேலை நீக்கம் செய்யும். ஆனால் அப்படி வேலை நீக்கம் செய்யப்பட்ட, திருட்டு குற்றம் சுமத்தப்பட்ட அர்ச்சகர்கள் பிறகு திரும்பவும் அர்ச்சகராக வேலைக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதுவும் யாரால்? அந்த தர்மகர்த்தா குழுவின் ஒரு அங்கத்தினரால் அவர்கள் மீண்டும் வேலைக்குச் சேர்த்துக்கொள்ளப்படுவர். இதில் எங்கே நியாயம் நீதி நேர்மை இருக்கிறது? திருட்டு பார்ப்பனர்களைத் திரும்பவும் வேலைக்கு எடுத்துக் கொண்டால் தர்மகர்த்தாக் குழுவும் திருட்டுக்கு உடந்தைதானே!

சிலை திருட்டு, கடத்தல் எல்லாம் அதனை பாதுகாக்கும் பொறுப்பை வைத்துள்ள தர்மகத்தாவின் கூட்டு சதியுடன் தான் நடைபெறுகிறது

கோவிலுக்கு மிக நெருங்கியவர்கள் சொல்லுகிறார்கள். பெரிய பெரிய கொள்ளைகள் திருட்டுக்கள் இந்தக் கோவிலின் உள்ளே நடந்து கொண்டிருக்கிறது. கோவிலின் கதவின் விளிம்பில் உள்ள வெள்ளியைச் சுரண்டி எடுத்து விட்டார்கள். கோவில் துவஜ ஸ்தம்பத்தில் உள்ள தங்கத்தை எடுத்து விட்டார்கள். வெள்ளி நாணயங்கள் பதிக்கப்பட்டிருந்ததைக் காணோம். நந்திக்கு உள்ள விலை உயர்ந்த வெள்ளி நகைகளைக் காணோம். இதை எல்லாம் யாரைப் போய்க் கேட்க? என்கிறார்கள்.

ஊழல்:

மாதம் 60,000 ரூபாய் வருமானம் உள்ள கோவில் அது. ஆனால் இதற்கு ஆதாரங்களோ தஸ்தாவேஜுகளோ எதுவும் இல்லை. வரவு செலவுக்கு ஆதாரபூர்வமான ரசீதுகள் இல்லை. அந்தக் கோவிலுக்கு என்ன நகைகள், சொத்துக்கள் உள்ளன என்பதற்கு ஆதாரம் இல்லை. எத்தனை பேர் அங்கே வேலையிலிருக்கிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. ஆனால் பார்ப்பன தர்மகர்த்தா குழுவினர் சொல்லுகிறார்கள் தின வருமானம் கோவிலுக்கு 70 ரூபாய் மட்டும்தானாம்.

அந்தக் கோவிலே தனிப்பட்ட நான்கு பேருக்கு சொந்தமாம். ராமசங்கர், கிருஷ்ணசங்கர், விஜயசங்கர், கைலாசபதி என்கிற நால்வர்தான் அந்தக் கோவிலின் சொத்துக்காரர்கள். யார் நிர்வாகத்தை நடத்துவது என்று இவர்களுக்குள்ளேயே தகராறு. உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நான்கு பார்ப்பனர்களுக்கும் வழக்கு முடியும் வரை கோவில் வருமானத்தில் சமபங்கு உண்டு. இப்படி நடக்கின்றது காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம்.

இவர்களுக்குள்ளே உள்ள தகராறினால் உத்தரப்பிரதேச அரசு தனி அதிகாரி ஒருவரை போட்டு நிர்வாகத்தை நடத்துகிறது.

திரிபாதிக்கு சொந்தம்

கைது செய்யப்பட்ட கைலாசபதி என்ற பார்ப்பனர் (தர்மகர்த்தா) உத்தரப் பிரதேச நல்வாழ்வுத்துறை அமைச்சர் (இவர் கமலாபதி திரிபாதியின் மகன்) லோக்பதி திரிபாதிக்கு உறவுக்காரராம். சிறையில் இருக்கும் தர்மகர்த்தா கைலாசபதியின் வீட்டுக் கொல்லையில் பாழடைந்த கிணற்றில்தான் தங்கத்தட்டு (திருட்டுப்போனது கோவிலில்) கண்டெடுக்கப்பட்டது. இன்னும் போலீஸ் நிறைய ஆட்களை கிணற்றில் மூழ்கச் சொல்லி இன்னும் ஏதாவது திருட்டுப் போன தங்கம், வெள்ளி சாமான்கள் இருக்கிறதா என்று பார்க்க சொல்லி இருக்கிறது.

ஏன் கோவிலில் புகைப்படம் எடுக்கக்கூட தடைவிதிக்கிறது இந்த பார்ப்பன கும்பல்? அவர்கள் செய்யும் திருட்டுகளுக்கு ஆதாரம் இருக்கக்கூடாது என்பதால் தான்.

அரசு எடுத்தது ஒரு மாதத்திற்கு முன்னால் மாநில அரசு ஒரு சட்டத்தை போட்டு கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது. மாநில கவர்னர் சி.பி.என்.சிங் முன்னிலையிலேயே கைலாசபதியும் இன்னொரு தர்மகர்த்தாவும் அடித்துக் கொண்டார்கள்.

இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக் கோவில்களில் கடவுளர் சிலைகளும் நகைகளும் திருட்டுப் போகிறது. இதற்கு என்ன காரணம்? அர்ச்சகர்களின் உதவியினால்தான் பெரும்பாலான இந்த திருட்டுகள் நடைபெறுகின்றன.

திருச்செந்தூர் உண்டியல் விவகாரத்தில் ஒரு கொலையே நடந்திருக்கிறதே. முருகன் சந்நிதானத்தில் கடவுளின் சொத்துக்களை அறங்காவலர் குழுவினரே கொள்ளை அடித்திருக்கிறார்களே. நடந்து முடிந்த தேர்தலில் கூட ஆளும் கட்சியைச் சேர்ந்த அந்த அறங்காவலர் குழுவினர் வெளியே தலைக்காட்டவே இல்லையே. உத்திரப் பிரதேசத்தில் கடவுளின் சொத்து திருடப்பட்டதற்காக அறங்காவலர் கைது செய்யப்படுகிறார். ஆனால் இங்கே திருச்செந்தூரில் கண்டும் காணாததுபோல் இருக்கிறது அரசு. குற்றம் என்று தெரிந்தால் யாராயிருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே. அரசியல் எந்தளவுக்கு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது பார்த்தீர்களா? அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்தான் என்று தந்தை பெரியார் சொன்னது இப்பொழுது நமக்கு நினைவுக்கு வருவதில் ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.

திருப்பதி தேவஸ்தானத்து நிதியை அரசு கஜானாவில்தான் செலுத்த வேண்டும் என்று தெலுங்கு நாடு முதல்வர் என்.டி.ராமாராவ் உத்தரவிட்டதை எதிர்த்து சங்கராச்சாரியார் முதல் சனாதன பார்ப்பனர் வரை ஓநாய் ஓலம் இடுகிறார்களே என்ன நியாயம் இது. 5 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நம்பவில்லை என்ற ஒன்றைத் தவிர வேறு என்ன இருக்கிறது அதில்?

(மேலும்)

கடவுளைக் களவாடும் களவாடும் கபோதிகள் யார்?

(முழுக்கட்டுரையை மேற்கண்ட ‘உண்மை’ இணையதளத்தின் இணைப்பில் சென்று படிக்கவும்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க