னைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அரசாணை இயற்றப்பட்ட பின்னரும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தொடர்ச்சியாக அர்ச்சகர் பணி நியமனம் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். தங்கள் மீது காட்டப்படும் சாதிய வன்மத்தை எதிர்த்துப் போராட அவர்கள் சங்கமாய் திரண்டு தங்கள் உரிமைகளுக்காக சட்டரீதியில் போராடி வந்துள்ளனர்.

அவர்களுக்கு இறுதி வரையில் சட்டரீதியான மற்றும் ஜனநாயகப் பூர்வமான போராட்டங்களுக்கு உறுதுணை செய்து வந்தது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம். (முன்னர் மனித உரிமை பாதுகாப்பு மையம்). சட்டப் போராட்டங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் தோல்வியுற்ற நிலையில், தற்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் மாரிச்சாமி என்பவருக்கு மதுரை அருகே ஒரு கோவிலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி
பணி நியமனம் பெற்ற மாணவர் மாரிச்சாமி

இது வரவேற்கத் தகுந்த விசயம் என்றாலும், அதுகுறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு, இன்றளவும் அரசு அதிகாரிகள் தயங்குகிறார்கள். தகுதியின் பெயரில் பார்ப்பனரல்லாத ஒருவருக்கு அர்ச்சகராக பணி நியமனம் செய்திருக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் தயக்கப்படுவதன் பின்னணி என்ன ? யாருக்காக தயங்குகிறார்கள் ? மாரிச்சாமிக்கு கிடைத்த பணி நியமனம் வெற்றியா ? இதே போன்று மற்ற அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கும் அர்ச்சகர் பணி நியமனம் கிடைக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் ?

விளக்குகிறார்கள், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு

தோழர் ராஜு உரை :

ரங்கநாதன் உரை:

பாருங்கள் பகிருங்கள் !

– வினவு செய்திப் பிரிவு

1 மறுமொழி

  1. மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், தோழர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! பேசக்கூட தைரியம் இல்லாத எடப்பாடி நம் முதலமைச்சர் என்றால் அதைவிட கேவலம் என்ன இருக்கு?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க