ஞ்சை ஒரத்தநாடு பகுதியில் அமைந்துள்ளது நெய்வாசல் பகுதி. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்பகுதி மக்களுக்கு இன்றுவரை தண்ணீர், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவும் செய்யப்படவில்லை.

இதுவரையில் அரசு அதிகாரிகள் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை. 5 நாட்களாகியும் தண்ணீர் கூட ஏற்பாடு செய்யாத அரசைக் கண்டித்து தஞ்சை – மன்னார்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் இப்பகுதி மக்கள்.
இன்று (20.11.2018) காலை 9 மணியிலிருந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சுமார் அரை கிலோமீட்டருக்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. ஆம்புலன்ஸுக்கும், ஊடக வாகனங்களுக்கும் மட்டுமே வழிவிட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசு மக்களை கலைந்து போகக் கூறியது. கலைந்து செல்ல மறுத்த மக்கள், அரசு அதிகாரிகள் அங்கு வந்து தமக்கு பதில் சொல்ல வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றனர். உடனடியாக அரசு அதிகாரிகள் அங்கு வந்து தமது அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உறுதியாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

நேற்று 19.11.2018 அன்று ஒரத்தநாடு வந்த அமைச்சர் செங்கோட்டையன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிக்கத்தோடு வாதிடும் மக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க