நீதித்துறை முதல் ஊடகங்கள் வரை ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களையும் கார்ப்பரேட் நலனுக்காக காவி மயமாக்கியிருக்கிறது சங்க பரிவாரம். எதிர்த்தால் கொலை! கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே… தொடர்கிறது பாசிசத்தின் பலிகள் ! மாட்டுக்கறியின் பேரில் அக்லக் முதல் பெஹ்லுகான் வரை தினமும் இந்துமதவெறியர்களால் கொல்லப்படுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் காவி பாசிசம் என்பது தேர்தலால் மட்டும் முடிந்து விடும் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் இத்தகைய பாசிசக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்து எதிர்ப்போரையும், சிறுபான்மையினரையும் ஒடுக்கி வருகிறார்கள். மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருளாதார நெருக்கடியின் சுமை உழைக்கும் மக்கள் மீது ஏவிவிடப்படுகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமாகட்டும், மீத்தேன் எதிர்ப்புப் போராட்டமாகட்டும், மீனவர்கள் கடற்கரையைக் காக்க நடத்தும் போராட்டமாக இருக்கட்டும்,  அல்லது எட்டு வழிச்சாலை நில அபகரிப்புக்கு எதிரான போராட்டமாக இருக்கட்டும்.. உழைக்கும் மக்களின் மீதான ஒடுக்குமுறைகளை தகர்த்தெறிய களம் காணுவோம் ! கருத்தறிய வாருங்கள் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! – மக்கள் அதிகாரம் திருச்சி மாநாடு !

நாள் : பிப்ரவரி 23, 2019
இடம் : உழவர் சந்தை மைதானம், திருச்சி

பேச்ச்சாளர்கள் :
எழுத்தாளர் அருந்ததி ராய்
பத்திரிகையாளர் தீஸ்தா செதல்வாத்
தோழர் மருதையன்
தோழர் ராஜு
தோழர் தியாகு
தோழர் ஆளூர் ஷாநவாஸ்
வழக்கறிஞர் பாலன்

மக்கள் கலை இலக்கியக் கழகக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் !

அனைவரும் வாரீர் !

தொழில்நுட்பப் பிரச்சினைகள் இல்லாத நிலையில் வினவு இணையதளத்திலும், முக நூல் பக்கத்திலும், யூ-டியூப் சேனலிலும் இம்மாநாடு நேரலையாக ஒளிபரப்பப்படும் !

பெரும் பொருட் செலவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாட்டிற்கு நிதி உதவி செய்யுங்கள் !

வினவு செய்திப் பிரிவு

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. கார்ப்பரேட் காவி பாசிசத்தை எதிர்த்த மக்கள் அதிகார போர் பறை முழங்கட்டும். இந்து மத வெறியர்களுக்கும் அதற்கு தலைவனங்கும் அரசு அதிகாரத்துக்கும் செவி கிழியட்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க