பெட்ரோல் – டீசல் விலை உயர்வு! இனியும் பொறுக்க முடியாது!

“டீசல் விலை திடுக்கிட வைக்கிறது!
பெட்ரோல் விலை பயமுறுத்துகிறத!
கேஸ் விலை கவலைப்பட வைக்கிறது!
மண்னெண்ணெய் விலையோ மரண அடி கொடுக்கிறது!
சாதாரண மக்கள் எப்படி வாழமுடியும்?”

து காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை பேசியது. ஆனால் இன்று “பெட்ரோல் விலை உயர்வை தடுக்கமுடியாது, அது எங்கள் கட்டுப்பாட்டிலேயே இல்லை” என்கிறார் மத்திய அமைச்சர். கர்நாடக தேர்தலுக்காக 20 நாட்களாக பெட்ரோல் விலை உயரவில்லையே, ஏன்?

கேஸ் சிலிண்டர் விலையும் சுங்க வரியும் காப்பீட்டுக் கட்டணமும் உயர்ந்து கொண்டே செல்கின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயரும். பெரும்பான்மை மக்களை பாதிக்கும் இந்த உயர்வை தடுத்து நிறுத்த முடியாது என்றால் இவர்கள் எதற்காக ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் ?

2014 –ல் 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் இன்று 84 ரூபாய். 300 ரூபாயாக இருந்த கேஸ் சிலிண்டர் இன்று 900  ரூபாய்.  இதுவரை  9 முறை கலால் வரியை உயர்த்தி இருக்கிறது அரசு. கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ37.90-க்கு எண்ணெய் நிறுவனங்கள் கொடுக்கின்றன. அதுவே நமக்கு வரிக்குமேல் வரி போடப்பட்டு 84 ரூபாயாகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தானில் ரூ51, பூட்டானில் ரூ 57, ஆப்கனில் ரூ46. வாய்ச்சவடால் அடிக்கும் மோடியால் ஏன் பெட்ரோல் விலையை குறைக்க  முடியாது?

கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு வாராக்கடனோ 12 லட்சம் கோடி ரூபாய், வரித்தள்ளுபடியோ  10 லட்சம் கோடி ரூபாய். மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதொகை 12 ஆயிரம் கோடி. பெட்ரோல் வரியை 20 ரூபாய் குறைத்தால் என்ன கேடு? பணமதிப்பழிப்பின் போது பேங்க் வாசலில் நின்ற லட்சக்கணக்கான மக்கள் அன்றே எதிர்த்துப் போராடியிருந்தால் 100 பேருக்கு மேல் செத்துப்போயிருப்பார்களா? லட்சக்கணக்கான தொழில்கள் அழிந்து போயிருக்குமா? கோடிக்கணக்கான பேர் வேலையிழந்து இருப்பார்களா?

பாஜக மோடி அரசு பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது. இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. சமூகநீதி அழிக்கப்படுகிறது, உயர்கல்வியே கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இயற்கை வளங்களை வரைமுறையின்றி சுரண்டுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

விவசாயிகளின்  வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பை வழங்குவேன், கருப்புப்பணத்தை மீட்டு அக்கவுண்ட்டில் 15  லட்சம் போடுவேன் என்றெல்லாம் பொய் பித்தலாட்டம் பேசி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, அனைத்திலும் படுதோல்வியடைந்திருக்கிறது. வரும் தேர்தலில் தோற்றுப்போவோம் என்ற பயபீதியில் பாசிசத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

மக்கள் விரோதத் திட்டங்களை எதிர்ப்போர், மாற்றுக் கருத்து உடையவர்கள் கருப்புச்சட்டங்களால் சிறை வைக்கப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ், பிஜேபி கும்பல் நூற்றுக்கணக்கான சங்பரிவார் அமைப்புகளை உருவாக்கி சாதி, மதவெறி  கலவரங்களை ஏற்படுத்துகின்றது. தலித்துக்கள், சிறுபான்மையினர், எழுத்தாளர்களை கொலை செய்கிறது. இக்கும்பல்கள் நாட்டின் எந்த ஒரு சட்டதிட்டத்துக்கும் கட்டுப்படமாட்டார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றவும் தக்கவைக்கவும் எந்த ஒரு படுபாதகத்திற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதை தினமும் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

இதை இனியும் சகித்து கொண்டு போனால், நாயினும் கீழான வாழ்க்கைக்கு தள்ளப்படுவோம். பெயரளவிலான ஜனநாயக உரிமைகளும் வாழ்வுரிமைகளும் பறிக்கப்படும்.  ஒரு நொடியும் தாமதமின்றி மோடியின் பாசிச காட்டுதர்பாருக்கு எதிராக  அனைவரும் அணி திரள வேண்டும்.

  • மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம்
  • 9176801656

4 மறுமொழிகள்

  1. // இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. சமூகநீதி அழிக்கப்படுகிறது, //

    ஜாதி வேண்டாம் என்று மேடைக்கு மேடை சொல்கிறீர்கள். இட ஒதுக்கீடு ரத்து என்றும் சொல்கிறீர்கள். எது வேண்டும் உங்களுக்கு ? ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை

  2. சாதி என்பது ஒழிக்கப்பட வேண்டும்.
    இடஒதுக்கீடு என்பது இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியால் பல இன்னல்களை சந்தித்து வரும் மக்கள் சமூக நீதி அடைவதற்கு வழி கோலும் ஒரு கருவி அவ்வளவே.

  3. பெட்ரோல் எடுத்தால் போராட்டம், சாலை அமைத்தால் போராட்டம், மருத்துவமனை காட்டினாள் போராட்டம் என்று அனைத்திற்கும் எதிர்ப்பு காட்டும் நீங்கள் பெட்ரோலை வெளிநாட்டில் இருந்து வாங்கும் பொது அதற்கான விலையை நீங்கள் கொடுத்து தான் ஆக வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க