ட்டுக்கோட்டையிலிருந்து தம்பிக்கோட்டை செல்லும் வழியில் இருக்கிறது கிருஷ்ணாபுரம். செல்லும் வழி எங்கும் சாலைகளில் உள்ள மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. தென்னை மரங்கள் எல்லாம் போரில் மடிந்த வீரர்களைப் போல் மடிந்து கிடக்கின்றன. குடிசை முதல் தகர ஷீட்டுகள், ஓடு, குடிசை வீடுகள் அனைத்தும் உருக்குலைந்து கிடக்கின்றன. சாலையில் பயணிக்கும்பொழுதே ஒரு மயான அமைதியை உணர முடிகிறது…

கஜா புயலின் கோரம் டெல்டா மக்களை துயரத்தின் விளிம்பிற்கு தள்ளியுள்ளது. தென்னை விவசாயிகள் மட்டுமல்ல தேங்காய் வியாபாரிகளும் தப்பவில்லை. அதில் வேலை செய்யும் தொழிலாளிகளின் நிலையோ நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

கிருஷ்ணாபுரத்தில் சாலையோரம் இருந்த கிடங்கில் மலைபோல் குவிந்து கிடந்தன தேங்காய்கள். எதிரே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் பாதி ஏற்றியும் மீதி ஏற்றுவதற்கும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம் பேசியதும் உரிமையாளர் வெளியில் சென்றிருப்பதாக  சொல்லி விட்டு வேலையில் மும்முரமானார்கள்.

வேகவேகமாக வந்த உரிமையாளர், தொழிலாளிகளைப் பார்த்து “இதை ஏன் மூடி வச்சிருக்கிங்க. இது என்ன கொப்பரையா?” என்றார். ஆமாம் என்று சொல்லிக் கொண்டே வேலையை செய்தனர் தொழிலாளிகள். பிறகு நம்மைப் பார்த்து அவசரமா வெளியில போறேன். சீக்கிரம் சொல்லுங்க என்ற தொனியில் கேட்டுவிட்டு தொடர்ந்தார் ராமலிங்கம். “நாங்க தோப்புல நேரடியாக கொள்முதல் செய்வோம். ஒரு காய் 12,13-க்கு எடுப்போம். அதனை எடுத்து வந்து நன்றாக காய வைத்து, பின்னர் அதனை உரித்து விடுவோம். உரித்த மட்டையை நார் ஃபேக்டரிக்கு அனுப்பி விடுவோம். அதில் ஒரு வருமானம் கிடைக்கும்.

இங்கு தொழிலாளர்களுக்கு தினந்தோறும் வேலை இருக்கும்.  ஒரு ஆள் 1,500 காய் உரிக்க வேண்டும்.  இயந்திரம் எதுவும் கிடையாது. கையால்தான் உரிக்க வேண்டும். அதனை 50 கிலோ மூட்டையில் 60 காய் அடங்கிய தேங்காயை பேக் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி விடுவோம். முக்கியாமாக ஒரிசா, பீகார், ஜார்கண்ட், பாட்னா, ஆந்திரா மற்றும் நேபாளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும். அந்த லாரியில் 16 முதல் 24 டன் வரை அனுப்பி விடுவோம்.

இங்கிருந்து ஆந்திரா அனுப்ப வேண்டுமானால் லாரி வாடகை, ஏத்துக்கூலி, இறக்கு கூலி எல்லாம் சேர்த்து 35,000 ஆகிவிடும். இந்த செலவு எல்லாம் போக கிடைப்பதைக் கொண்டு தென்னை உற்பத்தியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து விடுவோம்.

சில உற்பத்தியாளர்களுக்கு முன்னதாகவே முன்தொகை கொடுத்து வைத்திருப்போம். அவர்கள் எங்களிடம் மட்டும்தான் காய் கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் வியாபாரத்தை நடத்தி வந்தோம். இதனால் தொடர்ந்து தடையில்லாமல் காய் கிடைத்து வந்தது. ஆனால் இனிமேல் அது முடியாது.  வியாபாரி – விவசாயம் எல்லாம் முடிந்து விட்டது. தோப்புக்காரர்களுக்கு அட்வான்ஸ் சில இலட்சங்கள் கொடுத்திருக்கிறோம். தென்னையே அழிந்துவிட்ட பிறகு அதையெல்லாம் எப்படி வசூலிப்பது என்று தெரியவில்லை. ஒன்னுமே புரியவில்லை!

படிக்க:
ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து ! பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் !!
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

வினவு களச் செய்தியாளர் இந்தப் புயலால் பெரிய வியாபரிகளுக்கு ஒரு கோடி ஒன்னரை கோடி வரையும், எங்களைப் போன்ற சிறு வியாபாரிகளுக்கு 50 லட்சம் வரை பெருத்த நஷ்டம்! நாங்களாவது பரவாயில்லை. எப்படியோ பிழைத்துக் கொள்வோம். ஆனால் எங்களை நம்பி இருக்கும் இந்தத் தொழிலாளிகளின் நிலைதான் மோசம்” என்கிறார்!

1 மறுமொழி

  1. கஜா புயல் நிவாரண பணியில் இறங்க வேண்டும் – ஏன்?

    அன்பார்ந்த தொழிலாளர்களே! 24.11.2018

    தானே புயல், வர்தா புயல், சென்னை மழை வெள்ளம் காலங்களை போலவே இப்போதும் கஜா புயல் மீட்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை!

    கஜா புயல் தாண்டவத்தால் வீடிழந்து, உடைமையிழந்து, ஆடு, மாடு, மரங்கள் பொருளாதாரத்தை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாகிவிட்டனர், மக்கள்!

    GST உட்பட வரிகள் மூலம் ஆண்டு 20 லட்சம் கோடிகள் வரை வழிப்பறி செய்யும் அரசுகள் மக்களை காப்பாற்ற பாதுகாப்பு படை, வாகனங்கள் ஏதும் அனுப்பத் தயாரில்லை!

    *அரசின் மெத்தனப் போக்கிற்கு அகநிலைக் காரணம் என்ன?*

    1. மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கை மக்களையும் நாட்டையும் சூறையாடி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதாக உள்ளது.

    மீத்தேனுக்காக டெல்டா மாவட்டங்களை விழுங்க
    குறிவைத்து கார்ப்பரேட் கம்பெனிகள் காத்திருக்கிறது.

    2. அரசியல் ரீதியாக எல்லா தேசிய இன மக்களையும் அடிமையாக்க ஆரிய பார்ப்பன- பனியா கும்பல் வரிந்து கட்டி நிற்கிறது

    உதாரணமாக: கல்வி உரிமை பறிப்பு, இன- மொழி அடையாளங்கள் அழிப்பு, தொடரும் சாதி படுகொலைகள் மனுதர்மம் நூலில் நூற்றாண்டுகள் முன் சொல்லப்பட்ட விஷயங்கள் நடைமுறையில் தீவிரமாகி கொண்டிருக்கிறது!

    சூத்திர சாதியினர் கால்நடைகள், உடைமைகள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று மனுதர்மம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. இதை நிரூபணம் செய்வது போல புயலில் வாழ்விழந்து நிற்கும் மக்களை வேடிக்கை பார்க்கிறது, அதிகாரவர்க்கம்!

    கார்ப்பரேட் சுரண்டல் கொள்கையும் ஆரிய மனு தர்மப்படி இயங்கும் அரசுகள் மக்களுக்கு எப்படி சேவைகள் செய்யும்?

    கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் செயல்படும் இந்த அரசு கட்டமைப்பில் மக்களுக்கு எந்த பிரச்சனைக்கும் முழுத் தீர்வும் நிவாரணமும் கிடையாது!

    *கஜா புயல் நிவாரணப் பணியில் இறங்குவோம்!*
    *மக்களின் துயர் துடைத்து பாதுகாப்போம்!*
    *மாற்று அதிகாரங்களை கட்டியமைப்போம்!*

    புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
    கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்.
    தொடர்புக்கு: 97 88 01 17 84.

Leave a Reply to nellaiyappan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க