தமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி

புதிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் கல்வியை தனியார்மயம் மற்றும் காவிமயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இந்தித் திணிப்பு குறித்து சென்னை மக்களின் கருத்து என்ன ? பாருங்கள் ! பகிருங்கள் !

புதிய கல்விக் கொள்கை (2019) என்ற பெயரில் கல்வியை தனியார் முதலாளிகளின் கையில் ஒப்படைப்பதுடன், முழுக்க முழுக்க காவிமயமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது பாஜக அரசு.

ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். – பாஜக, புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கெனவே இந்தி எதிர்ப்பு மனநிலை கொண்ட தமிழகம், மத்திய அரசின் இந்த நகர்வுக்குக் கடுமையான எதிர்வினை ஆற்றியது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தன.

இரண்டே நாட்களில், இந்தி கட்டாயமல்ல என்று தனது வரைவு அறிக்கையில் மாற்றம் செய்து வெளியிட்டது மத்திய அரசு. மத்திய அரசின் இந்தி திணிப்பைக் குறித்து சென்னை மக்களிடம் கருத்துக் கேட்க வினவு குழுவினர் சென்றனர்.
மக்கள் என்ன சொல்கிறார்கள் ?

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க