சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளைத் திறம்பட வேகமாக முடித்து வைக்கவும், வனங்கள் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சார்ந்த சட்ட உரிமைகளை அமல்படுத்தவும், சுற்றுச்சூழல் தொடர்பான அல்லது அதனைச் சார்ந்த விவகாரங்களைக் கையாளவும், அவற்றால் மனிதர்களுக்கும் மற்றும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க இந்தச் சட்டம் வழி வகை செய்யும்.

ஏனென்றால், ‘ஐக்கிய நாடுகள் அவை’ சார்பில் 1972 -ம் ஆண்டு, ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழல் (Human environment) மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டு, மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்பாட்டுக்கு சரியான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒப்புக்கொண்டுள்ளது.

ஏனென்றால், 1992-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டது. மாசுக்கட்டுப்பாடு மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புறுதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு வேண்டிய தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்து, தீர்வு காணத் தேவையான நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை உருவாக்கித் தர வேண்டும் என அதில் கலந்துகொண்ட நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஏனென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ல் வாழ்வதற்கான உரிமை என்பதில் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் உரிமையும் அடங்கும் என்று இந்திய நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

ஏனென்றால், மேற்கண்ட கருத்தரங்குகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கு இதுவே சரியென்று கருதுவதாலும், சுற்றுச்சூழல் தொடர்பான பல்வகைப்பட்ட பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும், “தேசிய பசுமைத் தீர்ப்பாயம்” ஒன்று ஏற்படுத்த வேண்டியுள்ளது.

இந்திய குடியரசின் 61-வது ஆண்டில், நாடாளுமன்றத்தில் கீழ்க்கண்டவாறு சட்டம் இயற்றப்பட்டது

குறிக்கோள்கள் மற்றும் காரணங்கள் :  கடந்த சில ஆண்டுகளில், தொழில் துறை, உள்கட்டமைப்பு  மற்றும் போக்குவரத்துத் துறைகளில் குறுகிய காலத்தில் ஏற்பட்ட விரிவாக்கத்தின் காரணமாகவும், வேகமான நகரமயமாதலாலும் நம்முடைய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மீது புதிய அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு நீதிமன்றங்களிலும், இதர அதிகார அமைப்புகளின் (Authorities) முன்பும் சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகள் கணிசமான அளவு நிலுவையில் உள்ளன. ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகளின் காரணமாக, மனிதனின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்டுள்ள அபாயம், கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

1972 -ம் ஆண்டு, ஸ்டாக்ஹோமில் நடைபெற்று மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழல் (human environment) தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்துகொண்டது. மனித சமுதாயத்திற்கான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்று அம்மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு, ரியோ டி ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொண்டது. மாசுக்கட்டுப்பாடு மற்றும் இதர சுற்றுச்சூழல் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் பொறுப்புறுதி மற்றும் இழப்பீடு கோருவதற்கு வேண்டிய தேசிய அளவிலான சட்டங்களை உருவாக்குதல் மற்றும் அவர்களுடைய கோரிக்கைகளை ஆராய்ந்து, தீர்வு காணத் தேவையான நீதித்துறை மற்றும் நிர்வாகம் சார்ந்த நடைமுறைகளை உருவாக்கித் தரவேண்டும் என அம்மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 28-ல் வாழ்வதற்கான உரிமை என்பதில் நலவாழ்வுக்கான சுற்றுச்சூழல் உரிமையும் அடங்கும் என்று இந்திய நீதித்துறை அங்கீகரித்துள்ளது.

ஆபத்து நிறைந்த பொருட்களைக் கையாளும் போது ஏற்படும் விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முழுமையாக பொறுப்புறுதி செய்யும் வகையில் தேசிய சுற்றுச் சூழல் தீர்ப்பாயச் சட்டம், 1995 கொண்டுவரப்பட்டது. அதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்போது, நபர்களுக்கோ, சொத்துக்கோ மற்றும் சுற்றுச்சூழலுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கும் வகையில், வழக்குகளை விரைவாகவும், திறம்படவும் முடிக்கும் வகையில் தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயத்தை நிறுவவும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. என்றாலும், குறைந்த அளவே அதிகார வரம்பு பெற்றிருந்த, தேசிய சுற்றுச்சூழல் தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை.

சுற்றுச் சூழல் (பாதுகாப்புச்) சட்டம், 1986-ன் கீழ்வரும் பாதுகாப்பு நடைமுறைகளின்படி செயல்படும் தொழிற்சாலைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் உத்திகளையோ அல்லது பலதரப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்திகளை மேற்கொள்வதற்கோ அல்லது மேற்ளொள்ள இயலாமல் போவது தொடர்பாகவோ விதிக்கப்படும் கட்டுப்பாட்டு எல்லைகள் குறித்து, மேல்முறையீடு செய்வதற்காக, தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு ஆணையச் சட்டம், 1997-ம் ஆண்டு இயற்றப்பட்டு, தேசிய சுற்றுச்சூழல் மேல்முறையீட்டு ஆணையத்தின் விசாரணை அதிகார வரம்புகள் வரையறுக்கப்பட்டவையாக இருந்ததால், அதற்கு குறைந்த அளவே பணிகள் இருந்தன.

படிக்க:
பாசிச எதிர்ப்புக் கூட்டணியின் அவசியம் என்ன ?
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

… பலவகைப்பட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் வழக்குகளை கையாளச் சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவது அசியமானதாகிறது. சுற்றுச்சூழல் தொடர்பான சட்டப்பூர்வ உரிமைகளை செயல்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனங்கள் பாதுகாப்பு மற்றும் இதர இயற்கை வளங்கள் சார்ந்த உரிமையில் வழக்குகளை வேகமாகவும், திறம்படவும் முடித்து வைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைப்பதற்கான சட்டத்தை வடிவமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. (நூலிலிருந்து பக்.3-5)

தேசிய பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் பற்றிய அறிமுகம், அதன் வரையறைகள்; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமையும் விதம் குறித்து; அதன் தலைவர்கள் நீதித்துறை சார் உறுப்பினர் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர்களுக்கான தகுதிகள்; அவர்களது நியமனம் குறித்த வரையறை; தீர்ப்பாயத்தின் விசாரணை வரம்பு, அதிகாரங்கள் மற்றும் விசாரணைகள்; தீர்ப்பாயத்தின் நடைமுறை மற்றும் அதிகாரங்கள் உள்ளிட்டவை தனித்தலைப்புகளில் விளக்கப்பட்டிருக்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை பற்றிய சட்டரீதியான புரிதலை ஏற்படுத்துகிறது இச்சிறுநூல்.

நூல் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010
தமிழ் மொழியாக்கம் : ஜெய. கார்த்திகேயன்

வெளியீடு : பூவுலகின் நண்பர்கள்,
73, சாய் லட்சுமி குடியிருப்பு, குமரன் நகர், இரண்டாவது பிரதான சாலை, சின்மயா நகர், விருகம்பாக்கம், சென்னை – 600 092.
தொலைபேசி எண்: 90949 90900.
மின்னஞ்சல் : info@poovulagu.org

பக்கங்கள்: 56
விலை: ரூ 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : marinabooks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க