முகப்புசெய்திதமிழ்நாடுபெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !

பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !

உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி, தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது.

-

ரு ஐம்பது வயதுமிக்க பெண்மணி ஒருவர் ஒரு தீட்சிதனுடன் வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம்வந்து கொண்டிருக்கிறது. அந்த தீட்சிதன் தன்னை அடித்ததையும், தான் அவனது தங்கச் சங்கிலியைப் பறிக்கப் போனதாக்தான் அடித்ததாக அவன் பொய் சொல்வதையும் சக பக்தர்களிடம் உடைந்து போய் விவரிக்கிறார் அந்தப் பெண்மணி. அங்கு சூழ்ந்துள்ள பக்தர்கள் அந்த தீட்சிதனை சூழ்ந்து கேள்வி கேட்கிறார்கள். ஆனால் எவ்விதப் பதட்டமும் இல்லாமல் திமிராக அமர்ந்து தனது கதையையே திரும்பத் திரும்பச் சொல்கிறான் அந்த தீட்சிதன்.

தனது மகனின் பிறந்த நாளில் அவரது பெயருக்கு அர்ச்சனை செய்ய சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருக்கிறார், சிதம்பரம் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான பெண்மணி லதா. தனது மகனின் பெயர், நட்சத்திரம், ராசி ஆகியவற்றைச் சொல்லி அர்ச்சனை செய்யுமாறு அங்கிருந்த தீட்சதர் தர்ஷனிடம் கூடையை கொடுத்திருக்கிறார். கூடையை எடுத்துச் சென்று அதிலிருந்த தேங்காயை உடைத்து கொண்டு போன சீக்கிரத்தில் திரும்பி வந்து கொடுத்திருக்கிறார் தீட்சிதர் தர்ஷன்.

“அர்ச்சனை பண்ண சொன்னா, பேரு, நட்சத்திரம் எதுவும் சொல்லாம தேங்காய மட்டும் உடச்சி கொண்டுவந்து தர்றீங்க” என்று கேட்டிருக்கிறார் லதா. அதற்கு “அப்படி பண்ணனும்னா நீங்களே பண்ணிக்கோங்க” என்று திமிராக பேசியிருக்கிறான் அந்த தீட்சிதர். தீட்சதனின் பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் “ அப்புறம் எதுக்கு நீங்க இருக்கீங்க? ” என்று கேட்க, பார்ப்பனக் கொழுப்பெடுத்த அந்த தீட்சதன் தர்ஷன் ஒரே அடியாக அந்த பெண்மனியின் கன்னத்தில் அறைந்திருக்கிறான். அந்த பெண்மனியோ சுருண்டு கீழே விழுந்திருக்கிறார்.

படிக்க :
♦ தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி
♦ லெனின் – பெரியாரை பின்பற்றுகிறவர்கள் தீவிரவாதிகள் : பாபா ராம்தேவ் பேச்சுக்கு கண்டனம்

அருகில் இருந்த பக்தர்கள் இச்சம்பவத்தைக் கண்டு உடனடியாக நெருங்கி தீட்சத ரவுடி தர்ஷனை கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதற்கு அந்த தீட்சிதன் “என் செயினை அறுக்க வந்தாங்க.. அதனால தான் அடிச்சேன்” என்று கொஞ்சமும் நா கூசாமல் அபாண்டமான பொய்ப் பழியை அந்த பெண்ணின் மீது சுமத்தினான். ஆனால் உண்மையை அருகில் இருந்த வேறொரு பக்தர் போட்டுடைக்க, தீட்சிதன் பொய் சொன்னது உறுதியாகத் தெரிந்ததும், வாக்குவாதம் அதிகமானது.

இதையடுத்து லதா சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சம்பவத்தையும் அது சமூக வலைத்தளங்களில் பரவுவதையும் அறிந்த சிதம்பரம் நகர போலீசு ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் தீட்சிதர்களிடம் விசாரணை நடத்திவிட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று லதாவிடம் விசாரணை செய்திருக்கிறார்கள். அந்த விசாரணையில் கோயிலில் நடந்தது குறித்து லதா புகார் அளிக்க, தீட்சித ரவுடி தர்ஷன் மீது பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது, மிரட்டல் விடுத்தது, பெண்கள் மீதான வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் போலீசு தீட்சிதன் தர்ஷனைக் கைது செய்யவில்லை. தீட்சிதன் அன்று வீடு திரும்பவில்லை என்றும், தலைமறைவாக உள்ளதாகவும் அவனைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வகையான “நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையெல்லாம்”, எஸ்.வி.சேகர் எனும் பொறுக்கியைக் கைது செய்யாமல் அவனை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறி, அவனுக்குப் பாதுகாப்புக் கொடுத்து அவன் கூடவே போலீசு சுற்றிம்போதே நாம் கேட்டுள்ளோம்.

அதற்கு முன்னால், எச்ச ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தை, “ஹைகோர்ட்டாவது ம#$ராவது” என்று பேசிய பின்னரும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் கோர்ட் கைவிட்டது. இரண்டு பார்ப்பன நரிகளுக்கும் சலுகை வழங்கிய போலீசும் நீதிமன்றமும், சிதம்பரம் கோவிலின் கொழுப்பேறிய திருட்டு தீட்சிதனுக்கு மட்டும் தண்டனை பெற்றுத் தந்துவிடுமா என்ன ?

உட்கார்ந்த இடத்திலேயே நோகாமல் மந்திரம் சொல்லி தின்று கொழுத்த கூட்டத்திற்கு இன்று மந்திரம் சொல்வதற்குக் கூட கஷ்ட்டமாக இருக்கிறது. கோவிலுக்குள் தமிழ் மொழியில் தேவாரம் பாடக் கூடாது என்று கொக்கரித்த போதே இந்தக் கும்பலை கோவிலை விட்டு அடித்து வெளியேற்றியிருந்தால், இன்று இந்நிலை ஏற்பட்டிருக்குமா ?

 


– எழில்

  1. எவ்வளவு அடாவடித்தனமாக உடனடியாகஒரு பொய்யை எடுத்து சொன்னான் பாருங்க அது பாசிச பார்ப்பனிய சாமார்த்தியம்…… இப்படி தான் இந்த பார்ப்பனர்கள்
    சாமான்ய மக்களை ஏமாற்றி ஏய்த்து பிழைத்து கொண்டு இருக்கிறார்கள்…..

  2. இத்தகைய நிகழ்வு சில வருடங்களுக்கு முன் கேரளாவில் நடந்தது. என் அத்தான் (அக்கா வீட்டுக்காரர் )கால்ச்சட்டைக்கு மேலே வெட்டி அணிந்து உள்ள வந்தார் . அவரை தரதரவென்று இழுத்து வெளியே தள்ளி பெரிய நிகழ்ழ்வு. ஏதோ இவர்கள்தான் தெய்வத்திற்க்கே அண்ணாவி போல நடக்கும் இவர்கள் யார் ?? தங்களுக்கென சொந்த நாடு இல்லாமல் நாடோடிகளை இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்கள் . மன்னர்களை கைக்குள் போட்டுகொண்டு கோயில்களை கைவசப்படுத்தி நம் பூமியில் நம்மையே பதம் பார்க்கும் தைரியம் எப்படி வந்தது?? தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாமையே காரணம் . தமிழர் என்று சொல்வது மொழியை அல்ல இனத்தை . புஞ்சபி, குஜராத்தி, மலையாளி தெலுங்கு இவர்களில் தமிழர் உண்டு . நமக்குள் ஒற்றுமை இருந்தால் இந்த வதரிகளை 25 ஆண்டுகளுக்குள் துரத்தி விட்டு நம் பூமியை நாம் ஆளலாம் . அனைவரும் ஒன்று கூடுவோம்/துரோகிகளை வெளியே துரத்துவோம்

  3. அட நடராஜப் பெருமானே….உனை அர்ச்சிக்க வந்த ,அந்த சகோதரிக்கு ஏன் இந்த தண்டனை?நீ கேட்க மாட்டாயா? கேட்கலாம்னுதான் போனேன் bro…அவன் என்னைப்பார்த்தே நடராஜனாவது மயிராவது ன்னு கேட்டுப்புட்டான்…

  4. பக்தர்கள் “செருப்பணிந்து” வரலாம் என்றிருந்திருந்தால் சகோதரி லதாவிற்கு உதவியாக இருந்திருக்கும்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க