மெரிக்க மான்சாண்டோ நிறுவனமானது (தற்போது ஜெர்மனியின் பேயர் நிறுவனத்திற்கு சொந்தமானது) மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை 1998 முதல் இந்தியாவில் விற்று வருகிறது. அந்த வருடத்தில் இருந்து பி.டி. காட்டன் உற்பத்தியில் ஒரு முழுமையான ஏகபோகத்தை நிறுவி உள்ளது. இந்திய பருத்தி உற்பத்தியில் 90 சதவீதம் – 11.8  மில்லியன் ஹெக்டரில் பி.டி. காட்டன் பயிரிடப்படுகிறது.

தற்போது மான்சாண்டோ நிறுவனமானது, மும்பையைச் சேர்ந்த மாஹைகோ என்ற விதை நிறுவனத்துடன் சரிவிகித பங்குடன் கூட்டு நிறுவனமாக மாஹைகோ மற்றும் மான்சாண்டோ ஹோல்டிங் (Mahyco and Monsanto Holding Pvt Ltd MMBL ) என்ற நிறுவனத்தின் பெயரில் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்திய நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. அப்படி விற்பனை செய்யும்போது விதைகளுக்காக உரிமக் கட்டணம் அல்லது தொழில்நுட்பக் கட்டணம் என்ற பெயரில் ஒரு உரிமக் கட்டணத்தையும் விதிக்கிறது. (charges a licensing fee called ‘trait fee’, or technology fee).

நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கண்காணிப்பு விசாரணை ஆணையமானது, தன் விசாரணை அறிக்கை மூலம் மான்சாண்டோ எவ்வாறு பி.டி. காட்டன் விதை விலை நிர்ணயிப்பில் பித்தலாட்டம் செய்து வருகிறது. என்று சி.சி.ஐ -க்கு The Competition Commission of India (CCI) தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில் மாஹைகோ மற்றும் மான்சாண்டோ ஹோல்டிங் (MMBL) நிறுவனமானது பி.டி. காட்டன் தொழில்நுட்பத்திற்கான சந்தையில் நியாயமற்ற உரிம கட்டணத்தை, விதைகளுக்கு நிர்ணயிப்பதன் மூலம், தனது மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்துகிறது . மேலும் பி.டி. காட்டன் விதைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு நேரடியாக விலை நிர்ணயம் செய்யும் விலை நிர்ணய ஒப்பந்தங்களில் இந்நிறுவனம் நுழைகிறது.

விவசாய அமைச்சகம் மற்றும் நுசிவிடு என்ற நிறுவனமும் 2015-லேயே  மான்சாண்டோ குழுமத்திற்கு எதிராக பி.டி. காட்டன் தொழில்நுட்ப சந்தையில் அந்நிறுவனத்தின் மேலாதிக்க நிலையைப் குற்றம் சாட்டினார்கள். அதன் பின்னர்தான் விசாரணை தொடங்கியது. சி.சி.ஐ -யின் மூலம் வந்த விசாரணைக்காக மான்சாண்டோ டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

எகனாமிக்ஸ் டைம்ஸ், சி.சி.ஐ -யுடன் நடத்திய கலந்தாய்வில் உரிமம் கட்டணத்தை உயர்த்துவதானது, நேரடியாக விதைகளின்  சில்லறை விற்பனையை அதிகரிக்கும், அதன் மூலம் அந்நிறுவனமானது அதிக உபரியை இலாபமாகக் கொள்ளும். இந்த சுமை அனைத்தும் விதைகளை நேரடியாகக் கையாளும் விவசாயிகளின் தலையில்தான் விழும் என்கிறது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !
♦ குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !

விதைகளுக்கான விலை ஒழுங்குமுறை (Price Regulation) இல்லாத ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விதை உற்பத்தியாளர்களிடம் அதிக உரிமக் கட்டணத்தை தன் மேலாதிக்க நிலையைப் பயன்படுத்தி நிர்ணயம் செய்கிறது.

மான்சாண்டோ குழுமம், தனது விதைகளுக்கு ஒவ்வொரு இடங்களுலும் வெவ்வேறு விலைகளை  நிர்ணயம் செய்வதன் நோக்கம், வெறுமனே விதைக்கு விலை நிர்ணயிப்பது மட்டுமல்ல, தனது போட்டியாளர்களையும் சிதைக்கவேண்டும் என்பதுதான். இது ஒரு ஏகபோக நிறுவனம் மேற்கொள்ளும் மூன்றாம் தரமான  விலைநிர்ணயமாகும். இந்த விலைப் பாகுபாடு நுகர்வோரின் எந்த ஒரு மேம்பாட்டுக்கும் வழிவகுப்பது இல்லை. மேலும் நிலையான விலை ஒழுங்குமுறை உள்ள மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட தன் உரிமம் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

மான்சாண்டோ குழுமம்  உரிமக் கட்டணத்தை, விதை தொழில்நுட்பத்தின் அதிக செலவினங்களுக்காகவோ மற்றும் விதை தொழில்நுட்பத்தில் புதிய ஆராய்ச்சி அடிப்படையிலோ உயர்த்தவில்லை. மான்சாண்டோ குழுமமானது மிகவும் குறைவான செலவில்தான் விதைகளுக்கான உரிமம் பெறுகிறது என்று நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி கண்காணிப்பு விசாரணை அறிக்கை அம்பலபடுத்துகிறது.

மேலும், மான்சாண்டோ குழும  நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய ஒரு நிறுவனம், மான்சாண்டோவின் பிற  போட்டி நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடும்போது தனக்கு (MMBL) முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது மான்சாண்டோ. இதன் மூலம் தன்னுடைய போட்டி நிறுவனங்களின் நுழைவைத் தடுக்கிறது என்று  அந்த அறிக்கை கூறுகிறது.

படிக்க:
விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !
♦ 4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !

இது குறித்து சி.சி.ஐ-யின் இயக்குனர் ஜெனரல் கூறுகையில், வணிகப் போட்டி சட்டத்திற்கு புறம்பாக, தன் துணை ஒப்பந்தம் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தங்கள் சரக்குகள் அனைத்தையும் அழித்து விட வேண்டும் என்று தன் துணை ஒப்பந்ததாரர்களுக்கு மான்சாண்டோ நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகக் கூறுகிறார் சி.சி.ஐ-யின் பொது இயக்குனர் .

மேலும் அவர் MMBL நிறுவனத்தின் இந்தக் கெடுபிடி, விதையின் தொழில் நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை  இல்லாமல் ஆக்குவதும், விதைகளின் விலைகளை அதிகரித்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதுமாக உள்ளது என்று கூறியுள்ளார்.

பி.டி. பருத்தியின் காப்புரிமையைப் பெற்றிருப்பதன் மூலம் தங்கள் பங்குதாரர்கள் புதிய கலப்பின வகைகளைப் பயன்படுத்துவதைத் தவறு எனக் கூறுகிறது மான்சாண்டோ நிறுவனம். இந்த கலப்பினங்கள் பொதுச் சொத்தல்ல என்பதுதான் அதன் வாதம். இதன் மூலம் அது பருத்திக்கான தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், பருத்தி என்ற பயிரையே, தான் இல்லாமல் மீண்டும் சாகுபடி செய்ய முடியாதவாறு பார்த்துக் கொள்கிறது. காலகாலத்திற்கும் விவசாயிகளை மட்டுமில்லாமல், உள்ளூர் நிறுவனங்களையும் தங்களையே சார்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது.

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உள்ளே கொண்டுவரப்பட்ட மான்சாண்டோ நிறுவனம், இன்று பருத்தி விதை சந்தையில் ஏகபோகமாக வளர்ந்து விவசாயிகளையும் பிற போட்டி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தி மெல்ல மெல்ல அவர்களைச் சாகடிக்கிறது.

பரணிதரன்

வினவு செய்திப் பிரிவு
நன்றி: RT,  எக்னாமிக்ஸ் டைம்ஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க