ரண்டாம் முறையாக மோடி ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் இயங்கும் காவி ட்ரோல்கள் முன்னைக் காட்டிலும் அதிக உத்வேகத்துடன், காவி சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களைத் தாக்க ஆரம்பித்துள்ளனர்.

அண்மையில் இவர்களின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் பிரபலம், மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக கருதப்படும் விநாயகன். இவர் தமிழில் ‘திமிரு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் விநாயகன்

சமீபத்தில் இவர், கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக சித்தாந்தத்தால் கால் பதிக்க முடியவில்லை என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதனால் விநாயகன் மீது காவி ட்ரோல்கள் சமூக ஊடகங்களில் கடும் சாதிவெறி தாக்குதல்களில் இறங்கியுள்ளனர்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பின் “மீடியா ஒன்” என்ற மலையாள செய்தி சேனலுக்கு நடிகர் விநாயகன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். மக்களவை தேர்தலில் கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இடது முன்னணி வென்றது. இடது முன்னணியின் தோல்வி குறித்துக் கவலை தெரிவித்த விநாயகன், “கேரளத்தில் என்ன நடந்ததென தெரியவில்லை. கேரள சூழல் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்” என்றார்.

படிக்க:
♦ பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !
♦ கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !

ஆனாலும், பாஜக-சங் பரிவாரங்களை மக்கள் நிராகரித்திருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் விநாயகன் அந்த பேட்டியில் கூறியிருந்தார். “அவர்களால் கேரளத்தில் எதையும் செய்ய இயலவில்லை. நாம் அறிவுள்ளவர்கள். அதைத்தான் நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.” என பாஜக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் தோல்வியுற்றது குறித்து பேசியிருந்தார்.

“எனக்கு அரசியல் பார்வை உண்டு. ஆனால், அரசியலை தொழிலாக என்னால் செய்ய முடியாது. என்னுடைய தொழில் நடிப்பது. நான் அனைத்து விசயங்களிலும் அரசியல் பார்வை உள்ளவன். ஆனால், வாழ்வதற்காக அரசியலை தேர்ந்தெடுக்க மாட்டேன்” எனவும் தொலைக்காட்சி பேட்டியில் விநாயகன் தெரிவித்திருந்தார்.

இந்த நேர்காணல் இணையதளத்தில் வெளியான பிறகு,  முகநூலில் பலர் விநாயகனை குறிவைத்து தாக்கத் தொடங்கினர். இவர்களில் பெரும்பாலும் மோடியின் படத்தையும், ஆர்.எஸ்.எஸ். சின்னங்களையும் முகப்புப் படமாக வைத்திருக்கும் காவி ட்ரோல்கள். இவர்களுக்கே உரிய பாணியில் நடிகர் விநாயகனின் நிறத்தை வைத்தும், சாதி ரீதியாகவும் தாக்கத் தொடங்கினர்.

“நீ ஒரு கம்மி (கம்யூனிஸ்ட் என்பதை குறிக்க பயன்படுத்தும் சொல்) என்பதை நாங்கள் அறியவில்லை. இப்போதிலிருந்து உன் படத்தை பார்க்க மாட்டேன்” என விநாயகன் பகிர்ந்திருந்த, வெளிவரவிருக்கும் படத்தின் டீசருக்கு கீழே ஒரு காவி ட்ரோல் பின்னூட்டமிட்டிருக்கிறது.

மற்றொரு சங்கி, “தொலைந்து போ …….(சாதி குறித்த இழிவான சொல்), கேரளாவில் பாஜகவை மக்கள் நிராகரிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் இடத்தில் நீ இல்லை” என எழுதியுள்ளது. பலர் விநாயகனின் நிறத்தை வைத்து மிக மோசமான பின்னூட்டங்களை இட்டிருந்தனர்.

படிக்க:
♦ கவுரி லங்கேஷ் கொலையாளிகளின் ஹிட் லிஸ்ட்டில் முதல் இடத்தில் கிரிஷ் கர்னாட்
♦ சபரிமலை திட்டம் தோல்வி : சாமியார்களுக்கு வலை விரிக்கும் ஆர்.எஸ்.எஸ். !

இடதுசாரி ஆதரவாளரான விநாயகன் மட்டுமல்ல, பல மலையாள சினிமா பிரபலங்கள் காவி ட்ரோல்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இடது ஆதரவாளர்களாகவும், இடது சித்தாந்தத்தை தங்களுடைய படங்களில் பரப்புகிறவர்களாகவும் உள்ள இயக்குநர்கள் ராஜீவ் ரவி, ஆஷிக் அபு, அமல் நீரத் ஆகியோர் மீது சமூக ஊடகங்களில் காவிகள் தாக்குதல் நடத்தினர்.

சில மாதங்களுக்கு முன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த பின் நடிகர் விஜய் சேதுபதி, சபரிமலை விவகாரத்தில் பினராயி விஜயன் நடந்துகொண்டவிதம் சரிதான் என தெரிவித்திருந்தார். உடனே, அவரை காவி ட்ரோல்கள் தாக்க ஆரம்பித்தனர்.

தங்கள் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்களை அவதூறு செய்வதன் மூலம் அவர்களை பேசவிடாமல் அடக்கிவிடலாம் என காவிகள் கருதுகின்றனர். ஆனாலும் விநாயகன் போன்றோரின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத்தான் செய்கின்றன.


அனிதா
நன்றி:
நியூஸ்மினிட்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க