தில்லை கோயிலை பாதுகாக்க தனி சட்டம் இயற்ற கோரியும், கணக்கில்லாமல் வசூல் வேட்டை நடத்தி வரும் தீட்சிதர்கள் மீது சிபிஐ ரெய்டு நடத்தக்கோரியும், சிதம்பரம் காந்தி சிலை அருகில் 14.10.2019 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் இணைச் செயலர் வழக்கறிஞர் தோழர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, திரு சந்திரசேகர் (பா.ம.க), வி.சி.க மாவட்ட செயலர் பால அறவாழி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட செயலர் தோழர் மணியரசன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலர் புஷ்ப தேவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக :

1) ஆயிரங்கால் மண்டபத்தை பணத்திற்காக, சிவகாசி ஸ்டாண்டர்டு – ரத்னா ஸ்டோர்ஸ் தம்பதியினருக்கு திருமணத்திற்கு நட்சத்திர விடுதியாக மாற்றி கோயிலின் புனிதத்தை கெடுத்த தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடு! சம்பந்தப்பட்டவர்கள் மீது சிதம்பரம் போலீசார் மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

2) திருமணத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வாங்கிய தீட்சிதர்கள் மீது உடனடியாக சி.பி.ஐ ரெய்டு நடத்த வேண்டும்.

3) கோயிலை தீட்சிதர்களிடம் இருந்து கைப்பற்றி இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

படிக்க:
தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி
♦ சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

4) நடராஜர் கோயிலில் இருந்த நந்தனார் சிலையை அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட வேண்டும். அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

5) தீண்டாமையின் அடையாளமாக நிற்கும் தெற்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளது. அது உடனடியாக திறக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய பேச்சாளர்கள் ; சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் தீட்சிதர்களின் அடாவடித்தனங்களை, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆதாரப்பூர்வமாக நிறுவி தீட்சிதர்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பட்டத்தின் இடையே தீட்சிதர்களை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
கடலூர் மாவட்டம்.
விருதை : 9360061121.
சிதம்பரம் : 9842341583.
கடலூர் : 9842396929.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க