குடந்தை, கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியை சேர்ந்த நத்தம் என்னும் கிராமத்தில், முதன்மைச் சாலையிலிருந்து, ஊரின் உள்ளே வரை 1,500 மீட்டர் நீளத்திற்கு சாலை உள்ளது. (இவ்வூரில் தான் குடந்தை பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள் அதிகம்).

இப்பகுதியில் உள்ள சுவாமிநாதன் என்ற தனிநபர் அந்த ரோட்டில் மூன்று இடங்களில், தன் விவசாய நிலத்திலிருந்த நீர் வடிய, பள்ளத்தை வெட்டியுள்ளார். அதை ஒழுங்காக மூடாமல், சேற்றை கொண்டு மூடியுள்ளார். சில தினங்களுக்கு முன் அக்கிராமத்திலிருந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அந்த ரோட்டின் வழியாக கொண்டு சென்ற போது, பள்ளத்தில் வாகனம் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு அங்கேயே குழந்தையும் பிறந்தது.

மேலும், அந்த சாலையால் நிறைய வாகன விபத்து நடக்கின்றது. மக்கள் ஊராட்சி மன்றத்திடம் பல முறை முறையிட்டும், ஊராட்சி மன்ற அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், மக்கள் ஆத்திரத்திலிருந்தனர். இந்த நேரத்தில் தான் அக்-06 அன்று, சமையல் எரிவாயுவை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, அந்த சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்துவிட்டது.

படிக்க:
திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!
சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்

இதைப்  பார்த்த கிராம மக்கள் அன்று இரவு 8 மணிக்கு குடந்தை – சென்னை  சாலையில் மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும், மக்கள் அதிகார குடந்தை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெயபாண்டியன், போராட்ட இடத்திற்கு சென்று, மக்களுக்கு ஆதரவாக முன்னின்று, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.  இப்பிரச்சனையை உடனடியாக உரிய நேரத்திற்குள் தீர்த்து வைக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக போராட்டம் தொடரும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.


குடந்தை, பேச: 9789261624.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க