த்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. பொய் வாக்குறுதிகள் வெளுத்துவிட்ட நிலையில், விளம்பரங்கள் மூலம் சரிந்த போன பிம்பத்தை தூக்கி நிறுத்தப் பார்க்கிறது பா.ஜ.க.

பார்க் (Broadcast Audience Research Council (BARC) வெளியிட்ட சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, நெட்ஃபிளிக்ஸ், ட்ரிவாகோ விளம்பரங்களை பின்னுக்கு தள்ளி, பா.ஜ.க. விளம்பரங்கள் முதல் இடத்தை பிடித்திருக்கின்றன.  நவம்பர் 16 -ந் தேதி முடிந்த வாரத்தில் அமேசான், இந்துஸ்தான் லீவர் விளம்பரங்கள் அதிகமாக ஒளிபரப்பப்பட்டன.  இந்த வாரத்தில் விமல் பான் மசாலா விளம்பரத்தை முந்தியுள்ளது பா.ஜ.க.  இந்த புள்ளி விவரத்தின்படி, காங்கிரஸ் கட்சியானது அதிகமாக ஒளிபரப்பான முதல் 10 விளம்பரங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

படிக்க:
கஜா புயல் : எடப்பாடி பறந்து பார்த்தார் – மோடி வராமலேயே பார்த்தார்
தேர்தல் 2019 : சங்க பரிவாரத்தின் அடுத்த தூண்டில் – ராமர் கோவில் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நவம்பர் 10-16 வரை பா.ஜ.க. விளம்பரங்கள் 22, 099 முறை ஒளிபரப்பாகியுள்ளன. இரண்டாம் இடம் பிடித்துள்ள நெட்ஃபிளிக்ஸ் விளம்பரம் 12,951 முறை ஒளிபரப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்துக்கும் முதல் இடத்துக்குமான வித்தியாசம் இருமடங்காக உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் விளம்பரங்களுக்கு மட்டுமே ரூ. 4300 கோடி மோடி அரசு செலவழித்ததாக ஆர்.டி.ஐ.  தகவலில் தெரியவந்தது.  மக்களுக்கு நல்லது செய்ய வக்கற்ற மோடி அரசு, தனது பலவீனங்களை மறைக்க மக்கள் பணத்தை வாரி இறைக்க தயாராகி வருகிறது.

செய்தி ஆதாரம்:
♦ BJP Beats Netflix And Amazon To Become The Top Advertiser On Indian Television: Report

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க