ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் | காணொளி

“ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆற்றிய உரையின் காணொளி !

“ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் உரையாற்றினார். சனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு (CPDR – TN) சார்பில் கடந்த பிப்- 09  அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது.

அவர் பேசியதிலிருந்து சில பகுதிகள்…

”.. புதிதாக கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருக்க முடியாது. பாராளுமன்றமோ, சட்டமன்றமோ எந்தவொரு சட்டமும் இயற்ற முடியாது. இதனையும் மீறி கொடுஞ்சட்டங்கள் இங்கே இயற்றப்படுகிறதென்றால் அதற்கு என்ன காரணம் என்றுதான் முதலில் யோசிக்க வேண்டும்.

நாம் ரௌலட் சட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். நமது அரசமைப்புச் சட்டத்தின் கூறு 22 விசாரணையின்றி சிறையிலடைக்கும் சட்டங்களை சரி என்று சொல்கிறது. அதனால்தான், தூத்துக்குடி வழக்கில் அரிராகவனையும் வாஞ்சிநாதனையும் என்.எஸ்.ஏ.வில் கைது செய்ய முடிகிறது. குண்டர் சட்டம் போடப்படுகிறது.

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் ! ஏன் இந்த மாநாடு ?
ஸ்டெர்லைட் : கொலைக் குற்றவாளி போலீசாரை கைது செய் | இராஜு | தியாகு உரை | வீடியோ

மேற்கத்திய நாடுகளில் விசாரணையின்றி சிறைவைப்பதை அந்த அரசியலமைப்புச் சட்டமே இடம் அளிப்பதில்லை. நோய்நாடி நோய் முதல்நாடி என்ற வள்ளுவனின் குறளைப் போல காரணத்தை ஆராய வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் கூறு 22-ஐப் பற்றி பேசாமல் கொடுஞ்சட்டங்களைப் பற்றி மட்டும் பேசுவதில் பலன் இல்லை

அவரது பேச்சின் முழு காணொளியைக் காண …

பாருங்கள்! பகிருங்கள்!!

தகவல்:
வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன்,
செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
309/150, முதல் தளம், லிங்குச் செட்டித்தெரு,
பாரிமுனை, சென்னை-600 001
Ph: 9962366320, 9842812062
Email: chennaiprpc@gmail.com
Facebook: People’s Right Protection Centre, Chennai

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க