பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !

பெண்களே காவி கட்சியில் சேராதீர்கள்! அங்கே அமைச்சர் அக்பர் முதல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சஞ்செய் குமார் வரை வல்லுறவு செய்வதற்கு காத்திருக்கிறார்கள்.

டேட்டா என்ட்ரி பணிசெய்த பெண்ணுக்கு ஆபாசப் படங்கள் அனுப்பிய உத்தரகாண்ட் பாஜக பொதுச்செயலாளர்: கட்சிப் பெண்களுக்குகூட பாஜக பாதுகாப்பானதில்லை!

த்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்குச் சென்ற பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார் பாஜக பொதுச்செயலாளர் சஞ்சய் குமார்.  ஆபாசப் படங்களை அனுப்புவது, ஆபாசமாக பேசுவது, முத்தம் தர முயற்சித்தது என அலுவலக பணிக்கு வந்த பெண்ணிடம் வன்முறை செய்துள்ளார் சஞ்சய் குமார்.

சஞ்செய் குமார், பாஜகவின் உத்தரகாண்ட் பொதுச் செயலாளர்

கடந்த ஒரு வருடமாக டேராடூனில் உள்ள கட்சி அலுவலத்தில், கட்சி நிதி தொடர்பான டேட்டா என்ட்ரி பணிக்குச்சென்ற தன்னிடம் தொடர்ச்சியாக பாலியல் அத்துமீறல் செய்ததாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார் அந்தப் பெண்.

“கடந்த பிப்ரவரி மாதம் முதல் டேட்டரி என்ட்ரி பணிக்காக தினமும் பாஜக அலுவலகம் சென்று வந்தேன். அப்போதுதான் சஞ்சய் எனக்கு பழக்கமானார். அவர் எப்போதும் ஆபாசமாகத்தான் பேசுவார். இரண்டு முறை வலுக்கட்டாயமாக எனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தார். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யப்பட்ட ஆபாசப் படங்களை அனுப்புவார். சில சமயம் தன்னுடைய அந்தரங்க உறுப்புகளின் படங்களை வாட்ஸ்சப்பில் அனுப்பியிருக்கிறார்.

இவருடைய அத்துமீறல்கள் குறித்து மாநில தலைவரிடமும்கூட சொல்லிவிட்டேன். ஆனால், அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. கட்சி அலுவலகத்தில் உள்ள சிலர், பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், பாலியல் ரீதியாக கட்சி ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என சொன்னார்கள். அவருக்கு எதிராக என்ன ஆதாரம் இருக்கிறது என கேட்டார்கள். என்னிடம் எதுவும் இல்லை. அதன் பிறகு, என்னிடம் சஞ்சய் குமார் ஆபாசமாக பேசியதை பதிவு செய்தேன். என்னிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டாம், அப்படி நடந்து கொண்டால் இதை வெளியிடுவேன் என சொன்னபோது, என்னுடைய ஃபோனை பிடுங்கிக் கொண்டார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் வெளியான பின், சொந்தக் காரணங்களைக் கூறி, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் சஞ்சய் குமார். பாதிக்கப்பட்ட பெண், பாஜக ரவுடி கும்பலால் தனக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறார். பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்தால் தன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்கிறார் இவர். சஞ்சய் குமார், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் ஆகவும் பாஜக மாநில பொதுச் செயலாளராக ஏழாண்டுகளாகவும் இருந்தவர். பலம் மிக்கவர் என்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்கிறார் அந்தப் பெண்.

மீ டூ இயக்கத்தின் மூலம் பணிபுரியும் இடத்தில் தாங்கள் பாதிக்கப்பட்ட கதைகளை பெண்கள் சொன்னபோது, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,’வக்கிர புத்திகொண்ட பெண்கள்தான் இப்படி புகார் சொல்வார்கள்’ என்றார். வக்கிர புத்திகொண்ட ஆண்கள் ஆர்.எஸ்.எஸ்-இலும் பாஜகவிலும் இருப்பதால்தான் அவர்களை காப்பாற்றும் பொருட்டு பொன்னார் இப்படி சொல்லியிருக்கிறார் என்பதை சற்று தாமதமாக உலகம் தெரிந்து கொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்றால் வேட்டி கட்டிய அக்மார்க் தேசபக்தர்கள் என்றொரு கட்டுக்கதையை சங்கிகள் பக்திமார்க்கம் போல விளம்பரம் செய்வார்கள். சமூக – அரசியல் – ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தாலும் வராவிட்டாலும் இந்த ‘தேசபக்தர்கள்’ பெண்களை குதறுகிறார்கள்.

பெண்களே காவி கட்சியில் சேராதீர்கள்! அங்கே அமைச்சர் அக்பர் முதல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சஞ்செய் குமார் வரை வல்லுறவு செய்வதற்கு காத்திருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்: நன்றி இன்டியன் எக்ஸ்பிரஸ் #MeToo: ‘Uttarakhand BJP leader tried to kiss, grabbed, sent vulgar photos’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க