கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை

''சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!'' என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கறிஞர் பாலன் வழங்கிய கருத்துரை.

மிழகத்தில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று மதுரையில் நடைபெற்றது.

வடக்கே அயோத்தியில் ராமனுக்குக் கோவில் தெற்கே சபரி மலையில் ஐயப்பன் கோவிலில் பெண்களுக்குத் தடை ஆகிய பிரச்சனைகளைக் கையிலெடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு – அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்து மதக் கலவரத் தீயை வளர்க்கத் தொடங்கி விட்டனர். நவம்பர் 25-ல் அயோத்தியில் திரண்ட மதவெறியர்கள் ‘ராமனுக்கு முதலில் ஆலயம் அதன் பிறகே அரசு’ என்ற முழக்கத்தை முன்வைத்து தடையை மீறி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். ராமர் கோவில் கட்ட தனிச்சட்டம் தயார் என்று ஆர். எஸ். எஸ். தலைவர் இந்திரேஷ்குமார் அறிவிக்கிறார்.

ஆர். எஸ் . எஸ் . இந்துமத வெறியைத் தூண்டும் சதியை அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றவர்களைத் சனாதன் சன்ஸ்தா என்ற மதவெறி அமைப்பு கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

பழங்குடி மக்கள், தலித்துகள், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடித்துச் சுற்றுச் சூழலை நாசமாக்கும் கார்ப்பரேட்களுக்கு அரணாக நிற்கும் மோடி அரசு அவற்றை எதிர்த்துப் போராடும் மக்களைக் காவல் படைகளை ஏவிப் படுகொலை செய்கிறது.

இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்திருந்தது இக்கருத்தரங்கம்.

”சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!” என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கறிஞர் பாலன் வழங்கிய கருத்துரை.

முதல் பாகம் :

இரண்டாம் பாகம் :

முகநூலில் பார்க்க :

முதல் பாகம் :

இரண்டாம் பாகம் :

 


தொகுப்பு: வினவு களச் செய்தியாளர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க