ரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான பொருளியல் துறை தலைவர் இளங்கோவனின் பிணை மனு தள்ளுபடி செய்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு 01.04.2019 அன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முருகேசன், இ.ஜெகதீசன் மற்றும் ஆதரவான வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த 7 ஆண்டுகளாக கல்லூரியில் படிக்கும் முன்னாள் இன்னாள் மாணவிகளுக்கு பேராசிரியர் இளங்கோவன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது; மதிப்பெண்ணை வைத்து மிரட்டி மாணவிகளை தன் விருப்பத்திற்கு அடிபணிய வைத்தது உள்ளிட்ட உண்மைகளை வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்களின் உறுதியான போராட்டம் மற்றும் வழக்கறிஞர்களின் வாதத்தின் காரணமாக பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், நீதிபதி.

படிக்க:
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

அரசு கலைக்கல்லூரி, கரூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க