னி நான்
மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன்
நீட்டுக்காகப் போராட மாட்டேன்
பசுவைக் கொல்ல மாட்டேன்
குசுவையும் விட மாட்டேன்

ஸ்டெர்லைட்டுக்காக குண்டடிபட்டு
சாக மாட்டேன்
பெட்ரோல் விலை ஏறினால்
நியுட்ரினோ சோதனை செய்தால்
மூச்சுக் காட்ட மாட்டேன்.
எட்டுவழிச் சாலை போட்டால்
நடைபயணம் செல்ல மாட்டேன்
மீத்தேன் எடுத்தால் சத்தம் போட மாட்டேன்

கோடிகோடியாய் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தால் ஒன்றும் சொல்ல மாட்டேன்.
மலம் அள்ளும் தொழிலை ஒழிக்கச் சொல்லிக் கேட்க மாட்டேன்
மணல் கொள்ளையையும்
கண்டு கொள்ள மாட்டேன்
காவிரியில் தண்ணீர் விடாவிட்டால் வழக்குத் தொடுக்க மாட்டேன்
சொந்தக்காரர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்தால்
வாய் திறந்து கேட்க மாட்டேன்

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டால்
யாரையும் பொறுப்பேற்கச் சொல்ல மாட்டேன்
மீனவர்கள் கைது செய்யப் பட்டால்
உரிமைக்காக கொடி பிடிக்க மாட்டேன்
ஓகி புயலில் ‘ஒருத்தரும் வரலே’ என்றால் ஆவணப் படம் எடுக்க மாட்டேன்
ஈழத்திற்கு ஐநாவில் பேச மாட்டேன்
வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்ட மாட்டேன்

பேராசிரியர்கள் பாலியல் தொல்லை செய்தால்
காட்டிக் கொடுக்க மாட்டேன்.
இரத ஊர்வலத்திற்குக் குறுக்கே நிற்க மாட்டேன்
பொட்டு வைக்காமல் இருக்க மாட்டேன்
வங்கிகளில் கல்விக்கடன் கேட்க மாட்டேன்
சங்கிகள் என்று சொல்ல மாட்டேன்
காவி நிறம் பிடிக்காது எனத் தவிர்க்க மாட்டேன்
மாலை எட்டு மணிக்குமேல் எங்கும் செல்ல மாட்டேன்

பணமதிப்பிழப்பு செய்தாலும்
பண்பற்றவர்கள் எனக் கூற மாட்டேன்
மருத்துவமனைகளில் குழந்தைகள் இறந்தாலும்
சொந்தச் செலவில் சிலிண்டர் வாங்க மாட்டேன்
கெயில் கொண்டு வந்தால் மயிரேயென்று கத்த மாட்டேன்
சமூக விரோதிகள் என்றால்
சூடு சுரணை பார்க்க மாட்டேன்
வெளிநாட்டுக்குத் தப்பியோடியவர்களைக்
திரும்பக் கொண்டுவரச் சொல்லிக் கேட்க மாட்டேன்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கக் கேட்க மாட்டேன்

தீட்டுக் காலத்தில் கோவிலுக்குப்
போக மாட்டேன்
இந்தித் திணிப்பு செய்தால்
மொழிப் போராட்டம் நடத்த மாட்டேன்
புருஷன் செத்தால் மறுமணம்
செய்து கொள்ள மாட்டேன்
ஊருக்குள் வரவிடுங்கள் எனக் கேட்க மாட்டேன்
சமத்துவச் சுடுகாடு ஒருபோதும் கோரமாட்டேன்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையோடு நடக்க மாட்டேன்

சுகிர்தராணி

வன்புணர்வு செய்தாலும் எதிர்ப்புக்
காட்ட மாட்டேன்
சேரி நக்சலாக இருக்க மாட்டேன்
தாமரை தவிர வேறு பூவைச் சூட மாட்டேன்
சமூகநீதிப் பற்றிக் கவிதை எழுத மாட்டேன்
அம்பேத்கரியம் பேச மாட்டேன்
இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்க மாட்டேன்
கொடி பிடித்துக் கோஷம் போட மாட்டேன்.
செத்தாலும் பௌத்தராகச் சாக மாட்டேன்

கொஞ்சம் பொறுங்கள்
அவசரமாய் வருகிறது
உங்கள் ஜனநாயகத்தின்மீது
கொஞ்சம் மூத்திரம் பெய்து கொள்கிறேன்.

நன்றி: சுகிர்தராணி

17 மறுமொழிகள்

 1. எவ்வுளவு பெரிய மோசடி பேர்வழிகள் நீங்கள்… தூத்துக்குடி மீனவர்கள் மிக வெளிப்படையாக நீங்கள் சொன்ன பொய்களால் தான் வன்முறை கலவரம் வெடித்தது என்று சொல்லியிருக்கிறார்கள்… உங்களை போன்ற வன்முறைவாதிகள் குடியிருப்பு பகுதியில் வாகனங்களை கொளுத்தினார்கள், காவலரை தாக்கினார்கள் ஆனால் அதையெல்லாம் முடி மறைத்து விட்டு அய்யோக்கியத்தனமாக ஜனநாயகத்தின் மீது பழி போட்டு அதன் மீது வெறுப்பை விதைக்கிறீர்கள்.

  முதலில் இந்த மக்கள் விரோத அயோக்கிய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் மீது தான் மூத்திரம் அடிக்க வேண்டும்.

  • தங்களின் சிந்தனையே மலம் போன்ற கழிவுகளால் நிரம்பி வழிகிறது, அத்தோடு கொடூரமான நச்சுவாய்வை வெளியிட்டபடியே எப்படி இத்தனை கேவலமாக RSS ன் விஷத்தை கக்குகிறீர் ஐயா மக்கள் விரோதமாணிக்க மணிகண்டரே?

   • கம்யூனிஸ்ட் சிந்தனையை விட பெரிய அசிங்கம் இந்த உலகத்தில் இருக்கிறதா ? மலத்தை விட கேவலமானது கம்யூனிசம்.

  • நீங்கள் சொல்வது போல் தான் முதலில் சொன்னார்கள், பிறகு எல்லோரையும் விடுதலை செய்து காவிகள் மூஞ்சில் மலத்தை தோய்த்துவிட்டார்கள்

   • பயங்கரவாத இயக்கங்கள் அப்பாவி மக்களை மிரட்டி பணியவைத்து, ஜனநாயக கொடுத்த உரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுகிறார்கள். வெளியே வந்த பிறகு எந்த ஜனநாயகம் அவர்களை விடுதலை செய்ததோ அதன் மீதே அவதூறை பரப்புகிறார்கள்.

    இதே போல் வினவின் எஜமானர்கள் சீனாவில் செய்ய முடியும்மா ? ஜனநாயக உரிமைகளை கேட்டு போராடிய மாணவர்கள் மீது பீரங்கியை ஏற்றி போராட்டத்தை அடக்கினார்கள்.

    நாளை வினவு கூட்டங்களும் இதையே மக்களுக்கு செய்யும்.

 2. இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல. துரை சண்முகத்துக்கு டப் பைட்… டேய் வினவு பாய்ஸ்… ngo ஓவரா புரமோட் பண்ணாதீங்க…

 3. ஆர்.எஸ்.எஸ் பா.ஜா.க. அடிமை எடப்பாடி கும்பலுக்கும் சட்டம் ஒழுங்கை காப்பதாக
  அடியாள் வேலை
  செய்யும் போலிசுக்கும்
  சரியான சமட்டியடி

  பழனி

 4. பழனி

  ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. அடிமை
  எடப்பாடி அ.தி.மு.க மற்றும் அதன் சமூக விரோத அடியாள்
  போலிசு கும்பலுக்கும் சரியான சம்மட்டியடி இதற்கு பிகாவது இதுகளுக்கு உரைக்கிரதா பார்ப்போம்

 5. இன்று தூத்துக்குடிக்கு விமான பயணம் செய்த பா.ஜ.க.தலைவி திருமதி.தமிழிசையை பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி வீரமங்கை சோபியா அவர்களை இந்த பாசிச அடிமை எடுபட்ட சர்க்காரின் போலீஸ் கைது செய்துள்ளது.இணய நண்பர்களே தயவு செய்து இணையத்தில் “பாசிச பா.ஜ.க ஒழிக” என்று டிரெண்ட் ஆக்குங்கள்….

 6. நல்ல வேளை, தூத்துக்குடி ஸ்டெரிலைட் ன் உரிமையாளரை அப்பாவி என்று சொல்லாமல் விட்டீரே

 7. தேச துரோகிகளை தேடுவதாக எப்போதும் மக்களிடம் ஊடகங்களில் பொய்பிரச்சாரம் செய்யப்படுகிறது ஆனாள் அவர்கள் இங்கு ஆட்சியாளர்கலாக உள்ளனர் மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்தோடு வயிர்வளர்த்து உயிர் வாழும் போலீசு அதிகாரக் கூட்டம் இவரகளை காக்கவே ஜனநாயக சக்திகளை கை.போய்வழக்கு சிறை என அச்சுறுத்துகிறது இந்த ஜனநாயகத்தை நேர்மையாலே தூக்கி நிறுத்தரதா சொல்லிக் கொள்ளும் நீதிமன்றங்கள் தன் பங்கிற்கு வாய்தா போட்டு இந்த மக்கள் உரிமைகளை குட்டிச்சுவராக்கி வந்துள்ளது
  இதன் ஆதரவால் தான் இந்த சமூக விரோத .தேசதுரோக ஆளும் கட்சிகளும் கார்ப்பரேட் கம்பெனிகளின்
  சர்வாதிகாரமாக நாடு உள்ளது இதைஉணராத மணிகண்டன்களுக்கு உரைப்பது கடிணம் தான்
  நன்றி
  வசநதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க