இந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி

செப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி கோவை பிரியா ஆகியோரின் உரை கானொளி.

“வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க….. ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணத்தின் ஒரு பகுதியாக கடந்த செப்டம்பர் 26, 2018 அன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினர். இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்டக்கல்லூரி மாணவி பிரியா ஆகியோரது உரை இப்பதிவில் இடம்பெறுகிறது.

இது சுதந்திர நாடா?

அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா அவர்கள் பேசுகையில்,  “கொத்தடிமை – குழந்தை தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா. இது சாதியத்தோடு பின்னிப் பிணைந்த ஒரு முறையாக உள்ளது. இது பெண்ணடிமைத்தனத்தோடு பிணைந்து விட்டது. இந்தக் கொடுமையைப் பார்க்கும்போது இது சுதந்திர நாடா என்ற கேள்வி எழுகிறது. தொழிலாளர்கள் சட்டத்தை திருத்தி தொழிலாளர்களை அடிமையாக்குகிறது இந்த அரசு.  வளர்ச்சி என்ற பெயரில் விவசாயத்தை அழித்து, நகரத்தில் குடிசையை அகற்றி வேலையில்லாதவர்களாக மாற்றுகிறார்கள்.  உழைக்கும் மக்களின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. எனவே இந்த வாழ்வாதாராம் பாதுகாக்க நிலம் உறுதி செய்யப்பட்டாக வேண்டும்.” என்றார்.

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான்

கோவை சட்டக் கல்லூரி மாணவி பிரியா, பேசுகையில்,  “குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் எப்படி இருக்குமோ அது மத்திய அரசு…  அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பத்து எட்டு அருவா.. என்பார்கள் அது தமிழக அரசுஒரு ஆட்சிய நடத்தத் தெரியாதவன் கிட்ட கொடுத்தா கம்பராமாயணத்த எழுதினவரு கூட சேக்கிழாரா மாறுவாரு

இந்தியா என்பதே ஒரு வன்முறைதான். அரசியலமைப்பு சட்டத்தில் அது ஒன்றியம் என்றே அழைக்கப்படுகிறது. அதனை எல்லாம் ஒருங்கிணைத்து இந்தியா என்றார்கள். இந்தியா என்று அழைத்தால் இந்துஇந்திஇந்தியா என்று அழைத்தாக வேண்டும் என்று நமக்கு பதிய வைக்கப்படுகிறது. எனவே  நாமே அதற்கு வழி வகுக்கக் கூடாதுவன்முறை இருக்கிறதென்றால் அந்த வன்முறை யாரால் யாருக்காக நடத்தப்படுகிறதுஅம்பானி அதானி போன்றோருக்காக நடத்தப்படுகிறது. அதற்கு நாம் அமைதியாக இருக்க வேண்டும். இந்த அமைதி தான் அவர்களுக்கு பலமாகிறது. எனவே அந்த வன்முறையை நாம் ஒழிக்க வேண்டும்.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
போர்னோ : இருளில் சிக்கும் இளமை – புதிய கலாச்சாரம் மின்னூல்

இந்துத்துவத்துக்கு எதிரா தீர்ப்பு கொடுத்த லோயா மர்ம மரணம். அமித்ஷாவுக்கு ஆதரவா தீர்ப்பு கொடுத்தா ஆளுநர் பதவி கிடைக்கும். இது நீதித்துறையில் இருக்கும் வன்முறை. ஆக வன்முறை என்பது எல்லா இடங்களிலும் நிலவிக் கிடக்கிறது. எனவே நம்முடைய பயணம் அமைதியானதாக இருக்கக் கூடாது. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பது போல் இந்த இந்துத்துவ வன்முறையை ஒழிக்க புரட்சி என்ற வன்முறையை கையில் எடுக்க வேண்டும்என்றார்.

தோழர் கீதா மற்றும் கோவை பிரியா ஆகியோரின் முழுமையான பேச்சு காணொளி:

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க