நண்பர்களே….
சுமார் 200,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்றிலக்கியங்களிலும் இதையொட்டிய செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கது 1957 இல் GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS LIBRARY வெளியிட்டுள்ள “தூதுத் திரட்டு” என்ற தொகுப்பு நூல். அத்தொகுப்பில் உள்ள “சங்கரமூர்த்தி ஐயரவர்கள் விறலிவிடு தூது” என்ற நூலில் சில செய்திகள் பதிவாகி உள்ளன. Metoo போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களாக 1 அரசு அதிகாரிகள், 2 கோவில் அதிகாரிகள், 3 பணம் படைத்த பிரபுகள், 4 மிகப் பெரிய வணிகர்கள், 5 ஊர்கணக்குப் பிள்ளை, 6 கடைநிலை அரசு ஊழியர் 7 செல்வாக்குப் பெற்ற “பெரிய” மனிதர்கள் போன்ற பலருடைய குணாம்சங்களும் அவர்களை அனுசரிக்காத பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த நூலில் உள்ள அத்தகைய பகுதிகளில் (பக்.108,109,110,111) சிலவற்றை உங்கள் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன். இந்நூலினுள் பேசப்படும் பல செய்திகள் கொச்சையாகவும் பச்சையாகவும் உள்ளதால் நான் இதை இங்கு பதிவிடவில்லை. நூலை படிக்கவிரும்பும் நண்பர்களுக்கு இந்த இணைப்பை தருகிறேன். தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்: தூதுத்திரட்டு
படிக்க:
♦ #MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
♦ சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !
பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:
- பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
- கோவில் நிலம் சாதி
- பொய்யும் வழுவும்