டந்த 15.06.2019 அன்று மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த “டெல்டா போர்ஸ்” எனும் சட்ட விரோத போலீசு தாக்கியதில் விவேகானந்தகுமார் என்பவர் மரணமடைந்தார். மரணடைந்த விவேகனந்தகுமாரின் சாவுக்கு நீதி கேட்டு அவருடைய உறவினர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“முறையான போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகே சம்பந்தபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கொலை செய்த போலீசைக் காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர்.

இறந்து போன விவேகானந்த்குமார்.

அதே போல அப்பகுதியில் பதிவான சிசிடிவி (கண்கானிப்பு) கேமரா பதிவுகளையும் வெளியிடாது முடக்கி வைத்துள்ளது போலீசு

கடந்த திங்கள் முதல் இன்று வரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் துணையோடு தொடர்ந்து போராடி வந்தனர். மேலும் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒரு மருத்துவர் உடற்கூறாய்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

படிக்க:
♦ போலீசால் கொல்லப்பட்ட திருச்சி உஷாவின் இறுதி ஊர்வலம்
♦ வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !

உடற்கூறாய்வு அறிக்கையில் போலீசு தாக்கியதால்தான் விவேகானந்தகுமார் மரணமடைந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதில் “இரண்டிலிருந்து ஆறு வரை உள்ள நெஞ்சு எலும்பு உடைந்திருக்கிறது என்பதும் அவரது மரணத்திற்கு முன்பே, கையில் லத்தியின் அளவுக்கு காயம் (லத்தியால் தாக்கியதால்) ஏற்பட்டதையும்,  மண்டை உடைந்து காதில் ரத்தம் வழிந்துள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்.

உடற்கூறாய்வு அறிக்கை மூலம், நெஞ்சு எலும்பு உடைந்ததற்கு காரணம் லத்தியைக்கொண்டு அடித்ததுதான் என்பது உறுதியாகியிருக்கிறது. (இந்த உடற்கூறாய்வை ஆறு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் செய்துள்ளனர்)

இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான HC-ரமேஷ்பாபு என்பவர் இன்று (21.06.2019) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தக் கொலைக்குற்றத்தில் தொடர்புடைய சிறப்பு எஸ்.ஐ. ரத்தினவேலு, மதுரை சட்டம்- ஒழுங்கு பிரிவு காவலர்கள் HC-கிருஷ்னமூர்த்தி,  HC-கந்தசாமி மற்றும் மதுரை AR-HC- பிரபு சீலன், மதுரை AR-PC-மணிகண்டன் ஆகியோரை வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசு மற்றும் அரசு தரப்பு ஏற்றுக்கொண்டிருக்கிறது.

சட்ட விரோத போலீசைக் காப்பற்ற முனைந்த சதி மக்களின் போராட்டத்தால் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி மட்டுமே. அந்த அடிப்படையில் தற்போது விவேகானந்தகுமாரின் உடல் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டு, இறுதி நிகழ்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உடற்கூறாய்வு அறிக்கை :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 73393 26807.

1 மறுமொழி

  1. பாதிக்கப்பட்டவா்களின் போராட்ட தொிவு மிக சாியான ஒன்று.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க