06.04.2023
தூத்துக்குடி போராளிகளின் ஒப்பற்ற தியாகத்தை இழிவுபடுத்தாதே!
வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு!
கண்டன அறிக்கை
பல ஆண்டுகளாக தூத்துக்குடி மக்களையும் மண்ணையும் நாசமாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா காப்பர் நிறுவனத்துக்கு எதிராக 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி லட்சத்திற்கும் மேற்பட்ட தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்த போராட்டம் நடத்தினர்.
கார்ப்பரேட் வேதாந்தாவின் அடியாட் படையாக செயல்பட்டு போலீசு துப்பாக்கி குண்டுகள் பொழிந்தது. 15 பேர் வரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிப் போயினர். நூற்றுக்கணக்கானவர்கள் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். இவ்வளவு பாதிப்புகளை மேற்கொண்டபோதும் ஸ்டெர்லைட்டை மூடாமல் தியாகிகளின் உடல்களைப்பெற மாட்டோம் என்று உறுதியாய் இருந்தனர் மக்கள். அப்படிப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் இழுத்து மூடப்பட்டது.
6 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்போது வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கோ ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவு நாளுக்கு போலீஸ் அனுமதி கொடுப்பதில்லை. மாறாக ஸ்டெர்லைட் ஆதரவு பிரச்சாரங்களை போலீசும் அரசு நிர்வாகமும் தொடர்ந்து அனுமதிக்கிறது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் ஆளுநராக செயல்படும் ஆர்.என்.ரவி “வெளிநாட்டு நிதியில் பணம் பெற்று மக்களை தூண்டிவிட்டு அதனால் ஸ்டெர்லைட் மூடப்பட்டது” என்கிறார். ஆர்.என்.ரவியும் அவரின் தலைவர்களான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரி என்பதை எப்போதும் நிரூபித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு மோடி வருகின்ற வேளையில் ஆர்.என்.ரவி எதையும் தெரியாமல் உளரவில்லை ஆர்.என்.ரவியின் கருத்துதான் மோடியின் கருத்தும் ஆகும். எப்போதும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை கொச்சைப்படுத்துவதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் செயல்படக் கூடிய இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தமிழ்நாட்டு மக்களால் முறியடிக்கப்பட வேண்டும் என்பதே ரவியின் பேச்சு நமக்கு உணர்த்தக்கூடிய உண்மை.
இனியும் இந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து தமிழ்நாட்டு மக்களையும் தியாகிகளையும் இழிவுபடுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
ஆகவே ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.