ந்தப் புத்தகத்தை புத்தகக் கண்காட்சி துவங்குவதற்கு முன்பே வாங்கிவிட்டேன். கிட்டத்தட்ட படித்து முடிக்கப் போகிறேன்.

பொருளாதாரம் குறித்து எழுதப்படும் புத்தகங்களை இதைவிட எளிதாக எழுதுவது மிகக் கடினம்.

நாட்டையே தெருவில் நிறுத்திய பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து வெகுமக்களுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகமாக இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த இந்த நடவடிக்கையினால், அமைப்புசாரா தொழில்துறையில் இருந்த கோடிக்கணக்கான இந்தியர்கள் எப்படி நடுத்தெருவுக்கு வந்தார்கள், விவசாயிகளும் வர்த்தகர்களும் எப்படி கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்கள். சிறிய, நடுத்தரத் தொழில்கள் நாசமாகிப்போயின என்று எளிய ஆங்கிலத்தில் விளக்குகிறார் மீரா சன்யால்.

உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளில் எல்லாம் இதற்கு முன்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்திருக்கிறது, அவை பலனளிக்காமல் போனது, இந்தியாவில் இதற்கு முந்தைய பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்று ஒரு சுவாரஸ்யமான களஞ்சியம் இந்தப் புத்தகம்.

புள்ளிவிவரம், ஆய்வு, தகவல்கள், வரலாறு எல்லாம் ஒருங்கிணைந்த இந்தப் புத்தகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன், எதற்காக, எப்படிச் செயல்படுத்தப்பட்டது என்று விளக்குகிறது.

படிக்க:
♦ கிரெடிட் கார்டு வல்லரசாகும் ஏழை இந்தியா ! – தோழர் மருதையன் உரை !
♦ எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

புத்தகத்தை எழுதிய மீரா சன்யால், இந்தியாவின் சிறந்த வங்கி அதிகாரிகளில் ஒருவர். ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் சிஇஓவாக இருந்தவர். பொருளாதார கொள்கைகளுக்கான தேசியக் கமிட்டியின் உறுப்பினர்.

A must read!!

ரூ. 600 விலையுள்ள புத்தகம் அமேசானில் 335 ரூபாய்க்கு கிடைக்கிறது!

அமேசானில் இப்புத்தகத்தை வாங்க…

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க