சென்னை வாழ் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களே! தமிழ்ச் சமூகமே!
ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க நாளை (05-10-18) வாரீர் எழிலகத்துக்கு!
இடம் கலஸ் மகால், எழிலகம் பின்புறம், காலை பத்து மணி

நாசகார ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடி மக்களின் மானம் காக்கும் போராட்டம். ஒட்டு மொத்த தமிழகத்தின் உரிமைப் போராட்டம். கடந்த 22 ஆண்டு காலம் நடந்துவந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாழ்வுரிமைப் போரில் கடந்த மே 22-ல்  13 தியாகிகள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர்.

மண்ணின் மானம் காக்கும் தியாகப் போராட்டத்தில் சிந்தப்பட்ட குருதியின் ஈரம் காய்வதற்குள், மீண்டும் ஸ்டெர்லைட்டைத் திறக்க சதி நடக்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக்கு குழு கடந்த செப்.23 அன்று தூத்துக்குடியில் மக்கள் கருத்தைக் கேட்டநிலையில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மனுக்கள் அளித்தோம். ஸ்டெர்லைட் கைக்கூலிகள் பயந்து ஓடி ஒளிந்தனர்.

படிக்க:
ஸ்டெர்லைட் திறக்க சதி : ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிப்பாராம் – பசுமை தீர்ப்பாயம் ஆணை !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி ! மக்கள் அதிகாரம் அறிக்கை

ஆனால், நாளை 05.10.2018 சென்னை எழிலகத்தில் நடைபெறவுள்ள அடுத்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் தங்கள் வேலையைக் காட்ட உள்ளனர். இதற்காக தூத்துக்குடியில் இருந்து தனிப் பேருந்துகள், வேன்கள், ஒரு சில ஸ்டெர்லைட் ஆதரவு கைக்கூலி வழக்கறிஞர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ஸ்டெர்லைட்டால் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கறிஞர்களுக்கு ரூ.50,000/- மற்றவர்களுக்கு ரூ.10,000/- வழங்கப்படுகிறது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதே இவர்களது கோரிக்கை.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டை ஆதரிக்கிறோம் என்ற தோற்றத்தை சென்னையில் உருவாக்க நினைக்கிறார்கள். உண்மையில் நாளைய தினம் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களும், தமிழக அரசும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக ஸ்டெர்லைட் நிர்வாகம் கைக்கூலிகளைத் திரட்டி வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை கைக்கூலிக் கூட்டம் மூலம் அச்சுறுத்த நினைக்கிறது. இதனை நாம் அனுமதிக்கக் கூடாது.

எனவே, சென்னை வாழ் தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள், சென்னையில் உள்ள அனைத்துக் கட்சிகள், அமைப்புகள், வணிகர், மீனவர் சங்கங்கள், மாணவர்கள், சென்னை வாழ் பொதுமக்கள் என ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் நாளை எழிலகம் வர வேண்டும்.

நாங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுக்கள் தயாரித்துக் கொண்டு வருகிறோம். அதில் கையொப்பமிட்டு பசுமைத் தீர்ப்பாய ஆய்வுக் குழுவிடம் சமர்ப்பித்து, ஸ்டெர்லைட் சதியை முறியடிக்க வேண்டும்.

13 தியாகிகள் நினைவை நெஞ்சில் ஏந்தி அனைவரும் அணிவகுப்போம்!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு

தொடர்புக்கு:
9443584049, 8608723457, 9791123059, 9629373089, 7708970270