ஜா புயல் கரையைக் கடந்தாலும் அதன் பாதிப்புகள் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளன. கஜாவின் பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பகுதிகளிலிருந்து எமது செய்தியாளர்கள் அனுப்பியுள்ள தகவல்களை வெளியிடுகிறோம்.

நாகப்பட்டினம்

லைஞாயிறு, நாகைக்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் கடற்கரையை ஒட்டியுள்ள ஊர். சுமார் 500 வீடுகளைக் கொண்ட தலைஞாயிறு ஞானாம்பாள் கோயில் தெரு. அனைத்து வீடுகளின் கூரைகளும் கஜா புயலால் பெயர்த்து எடுத்து வீசப்பட்டுள்ளன. பக்கத்தில் உள்ள தங்களது விவசாய நிலங்களைக்கூட பார்க்க போக முடியவில்லை. மரங்களை அப்புறப்படுத்தி எங்களது வாழ்விடங்களை சரி செய்வதிலேயே நேரம் போய்க் கொண்டிருக்கிறது என்று கவலையோடு தெரிவிக்கின்றனர்.

ஓடுகளும் கம்புகளும் தூக்கியெறியப்பட்ட நாகரெத்தினம் வீடு

மரங்கள் முறிந்து கிடக்கும் ஞானாம்பாள் கோயிலின் குளக்கரை.

மின்கம்பங்கள் மரங்களும் முறிந்து கிடக்கும் கொல்லர் தெரு.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரபுலம் அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள நிவாரண முகாமில் 16.11.2018 அன்று இரவு எடுக்கப்பட்ட வீடியோ.

மக்கள் தாங்களாகவே சொந்த முயற்சியில் தொடக்கப்பள்ளியில் இடம் கேட்டு தஞ்சமடைந்துள்ளதாகவும், தங்களுக்கான உணவையும் தங்களது சொந்தப் பொறுப்பிலேயே ஏற்பாடு செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார், பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன்.

***

படிக்க:
கரை கடந்த கஜா புயல் – கலங்கி நிற்கும் மக்கள் | Live Updates | நேரலை
அன்று சென்னை, கடலூர் ! இன்று குமரி ! மக்களைக் காப்பாற்ற வக்கற்ற அரசு !

திருக்கடையூர் அருகே உள்ள வேப்பஞ்சேரியில் பனைமரம் வேருடன் மின்கம்பத்தில் சாய்ந்ததால் மின்கம்பிஅறுந்து  விழுந்து கிடக்கிறது . அரசு அதிகாரிகள் எவரும் வராத நிலையில், மக்களே அதை அகற்றி சாலையை சுத்தம் செய்துள்ளனர்.

திருவெண்காடு அருகே திருவாலி மெயின்ரோட்டில் 30 ஆண்டுகால புளியமரம் வேருடன் சாய்ந்து கிடக்கிறது.

***

திருவாரூர்

ச்சிமேடு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள்.

திருத்துறைப்பூண்டி நகரில் ஏற்பட்ட பாதிப்புகள்.

கட்டிமேடு கிராமத்தில் நேற்று 16.11.2018 மாலை எடுக்கப்பட்ட வீடியோ.

பேருந்து சேவை முடக்கப்பட்டு வெறிச்சோடிக் கிடக்கும் திருவாரூர் பேருந்து நிலையம்.

தஞ்சாவூர்

ஜா புயலின் சீற்றத்தில் பட்டுக்கோட்டை தங்கவேல் நகர் பகுதியில் மசூதி இடிந்து விழுந்தது. மசூதி இடிந்து கிடந்த காட்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க