மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் | புதிய பாடல் வெளியீடு

மலர்ந்தே தீரும் ... தாமரை மலர்ந்தே தீரும் .. ஊரு தாலிய அறுத்தாவது வளர்ந்தே தீரும் .... இது தாமரை தமிழக மக்களின் தாலியறுத்ததைப் பற்றிய பாடல் ! பாருங்கள் ! பகிருங்கள் !

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த “தாமரை மலர்ந்தே தீரும்” பாடல், ரீ-ரிக்கார்டிங்கோடு காணொளி வடிவில் உங்கள் பார்வைக்கு …

பாடல் வரிகள் :

மலர்ந்தே தீரும்  …
தாமரை மலர்ந்தே தீரும் … (மலர்ந்தே தீரும்  …)

காவிரி வறண்டாலும்
கம்மா குளம் வத்தினாலும்

ஆறு புள்ளி கோலத்திலே
அக்கா வீட்டு வாசலிலே…  (மலர்ந்தே தீரும் …)

அதிமுக தோளு மேல
அஞ்சி சீட்டு தாண்ட முடியல
இதுல
நாற்பதும் மலருதாம்
நல்லா வருது சொல்ல முடியல (மலர்ந்தே தீரும் …)

மோடி சொன்ன பதினஞ்சி லட்சம்
அக்கவுண்டுல ஏறிடுச்சி
வருசத்துக்கு இரண்டு கோடி
வேலையும் வந்துருச்சி …

ஸ்கில்லு இந்தியா
மோடி பாலிசி …
ஆனா
பக்கோடா விக்க சொன்னாரு
பி.இ படிச்சி …

பணமதிப்பு அழிப்பாலே
குஜராத்தே புட்டுகிச்சி …
மோடி சொன்ன ஜி.எஸ்.டி
திருப்பூரும் செத்துருச்சி …

தறி உசுரு பிரிஞ்சிருச்சி
சிறு தொழிலும் அழிஞ்சிருச்சி
தாமரைய வச்சிசெய்யப் போறாங்க
நோட்டா மேல குந்தவச்சி …  (மலர்ந்தே தீரும்  …)

டெல்டா மாவட்டமே
புயலடிச்சி சாஞ்சிருச்சி…
ஸ்டெர்லைட்டுக்காக
பதிமூனு உசுரு போயிடுச்சி …

அப்போ எட்டிப் பாக்கல
மோடி எதுவும் சொல்லல …
அவர் ரொம்ப பிஸி
அம்பானி வீட்டு கல்யாணத்துல! (மலர்ந்தே தீரும் …)

மலர்ந்தே தீரும்
தாமரை மலர்ந்தே தீரும்
ஊரு தாலிய அறுத்தாவது
வளர்ந்தே தீரும் …

பாடல்:

பாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு
ஆக்கம் : வினவு

பாருங்கள் ! பகிருங்கள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

2 மறுமொழிகள்

  1. பாடல் அருமை ஆனால் இசையமைப்பு மெதுவாக போகிறது.இன்னும்
    கொஞ்சம் வேகமாக போகும்படி அமைத்திருக்கலாம்.
    எதிர்த்து நில் என்ற பாடலையும் ரீ- ரெக்கார்டிங் செய்து வெளியிடலாம்.அது உணர்ச்சியை எழுப்பக்கூடிய மற்றும் சமகால இளைஞர்கள் விரும்பி கேட்கும் படியான பாடல் அது.

  2. அருமை!!!
    இசையில் ‘தேசியகீதம் போட்டாச்சு எய்ந்து நில்லடா’ பாடலின் சாயல் தெரிகிறது. கலைக்குழுவினரின் திறமையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்து இவ்விமர்சனம்..!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க