கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் – மாநாட்டுக்குத் தடை | பத்திரிகையாளர் சந்திப்பு – Live

மாநாட்டுக்கு அனுமதி மறுத்திருக்கும் திருச்சி போலீசின் சதித்தனத்தை அம்பலப்படுத்தும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு.

பத்திரிகையாளர் சந்திப்பு

அடக்குமுறைதான் ஜனநாயகமா? கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில்! என்ற தலைப்பில் திருச்சியில் 23.02.2019 அன்று மாநாடு நடத்தவிருக்கிறோம். இதில் எழுத்தாளர் அருந்ததி ராய், தீஸ்தா சேதல்வாத் ஆகியோர் பங்கேற்கவிருக்கிறார்கள்.

எமது மாநாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், திருச்சி நகர காவல்துறை மாநாட்டுக்கு மீண்டும் அனுமதி மறுத்திருக்கிறது. இந்த கருத்துரிமை பறிப்புக்கு எதிராக  பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

நாள் : 12.02.2019, செவ்வாய்.
நேரம் :  மதியம் 12 மணி
இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்.

கலந்து கொள்வோர்:

வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் அமிர்தா, சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

வினவு இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பப்படும்

இப்படிக்கு

மக்கள் அதிகாரம்
அமிர்தா,
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
தொடர்புக்கு: 91768 01656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க