சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 4

திருவள்ளூர் :

வம்பர் புரட்சி நாளை கொண்டாட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக 11.11.2018 அன்று குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது. முன்னதாக 21.10.18, 28.10.18 மற்றும் 04.11.18 ஆகிய தேதிகளில் வெட்டுகாலனி மற்றும் கம்மவர்பாளையம் பகுதிகளில் கைப்பந்து, கபடி மற்றும் சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், செஸ், கேரம், ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆர்வமாக கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து 11.11.2018 அன்று மாலை 04:30 மணி முதல் இரவு 09:00 மணி வரை கும்மிடிப்பூண்டியில் சிவம் GR திருமண மண்டபத்தில் நவம்பர் புரட்சி தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நவம்பர் புரட்சி நாள் சூளுரையாக ‘மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்!’ என்கிற முழக்கத்தின் கீழ் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நவம்பர் புரட்சி விழாவிற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் K.M. விகந்தர் அவர்கள் தலைமை தாங்கினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் J.அருள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கும்மிடிப்பூண்டி ஒருங்கிணைப்பாளர் திரு ப.நேசகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் தோழர் K.சரவணன், கும்மிடிப்பூண்டி வட்டார வழக்கறிஞர்கள் சங்க துணைச்செயலாளர் வழக்கறிஞர் திருஇரா.வேலு, செந்தமிழ்ச் சோலை, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கவிஞர் சுரேஷ் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மேலும், CPM கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர், தோழர் E.இராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் தோழர் வீரபாண்டியன் மற்றும் தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திருமு.மணிபாலன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்குவதாக தெரிவித்திருந்தனர். எதிர்பாராத வேலைகள் காரணமாக அவர்கள் பங்கேற்கவில்லை.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். விழாவின் மைய முழக்கமான ஏகாதிபத்திய முதலாளித்துவத்தாலும், பார்ப்பன பாசிசத்தாலும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும், பாசிச அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தினார்.

மேலும், முதலாளித்துவம் உலகம் முழுவதிலும் அழுகி நாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், இதற்கு மாற்று சோசலிசம்தான் என்பதை புரட்சிக்கு பிறகு சோசலிச ரசியா நடைமுறைப்படுத்திய அரசியல், பொருளாதார பண்பாடுகளுடன் ஒப்பிட்டு விளக்கினார். இந்திய மண்ணிலும் சோசலிச அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை வலியுறுத்தியதோடு, அதற்காகப் பாடுபட நாம் அனைவரும் இந்த நவம்பர் புரட்சி விழாவில் சபதமேற்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சிறப்புரையை தொடர்ந்து கங்கை அம்மன் நாடக மன்றம் நிகழ்த்திய ‘நரகாசுரன் ரிடர்ன்ஸ்’ என்கிற தலைப்பில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நரகாசுரன் கதாபாத்திர வேடம் அனைவரையும் மிகவும் ஈர்த்தது. அதைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட T.K.வரதராஜ ஆசான் சிலம்பம் கலைக்கூடம் சார்பில் சிறுவர்கள் நிகழ்த்திய சிலம்பாட்ட நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், சிறுவர்கள் நிகழ்த்திய உரைவீச்சு, பாடல், திருக்குறள் வாசிப்பு என அனைத்து நிகழ்ச்சிகளும் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் உற்சாகத்தையும், உணர்வையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.

விழா இறுதியில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் விழாக்குழு சார்பில் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளார் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 9444461480.

விழுப்புரம் :

விழுப்புரம் – அயனம்பாளையம் கிராமத்தில் உழைக்கும் மக்களின் உற்சாகத் திருவிழாவாக மாறிய நவம்பர் – 7. 

தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம். தொடர்பு:91593 51158.

வேதாரண்யம் :

101-வது நவம்பர் 7 ரசிய புரட்சியை கொண்டாடும் வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நவம்பர் 11-ம் தேதி அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

பகுதிமக்கள், ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள் என 80-க்கு மேற்பட்டவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மண்டபம் முழுவதும் புரட்சிகர முழக்கங்களும், சமூக அவலங்களை எடுத்துக்கூறும் ஒவியங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் மணி தலைமையில் நடைபெற்ற இவ்விழா பள்ளி மாணவர்களின் பறையிசை முழக்கத்துடன் தொடங்கியது. ஈஸ்வரி சிலம்பாட்ட குழுவின் சிலம்பாட்டம் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

மக்கள் அதிகாரம் அமைப்பின் பட்டுக்கோட்டை வட்டார கமிட்டி ஒருங்கிணைப்பாளர் தோழர் மாரிமுத்து மற்றும் இளம் விவசாயி தோழர் சோம சுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். மத்திய மாநில அரசுகள் எப்படி திட்டமிட்டு விவசாயத்தை அழிக்க துடிக்கிறது என்பதை தமது உரையில் குறிப்பிட்டனர்.

பள்ளி மாணவர்களின் புதிய விடியல் கலைக்குழு சார்பாக நடத்தப்பட்ட பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம் நாடகம் வரவேற்பைப் பெற்றது. இக்குழுவினர் பாடல், நடனம் என பன்முக திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து, மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் காளியப்பன் மக்களுக்கு எளிமையாக புரியும் வகையில், ரசிய புரட்சியின் சாதனைகளையும் நமது நாட்டின் நிலைமைகளையும் நடைமுறை உதாரணங்களிலிருந்து  எடுத்து கூறினார்.

இறுதி நிகழ்வாக, பகுதியில் செயல்படும் ஜனநாயக சக்திகள் மற்றும் போராடும் புரட்சிகர அமைப்பிற்கு ஆதரவளிக்கும் முன்னணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும்,  நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தகவல்: புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். தொடர்புக்கு: 63837 46095.
தொகுப்பு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க