மீபத்தில் நியூஸ் நேஷன் என்ற தொலைக்காட்சிக்கு மோடி அளித்த பேட்டியில் பாலகோட் தாக்குதல் பற்றி அவிழ்த்துவிட்ட பொய் சமூக ஊடகங்களில் பகடிக்கு உள்ளாகியிருக்கிறது.

மோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்கமுடியும்” என தெரிவித்திருந்தார். கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் ‘அறிவியல்’ பாடாய்பட்ட நிலையில், தனது அறிவிலித்தனத்தை பட்டவர்த்தனமாக அறிவிக்கும்விதமாக மோடி அளித்திருக்கும் பேட்டி, மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது.

இன்னொரு பக்கம் இத்தகைய நபர் ஒருவர் நாட்டின் பிரதமராகியிருப்பது அவமானமாக இருப்பதாகவும் பலர் சமூக ஊடகங்களில் கருத்திட்டுள்ளனர்.

தமிழ் முகநூலில் கேலி கிண்டல் பதிவுகள் மட்டுமல்லாது, மீம்களும் பறந்தன.

விநாயகமுருகன்:

“பாலகோட் விமான தாக்குதலின் போது அன்றைய தினம் இரவு சுமார் 9 – 9.30 மணிவாக்கில் நான் தாக்குதல் குறித்து ஆராய்ந்தேன். அதே ஆய்வை மீண்டு இரவு 12 மணிக்கு மேல் செய்ய நேரிட்டது. இதற்கு அப்போது வானிலையில் ஏற்பட்ட மாறுதலே காரணம் ஆகும். அதன் பிறகு நான் சில நிமிடம் யோசித்தேன். எனது மனதில் இது நடக்குமா அல்லது நடக்காதா என்னும் கேள்வி எழுந்திருந்தது.

தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த தாக்குதலை வேறு ஒரு தினத்தன்று மாற்றலாம் என யோசனை அளித்தனர். ஆனால் உடனடியாக நடத்தாவிடில் இந்த ரகசியம் எப்படியும் வெளியாகி விடும் என எனக்கு தோன்றியது. நான் விஞ்ஞானம் படிக்காதவன். இருந்தாலும் மேகங்கள் இருப்பதாலும் கனமழை பெய்வதாலும் ராடாரால் நமது விமானங்களை கண்டறிய முடியாது என்பதை நான் அறிவேன்.

இந்த மழை மற்றும் மேக மூட்டம் நமக்கு நன்மை தரும் என்பதையும் நான் தீர்மானம் செய்து விட்டேன். அதனால் நான் அன்றே பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்த உகந்த நாள் என முடிவு செய்தேன். அதனால் மேகங்கள் சூழ்ந்துள்ளன. கிளம்புங்கள் என உத்தரவிட்டேன். அவர்களும் கிளம்பினார்கள்…”

… அண்மை பேட்டியொன்றில் மோடி

நம்மூர்ல சீமான் எப்படி பெரிய தலைக்கட்டோ அவங்க ஊர்ல அவரு. ஆனா, ஒண்ணு இந்த ஆபரேஷனில் மேஜர் மாலனோட கருத்தை பிரதமர் கேட்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். திராவிடத்தால் வீழ்ந்தோம் ஒறவே

வசந்தா சுசீலா:

Actually அந்த ராடார் கதை சொல்லி முடிச்ச 10-வது நிமிடத்தில் இங்க ஒரு ராணுவ புரட்சி வந்திருக்கணும்..

நமக்கே இம்புட்டு கடுப்பாகுது. பாவம் அந்த எல்லையில் இருக்கும் ராணுவ வீரன்!!

படிக்க:
♦ தொழிலாளர் சட்டத்தை ஒழி – தொழில் வளரும் ! மோடினாமிக்ஸ் !
♦ இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

ராஜசங்கீதன்:

Aviator என ஓர் ஆங்கிலப் படம். Hughes கதாபாத்திரத்தில் Dicaprio நடித்து மார்டின் ஸ்கார்சசி இயக்கியிருப்பார்.

போரைப் பற்றிய படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருப்பார் டிகாப்ரியோ. எடுத்தவரை படத்தை போட்டு பார்க்கும்போது, நிஜமாகவே வானில் விமானம் பறக்க வைத்து, விமானத்தில் இருந்து அதை படம் பிடித்த உழைப்பு ஏதும் தென்படாது. ஸ்டுடியோவில் கயிறு கட்டி ப்ளைட் மாடலை கேமராவுக்கு அருகே வைத்து எடுப்பதை போலவே தெரிகிறது. காரணம் புரியாமல் மண்டையை உடைத்துக் கொள்ளும் டிகாப்ரியோ, ஒரு கட்டத்தில் காரணத்தை கண்டுபிடித்து விடுகிறார். வானுக்கும் விமானத்துக்கும் இருக்கும் தூரத்தை காட்ட இன்னுமொரு object திரையில் இருக்க வேண்டும். அதுதான் தூரத்தை relate செய்து காட்ட இயலும். Relativity!

வானில் வேறென்ன இருக்க முடியும்?

Clouds!

மேக மூட்டம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விமானம் பறக்கவிட்டு படம்பிடித்தால் திரையில் வானத்தின் பிரம்மாண்டம் தெளிவாக தெரியும். மேகங்களுக்குள் இருந்து வரும் விமானம், மேகத்துக்குள் மறையும் விமானம் என மக்களால் மேகத்துடன் relate செய்து வானை பிரமிக்க முடியும். டிகாப்ரியோ ஒரு வானியல் அறிஞரை வேலைக்கு அமர்த்துகிறார்.

ஷூட்டிங்கின்போது இருவரும் பேசிக் கொள்ளும் ஒரு வசனம்:

Di Caprio: Why there’s no clouds?

Climatologist: They are clouds Mr.Hughes. They move. That’s what they do.

Di Caprio: Find me some goddamn clouds.

என கத்திவிட்டு செல்வார். கொஞ்ச நேரம் கழித்து வானியலாளர் குதித்து கொண்டு ஓடி வந்து சந்தோஷமாக ‘மேகங்களை கண்டுபிடித்து விட்டேன்’ என்பார். உடனே அங்கு விமானங்கள் அனுப்பி படம் பிடிப்பார்கள்.

நம்மூரில் டிகாப்ரியோ இல்லை. மோடிதான் இருக்கிறார். ஆதலால் Find some goddamn clouds என மோடியே சொல்லியிருக்கிறார்.

அநேகமாக மோடிக்கு மேகங்களை கண்டுபிடித்து தந்த வானியலாளர் பால்கோட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்த மாலனாக இருக்கலாம். Aviator படமாவது drama ரகம். மோடி பேசுவது tragic comedy ரகம். தியேட்டருக்குள் நுழைந்தது நம் தப்பு. குறை கூறினால் என்ன நியாயம்? பார்த்து ரசியுங்கள்…

ரகுபதி பாலசுப்ரமணியன்:

ஒரளவுக்கு வாசிச்சு தெரிஞ்சுகிட்ட இந்திய அரசியல் வரலாற்றுல, இப்படி ஒரு தற்குறித்தனமான பிரதமர கேள்விப்படல. மண்ட முழுக்க மாட்டுச்சாணிதான் போல. பிள்ளையார் பிளாஸ்டிக் சர்ஜரி பேஷண்ட்டுன்னு சொன்னதுல தொடங்கி, இன்னைக்கு மேகங்கள வச்சு ரோடாரயே ஏமாத்தலாம்னு, வாயத்தொறந்தாலே OVOP’க்கள்தான்..

வெங்கடேஷ் ஆறுமுகம்:

மேஜர் நான் பிரதமர் பேசுகிறேன்.. குண்டு வீசச் சென்ற நம் விமானங்கள் எப்போது தாக்குதல் நடத்தும்?

ஜி.. அவர்களின் வான் எல்லைக்குள் நுழைந்துவிட்டோம் துல்லியமாக இன்னும் 3 நிமிடம் 36 நொடிகளுக்குள் குண்டுகளை வீசிவிடுவோம்!

அச்சா.. கோவைக்கோ திருச்சூருக்கோ எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது முடிந்தால் வயநாட்டிலும் 4 குண்டுகளை போட்டுவிட்டு திரும்புங்கள்!

ப்ரைம் மினிஸ்டர்ஜி என்ன சொல்றிங்க?!!! அதெல்லாம் நம்ம இந்தியாவில் கேரளாவில் இருக்கும் ஊரு ஜி!!

அரே நம்பிள் இந்தியா விமானமெல்லாம் பாலக்காடுல குண்டு போட போயிருக்குன்னு அமித்ஜி சொன்னாரே!

ஹே பஹ்வான்!! ஜி அது கேரளா பாலக்காடு நஹி.. பாகிஸ்தான் பாலாகோட் ஹே!

ஸ்வரா வைத்தி:

இவ்வளவு முட்டாளா இருக்க மோடி தான் ரபேல் விமானம் வாங்கற டீல பேசி முடிச்சிருக்காப்ல 😐😐😐

விக்னேஷ் பழனிசாமி:

நிலாவுக்கு விண்கலம் அனுப்புறீங்க. சூரியனுக்கு ஏன் அனுப்பலன்னு கேட்டேன். சூரியன் மேற்பரப்பு சூடா இருக்கும்னு சயிண்டிஸ்ட் சொன்னாங்க. எனக்கு இவங்கள்லாம் எப்படி சயிண்டிஸ்ட் ஆனாங்கன்னே தெரியல. நைட்டுல அனுப்பவேண்டியது தானே.

– மோடி (சொன்னாலும் சொல்வார்).

செ. அன்புச்செல்வன்:

இரேடார் நிகழ்விலிருந்து இந்தியராகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துகொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்…. அடிப்படை அறிவியலில் நாம் மிகமிகப் பின்தங்கி இருக்கிறோம் என்பதே அது. உலகில் எங்கோ ஒருமூலையில் எவரொருவர் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்துத் தருவனவற்றை மட்டும் பெற்றுக்கொள்ளும் வெறும் பயனாளிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

சான்றாக, பல்லாயிரங்கள் செலவு செய்து ஒரு திறன்பேசியை வாங்கிப் பயனுறும் நாம் அதன்பின்னே இருக்கும் அறிவியல் இன்னதென்று துளியளவும் சிந்திப்பதில்லை.

நித்தியானந்தா போன்ற சாமியார்கள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை பொய்யென்று சொல்வதை வேண்டுமானால் பகிர்ந்து அறிவுப்பசியாறிக் கொள்வோமேயன்றி ஏன் பொய்யல்ல என்று தேடியறிந்துகொள்ள முயலோம். சக்கி சாமியார் சரியான உணவுப்பழக்கம் இல்லாததால்தான் மனவழுத்தம் வருகிறது என்று சொன்னால் ஆதி ஓகியைப் போலவொரு ஆசான் இவ்வுலகில் இல்லையென்று அவர் அடியொற்றிக் கொள்வோம்.

வெறும் கையடக்க திறன்பேசியை வடிவமைத்து அதை இயங்கச்செய்ய, பத்து நோபல் பரிசுவென்ற அறிவியலாளர்களும் அவர்தம் இருநூறாண்டு உழைப்பும் தேவைப்படுகிறது என்பதை நாம் எற்றைக்கு உணர்வோம்??!!

ட்விட்டரிலும் மோடியின் ‘அறிவிலித்தனம்’ பாடாய்ப்பட்டது.

“கண்டுபிடிக்காதபடி எப்படி இந்தியாவிலிருந்து தப்பியோடினீர்கள் மல்லையா?” என மேகங்களுக்குள் பதுங்கியிருக்கும் மல்லையாவிடம் கேட்கிறார் கஜோல் ஸ்ரீனிவாசன்.

ரேடாரிலிருந்து தப்பிக்க விமானங்களை மேகங்களில் ஒளித்து வைக்க முடியுமா? என்ற கேள்வியைத்தான் கூகுளில் கடந்த இரண்டு நாட்களாக பலர் தேடியிருக்கின்றனர். உண்மையில் அப்படி ஒளித்து வைக்க முடியாது என்பதே விமானப்படை அதிகாரிகளின் பதிலாக உள்ளது.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி கபில் காக், டெலிகிராப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பல ஆண்டுகளாக பயிற்சி பெற்ற தொழில்ரீதியிலான படையை இவர் இப்படி அதிகாரம் செய்யக்கூடாது. பொருளாதாராத்தை புறம் தள்ளலாம்; அரசியலை புறம் தள்ளலாம்; அவர் உள்நாட்டு பாதுகாப்பை புறம் தள்ளலாம்; சிறுபான்மையினரை புறம் தள்ளலாம்; நாட்டில் பேரழிவுகளை உருவாக்கும் முடிவுகளை புறம் தள்ளலாம்; ஆனால், பிரச்சினைக்குரிய இடத்தில் போர் விமானத்தை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதில் அவர் தலையிடக்கூடாது. விமானப்படை தலைவரும் காமாண்டருமே அத்தகைய முடிவுகளை எடுப்பார்கள். அதுபோன்ற முடிவுகள் நிபுணர்களால் எடுக்கப்படுகின்றன..” என தெரிவித்துள்ளார்.

படிக்க:
♦ ரோஹிங்கியா இனப்படுகொலையை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள் விடுதலை !
♦ எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

முன்னதாக கபில் காக் உள்ளிட்ட 1,500 முன்னாள் வீரர்கள், அரசியல்வாதிகள் எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறித்து அரசியலுக்காக பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

இத்தனைக்கும் நடுவே, நியூஸ் நேஷன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி மோடியின் மற்றுமொரு ஜோடிக்கப்பட்ட பேட்டி என்கிற தகவலை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறார் ஆல்ட்நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் பிரதீக் சின்ஹா.

ஆட்சியை பிடிக்கும் அவஸ்தையில் இருக்கும் மோடி, இறுதிநேரத்தில் தனது அறிவிலித்தனத்தை அப்பட்டமாக காண்பிக்கிறார். இந்திய பிரதமர்களின் வரிசையில் ஒரு களங்கமாக அமைந்துவிட்ட மோடியின் ஆட்சி தொடருமானால், நாட்டுக்கு அது எத்தகைய பேரழிவாக அமையும் என்பதற்கு இறுதி எச்சரிக்கையாகவே இது உள்ளது.


தொகுப்பு :
கலைமதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க