தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்னவெல்லாம் செய்வோம் என ஓட்டுக்கட்சி வேட்பாளர்கள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுண்டு. இலவசங்கள், கடன் தள்ளுபடி இத்யாதி, இத்யாதி வாக்குறுதிகள் தேர்தல் களத்தில் அரதப் பழசாகிவிட்டன போலும். நடைபெறவிருக்கும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், இந்து பார்ப்பனியத்தின் பழைய சரக்கான குழந்தை திருமணத்தைஏகபோகமாக அனுமதிப்பேன் என வாக்குறுதி அளித்திருக்கிறார்.

ராஜஸ்தானின் சொஜாட் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சோபா சவுகான், தான் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தமாட்டேன் என்கிறார்.  தேர்தல் பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசியபோது சோபா இதை தெரிவித்தார். தேவாசி என்ற சாதியினர் அதிகமாக குழந்தைத் திருமணங்களை நடத்துகின்றனர். இந்தத் திருமணங்கள் போலீசு தலையீட்டால் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன. எனவே, தன்னைத் தேர்ந்தெடுத்தால் போலீசு தலையிடாமல் பார்த்துக்கொள்வேன் என்கிறார். இந்த வாக்குறுதியை சோபா சத்தியம் செய்து கூறும் வீடியோ சமூக ஊடகங்கள் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.  

அதிகாரமும் மாநில அரசும் நம்மிடம் இருக்கும்போது, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த போலீசை அனுமதிக்க மாட்டோம்என்கிறார் சோபா, அந்த வீடியோவில்.

படிக்க:
♦ இராஜஸ்தான் : பெண்களின் உரிமைகளை மறுக்கும் மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா !
♦ பாஜக-வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள் !

ராஜஸ்தான் பாஜக வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி தமிழ் முகநூலிலிருந்து இந்தியா முழுக்க கண்டனங்களை கிளப்பி விட்டிருக்கிறது. குழந்தை திருமணங்கள் அதிகம் நடக்கும் ராஜஸ்தானில், அத்தகைய பழமையான இந்துத்துவ கலாச்சாரத்தை தடுத்து நிறுத்த, சிறப்பு சட்டங்கள் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளன. பாஜக ஆண்ட அந்த மாநிலத்தில் அவையெல்லாம் ஏட்டளவில் உள்ளதை பாஜக வேட்பாளரின் வெளிப்படையான, வெட்கமற்ற அறிவிப்பு எடுத்துக்காட்டுகிறது.

சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது, குழந்தை திருமணம் வேண்டும் எனக் கூறிவரும் சங்க பரிவாரக் கும்பல், அடுத்து உடன்கட்டை ஏறும் சதி வழக்கம் வேண்டும் என்றுகூட கேட்டுக் கலவரம் செய்யலாம். காவி மதவாதக் கட்சியிடமிருந்து இதைத் தவிர சீர்திருத்தத்தையும் புரட்சியையுமா எதிர்பார்க்க முடியும்?

மேலும் படிக்க:
Rajasthan polls: BJP candidate promises of no police intervention in child marriages if voted to power