சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவுக்கான ஒரு தளமாக விளங்குவது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களே இங்கு பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கான விடுதிக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிரடியாக உயர்த்தியிருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். அதிரடியான இந்த கட்டண உயர்வைக் கண்டித்து விடுதி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்த போதிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் இதுவரை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் புறக்கணித்துவருகிறார்.

விடுதிக் கட்டண உயர்வு திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தொடரப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

புமாஇமு
தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சிதம்பரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க