1. அந்த மூன்று நாள்கள் தீட்டாக இருக்கும் பெண்கள் புனிதமற்றவர்கள். அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

2. கிறிஸ்தவர், முஸ்லீம் முதலான இந்தியாவில் இருக்கும் தகுதியற்ற சிறுபான்மையினர் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

3. கீழான சாதியான சூத்திரர்கள் வாக்களித்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பதால் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பதை தவிர்க்கவும்.

4. இடஒதுக்கீட்டுக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதால் 69 சதவீத இடஒதுக்கீட்டில் பயனடையும் இந்துக்கள் எங்களுக்கு தீட்டானவர்கள், அவர்கள் எங்களுக்கு வாக்களிக்களிப்பது தடை செய்யப்படுகிறது.

5. மீத்தேன், எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம் ஆகியவற்றை எதிர்க்கும் விவசாய தீவிரவாதிகளின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

6. நீட்டை எதிர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் தயவு செய்து பிஜேபியாகிய எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.

7. ஒக்கி புயலின்போது ஏன் ராணுவத்தை அனுப்பவில்லை, கஜா புயலுக்கு ஏன் நிதியுதவி செய்யவில்லை என்று கேட்கும் ஆன்டி இன்டியன்ஸின் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

8. ஐந்து ரூபாய் கறுப்புப்பணத்தை மீட்க ஐயாயிரம் கோடி செலவு செய்வதா என்று கணக்கு கேட்கும் கபடதாரிகள் வாக்களிக்க தேவையில்லை.

9. வெளிநாட்டில் பதுக்கிய கறுப்புப்பணம் எங்கே, வங்கியில் போடுவதாகச் சொன்ன 15 லட்சம் எங்கே என்று அம்புலிமாமா கதைகளை நம்பி, இப்போதும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் அற்ப பதர்களின் வாக்குகளை பிஜேபி நிராகரிக்கிறது.

10. பெட்ரோல், டீசல் விலை உயர்வை பாரதத்தின் வளர்ச்சியாகப் பார்க்காத எட்டப்பர்களின் வாக்கு செல்லா வாக்காகவே கணக்கிடப்படும்.

11. கியாஸ் கட்டண உயர்வை கேள்வி கேட்பதா? உங்கள் வாக்கு உளுத்துப் போகட்டும்.

12. மாட்டுக்கறி வைத்திருந்ததாகக்கூறி அப்பாவிகளை அடிக்காத, கொலை செய்யாத எந்தவொரு நீச சக்தியின் வாக்கும் பிஜேபிக்கு ஏற்புடையதல்ல.

13. வெடித்த குண்டின் புகை அடங்கும் முன், குண்டின் எடையை துல்லியமாகச் சொன்ன பிஜேபியை சந்தேகிக்கும் ராமன்களின் வாக்குகள் (‘தலைவரே, ராமன் நம்ம பிராப்பர்ட்டி, அது தெரியாம இழுத்து விடறீங்களே?’ ‘ராவணன்னு சொல்லட்டா?’ ‘ராவணன் எப்ப ஓய் சொந்த பொண்டாட்டியை சந்தேகிச்சான்?’ ‘அப்ப என்னதான் ஓய் சொல்றது?’ ‘சொந்த பொண்டாட்டியை சந்தேகிச்சவனை கடவுள்னு சொன்னா இந்த மாதிரி பிரச்சனை வரத்தான் செய்யும்.’ ‘நீரு முட்டுக் குடுக்கிறவன் சொந்த பொண்டாட்டியை பொண்டாட்டின்னே சொல்லாம விலக்கி வச்சவன்தானே.’ ‘உண்மையை சொல்லாதேயும், கங்கையைவிட நாறுதா இல்லியா?’) அதாகப்பட்டது ராம விரோதிகளின் வாக்குகள் செல்லா வாக்காக கணக்கிடப்படும்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா… ? காவியா… ? | சென்னையில் நூல் அறிமுக விழா !
பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா !

14. கடைசியாக வந்தேறிகள், வாய்மை இல்லாதவர்கள் (‘ஓய் நிறுத்தும் ஓய். இவ்வளவு சொன்னதுக்கே 97 பர்சென்டேஜ் வோட்டு காலி. இருக்கிற 3 சதவீதத்திலயும் மண்ணள்ளிப்போட பார்க்குறீரா?’ ‘என்னவேய் சொல்றீரு?’ ‘வந்தேறி ஓட்டு வேண்டாம்னாக்கா, இருக்கிற மூணு பர்சன்டும் போயிடாது?’ ‘நல்ல நேரத்துல ஞாபகப்படுத்தினீரு. டெய்லி கோமியம் குடிச்சி புத்தி தடுமாறிச்சி ஓய்.’ ‘பச்சப் புள்ளையா இருக்கிறீரே. கோமியமெல்லாம் நம்ம காலை நக்கி குடிக்கிற கிச்சாமி கிழங்கனுக்கு. உமக்கு உடம்புக்கு நோவுன்ன நேரா அப்போலோவுல போய் படுத்துகிரும். இல்ல லண்டன், யுஎஸ்னு படிச்சவன்கிட்ட போய் வைத்தியம் பாரும். கோமிய குடுக்கி நம்ம பாபா ராம்தேவை பார்த்து படியும் ஓய்!’)

15. அதாகப்பட்டது எவன் எங்களுக்கு ஓட்டுப் போடலைன்னாலும், டிஜிட்டல் ஓட்டுப் பதிவு எங்களை பாதுகாக்கும் என்பதைக் கூறிக் கொண்டு… ஜெய்ஹிந்த், பாரத்மாதாகி ஜே.

முகநூலில் : John Babu Raj

1 மறுமொழி

  1. மொத்தத்தில் உண்மையை உணர்ந்தவர்கள் நேசிப்பவர்கள் யாரும் பா.ஜ.க கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டாம்.
    இந்த அரசு கட்டமைப்பு தோற்று தொங்கி விட்டதை அறிந்தார் எவரும் ஓட்டுப்போடுவரோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க