ஓடும் ரயிலில் மோடியை விமர்சித்தால் என்ன தப்பு ? | பக்தாளை சுற்றி வளைத்த பொதுமக்கள் !

”மோடியைக் கொல்ல சதியா ?” - புதிய கலாச்சாரம் இதழை மகஇக தோழர்கள் ரயிலில் விற்பனை செய்த போது இடைமறித்த சங்கியை சுற்றிவளைத்து விரட்டி அடித்த பொதுமக்கள் !

சென்னை ம.க.இ.க தோழர்கள் புதிய கலாச்சாரம் – ஜனவரி மாதத்திற்கான “மோடியை கொல்ல சதியா?” இதழை தாம்பரம் – கடற்கரை இரயிலில் விற்பனை செய்து வந்தனர். இது போன்ற விற்பனையின் அவ்வப்போது பார்ப்பனர்கள் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டு, பொதுமக்களிடையே வாங்கிக் கட்டிக் கொள்வதுண்டு.

இந்த முறை ஒரு மோடி பக்தாள், ’வாலண்டியராக’ வந்து வாயைக் கொடுத்திருக்கிறார். ”ஒரு நாட்டின் பிரதமரைப் பற்றி எப்படி தவறாக பிரச்சாரம் செய்யலாம்?” என்று கேட்டுக் கொண்டே, விற்பனையில் ஈடுபட்ட தோழர்களை வீடியோ எடுக்கத் தொடங்கியிருக்கிறார் அந்த பக்தாள். விற்பனைக்கு சென்ற தோழர்கள், “ஒரு நாட்டின் பிரதமரை விமர்சிக்க அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு” என்று கூறி மக்களிடையே அந்த பக்தாளையும் மோடியையும் அம்பலப்படுத்தி பத்திரிகை விற்பனையில் ஈடுபட்டுவிட்டு அடுத்த பெட்டியில் ஏறினர்.

விடாமல் அடுத்த பெட்டிக்கும் வந்து நின்ற மோடி பக்தாள், அங்கும் மோடிக்கு எதிராக எப்படி பேசலாம் என ’சவுண்டு’ கொடுக்கத் தொடங்கினார். இந்த முறை நமது ம.க.இ.க தோழர்கள் வாய் திறப்பதற்கு முன்னால், பொதுமக்கள் வாய் திறந்துவிட்டனர்.

அந்த சூழலில் பல வகைப்பட்ட எதிர்வினைகளைக் காண முடிந்தது. ”அவர்களை ஏன் நிறுத்தச் சொல்கிறீர்கள், உங்களுக்கு மோடி நல்லவர் என்றால் அதை தனியாகப் பேசுங்கள். அவர்களை நிறுத்தச் சொல்லாதீர்கள்” என்றார். இன்னொருவரோ, மோடியை கழுவி ஊற்றிவிட்டு, பக்தாளை அமைதியாக இருக்கும் படி எச்சரித்தார். ஒரு வேளை மோடியை மக்கள் அசிங்கமாகப் பேசி அதனைக் காது குளிர கேட்கவேண்டும் என நெடுநாள் ஆசையில் அந்த பக்தாள் இருந்தாரோ என்னவோ, தெரியவில்லை. பக்தாள் முகத்தில் ஈயாடவில்லை.

ஒரு இளைஞர் பக்தாளிடம் நேரடியாகப் போய், மோடி என்ன செய்தார் தெரியுமா? உனக்கு பட்டியலிடட்டுமா? என்று கேள்வி எழுப்பினார். வேறு வழியின்றி அந்த பக்தாள் செருப்படி படாத குறையாக அப்பெட்டியிலிருந்து வெளியேறினார்.

விற்பனையில் ஈடுபட்டிருந்த தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, பொதுமக்கள் பாராட்டிச் சென்றனர்.

*****

மோடியைக் கொல்ல சதியா ? – பக்கங்கள் : 80 விலை ரூ. 30.00

புதிய கலாச்சாரம் – பிப்ரவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

5 மறுமொழிகள்

 1. இப்ப எல்லாம் மோடியை பத்தியோ, பார்ப்பான் செய்யுற அராஜகத்தை பற்றியோ பேசினா கருப்பு சூத்திர நாய்கங்க தான் கொலச்சுகிட்டு வருதுங்க. பாருங்க தோழர்கள் கிட்ட எப்படி ஒரு நாய் குறைக்கித்தின்னு …

  • சூத்திர நாய்கள் ???? நீங்கள் பேசுவது தவறு சரியல்ல

   பிரதமரை விமர்சிக்க எப்படி வினவு கூட்டங்களுக்கு உரிமைகள் இருக்கிறது என்று நினைக்கிறார்களோ அதே போல் பிரதமரை பற்றி பொய்களையும் அவதூறுகளையும் சொல்லாதீர்கள் என்று சொல்வதற்கு அவருக்கும் உரிமைகள் உள்ளது.

   வினவு கூட்டங்கள் என்றாலே பொய்கள் தானே அவர்களிடம் என்று நேர்மையும் உண்மையும் இருந்து இருக்கிறது.

   • பிரதமர் என்று வந்த பிறகு விமர்சனங்களை ஏற்க தான் வேண்டும். வினவு குழுவினர் கூறுவதில் தவறிருந்தால், பதிலுக்கு இவர்கள் அதனை நிரூபிக்கட்டும் .. அதை விட்டு பிரதமரை பற்றி விமர்சனமே செய்ய கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது….

    • சட்டப்படி அவதூறு பரப்புவது தவறு… இங்கே ஜனநாயகம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அடுத்தவரை அவதூறாக பேசலாம் பொய் சொல்லலாம் என்ற நிலை தான் உள்ளது.

     விமர்சனம் தவறில்லை ஆனால் அந்த விமர்சனத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு ?

 2. பல்லாயிரகணக்கான சோறு போடும் விவசாயிகள் டில்லியில் கொளுத்தும் வெயிலில் கூடியபோது, அவர்களை பார்க்கவராமல், ப்ரியங்கா சோப்ராவின் என்கிற நடிகையின் காலை நக்க சென்ற மோடியை இன்னும் கூட கேவலமாக செருப்பால் அடிப்பதில் தவறில்லை.. தொடரட்டும் இந்த திருப்பணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க