வில்லவன்
பாஜக வட்டாரத்தில் சில மாற்றங்களை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். இதுவரை மன்மோகன் சிங்கை முடிந்தவரைக்கும் அவமரியாதை செய்தது பாஜக, இப்போது ‘நிம்மி’ திடீரென அவரை சந்தித்து பேசுகிறார்.

முஸ்லீம்களின் ரத்தத்தை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் கட்சியின் பிரதமர் தன் கட்சிக்காரனின் ரவுடியிசத்தை கட்சி கூட்டத்தில் கண்டித்ததாக செய்தி வருகிறது. எழுபது ஆண்டுகளில் செய்ய முடியாததை எங்களால் ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாது என நாடாளுமன்றத்தில் சொல்கிறார் மோடி. நாம் எல்லோரும் சேர்த்து நாட்டை உயரத்துக்கு கொண்டு செல்லலாம் என மற்ற கட்சிகளை முதல் முறையாக அழைக்கிறார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது எல்லோருடைய கடமை என்பதாக இருந்தது மோடியின் சமீப உரை ஒன்று.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் “மத்திய அரசால் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய இயலாது” என மறைமுகமாக சொல்லிவிட்டார் (மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றினால்தான் முடியுமாம்). போன முறை ஆட்சிக்கு வந்தபோது பொங்கிப் பிரவாகம் எடுத்த எந்த சவடால்களும் இப்போது இல்லை. மயிலை மாமாக்களும்கூட ஜென் நிலையை பராமரிக்கிறார்கள். அடிமட்ட சங்கிப் பொறுக்கிகள் மட்டும்தான் ஜெய்ஸ்ரீராம் கொலைகளையும் தாக்குதல்களையும் செய்கிறார்கள். மேல்மட்டம் கொஞ்சம் உறைநிலையில் இருப்பதை கவனித்தீர்களா?

முன்பைவிட பெரிய வெற்றி, பாஜகவின் ஆளுகையின் கீழ் வராத அமைப்புக்களே இன்று இல்லை. ஓரிரு ஆண்டுகளில் மேலவையிலும் பெரும்பான்மை கிடைக்கவிருக்கிறது. எதிர்கட்சிகள் எல்லாமே தோல்வி மனோபாவத்திற்கு சென்றுவிட்டன. இன்று பாஜகவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அரசாங்கத்திலும் அரசியலிலும் எதிரிகளே இல்லை. ஆனாலும் இந்த அமைதியும் பொறுப்புத்துறப்பும் நிகழ என்ன காரணம்?

இனி பாஜக சண்டையிடப்போவது இந்திய பொருளாதாரத்தோடும் அதன் வழியே மக்களோடும்தான். போலியான ஜிடிபி கணக்கீட்டின் மூலம் சொல்லிக்கொள்ளும்படியான எண்களை மத்திய அரசு காட்டிவிட்டது. ஆனால் அது பொய்தான் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் இந்தியாவின் நிஜ பகவான் அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டுவிட்டார்.

படிக்க:
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

35,000 கோடி மதிப்புள்ள கார்களும் 17,000 கோடி மதிப்புள்ள இருசக்கர வாகனங்களும் இந்திய சந்தையில் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. வண்டிகளை நிறுத்த இடமில்லாமல் நிறுவனங்கள் லே-ஆஃப் கொடுக்க தயாராகிறது. ஆட்டோமொபைல் உதிரிபாக தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்கள் வருவது குறைந்திருக்கிறது. சூரத், திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்றுமதி சரிந்திருக்கிறது. மூன்று முறை வட்டிவிகிதம் குறைக்கப்பட்டும் பொருளாதாரம் மோசமாகவே இருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைக்காட்டிலும் குறைவாகவே பெய்யும் என வானிலை முன்னறிவிப்புக்கள் சொல்கின்றன. வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது. சீனா, ஆசிய பசிபிக் நாடுகளைக் காட்டிலும் அது குறைவுதான் என அரசு சொல்கிறது.

ஊடகங்கள் ஒழுங்காக வேலை செய்தால் இன்னும் மோசமான தரவுகள் வெளிவரக்கூடும். இவை எதுவும் சரியாவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஐ.எல்.எஃப்.எஸ் எனும் இந்திய பெரு நிறுவனம் செத்துவிட்டது. பி.எஸ்.என்.எல், ஓ.என்.ஜி.சி வரிசையில் நிற்கிறது. பட்டியலில் எல்.ஐ.சியும் சேர்ந்துவிட்டால் சொந்தக்காரர்களுக்கு சொல்லியனுப்பிவிடலாம். பொருளாதார நெருக்கடி உச்சகட்ட வீக்கத்தில் இருக்கிறது. கச்சா எண்ணை விலை ஏறுவது அல்லது பருவமழை பொய்ப்பது போன்ற எது நிகழ்ந்தாலும் வீக்கம் வெடிப்பது உறுதி.

ஆகவே கிளுகிளுப்பூட்டும் வாக்குறுதிகளோ, தற்காலிக சமாதானங்களோ பாஜக தரப்பில் இருந்து வர வாய்ப்பில்லை. எதிர்முனையில் நிற்கும் பெரு முதலாளிகள் எரியும் வீட்டில் பிடுங்கும் முனைப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை வராமல் பிரித்துக்கொடுக்கும் வேலை ஒரு கூடுதல் தலைவலியாக மோடிக்கு இருக்கும்.

படிக்க:
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
♦ ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் !

அடிப்படைவாதத்துக்குக்கு பலியாகும் மக்கள்திரள், செய்திகளை தேடிப்போகாமல் வாட்சாப் தகவல்களால் சுயஇன்பம் காணும் இளைஞர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் பக்தியின் வழியே தீர்வை கண்டடைய முனையும் மிடில்கிளால் இவை எல்லாம் சேர்த்து இந்த பிரச்சினைகள் பூதாகரமாகாமல் தடுக்கின்றன.

போதிய வருமானம் இல்லாமல் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் இல்லாத நாளே இல்லை. இதைவிட வலுவான ஒரு எச்சரிக்கை நம் நாட்டுக்கு இருக்க முடியாது. ஆனாலும் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு துரத்தும் வாழ்வியல் நெருக்கடியும் அடுத்தவன் பிரச்சினை பற்றி எனக்கு கவலையில்லை எனும் சுயநலமும் இந்த செய்திகளை கவனத்துக்கு வராமல் செய்கின்றன.

தாராளமயம் எல்லாவற்றையும் தனிநபர் பிரச்சினையாக பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறது. மதமோ அது உன் தலையெழுத்து, பூஜை செய்து நிவாரணம் தேடு அல்லது சொர்கத்தில் கூலியை வாங்கிக்கொள் என சமாதானம் சொல்கிறது. ஆனால் சோத்துக்கு சண்டை போடும் காலம் வந்தால் இது எதுவும் அரசை காப்பாற்றாது.

இந்த கள எதார்த்தமும் அவை எதையும் சரிசெய்ய வாய்ப்பற்ற கையாலாகத்தனமுமே பாஜக தரப்பை அடக்கி வாசிக்க வைக்கிறது. இந்த பட்ஜெட்டின் பெரும் சவாலாக இருப்பது யாரிடம் இருந்து பிடுங்கி பற்றாக்குறையை சமாளிப்பது என்பதுதான். அதனால்தான் அவர்கள் தமது திமிர் பிடித்த பொறுக்கி முகத்தை மறைத்துக்கொண்டு விக்ரமன் பட நாயகனைப்போல வேதாந்தம் பேசும் சாந்த முகத்தை காட்ட முற்படுகிறார்கள்.

அவர்கள் காட்டும் முகம் எதுவானாலும் சரி, உங்களுக்கு அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. பொருளாதார சுயமைதுனங்கள் அதன் வேலிடிட்டியை இழந்துவிட்டது. இனி இந்த நாடு ஒரு கறைவை நின்றுபோகப்போகும் மாடு. அடிமாடு என்றாலும் முதலாளிகள் அதனை கசாப்புக்கு அனுப்பி லாபம் பார்க்க முடியும். அதன் வலியும் சுமையும் விடியப்போவது நமது பிள்ளைகள் தலையில்தான்.

ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி கொல்லப்படுபவனும் நாமும் கிட்டட்டத்தட்ட ஒன்றுதான். இன்னும் சொல்வதானால் நம் நிலைமை இன்னும் மோசம், காரணம் நாம்தான் நம் பிள்ளைகள் அழிவை நேரில் காணப்போகும் தலைமுறை.

போலோ ஜெய் ஸ்ரீ ராம்…

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

48 மறுமொழிகள்

  1. என்னை பொறுத்தவரை இது தேவையானதுதான். ஹிட்லரை ஆதரித்த குற்றத்துக்கு ஜேர்மன் மக்கள் பல தசாப்தங்கள் விலை கொடுக்க நேரிட்டது. எனது கணிப்பு சரி என்றால் இன்னும் பல லட்சம் மக்கள் கொத்து கொத்தாக மாண்டாலும் பிஜேபி ஆதரவு குறைய போவது இல்லை. ஆனால், அது நல்லதுதான். எத்தனை நாளைக்கு தான் புற்றுநோய்க்கு புனுகு தடவிக்கொண்டு இருப்பது. தாமஸ் பிக்கெட்டி எனும் வரலாற்று பொருளியலாளர் சொன்ன கருத்துப்படி தற்போதைய நிலை இன்னும் சில தசாப்தங்களுக்கு தொடர்ந்தால் உலகில் 1910-1940/1950 வரையான உலக வரலாற்று காலப்பகுதிக்கு வரலாறு திரும்புவது நிச்சயம். இதிலே இந்திய துணைக்கண்டத்தில் பிஜேபி தொடர் வெற்றி பெறுவது அவர்களின் அகண்ட பாரத கோட்பாட்டுக்கு இறுதி ஆணி அடிக்கும் வேலையை வரலாறு தானாகவே செய்ய வழிவகுக்கும். அது நல்லதுதான். என்ன வரலாறு மீண்டும் திரும்பும். ஆனால் துணைக்கண்டத்தில் அது மீண்டும் சோக மயமாக முடியும் என்பதுதான் வேதனை. நமக்கு வரலாறு அற்புதமான படத்தை சுதந்திரத்தின் போது கற்று தந்தது. நாம் இந்த மிக நீண்ட ஏழு தசாப்த காலத்தில் அதை சரியாக கற்றுக்கொள்ளவில்லை. எனவே விளைவுகளுக்கு தற்போதைய கட்டமைப்பும், அதை முண்டுகொடுத்த ஆளும்வர்க்கமும் அதை முட்டாள்தனமாக நம்பிய மக்களும் தான் காரணம். வேறு வழியில்லை. இப்போது சூழலியல் பிரச்சினைகளின் தீவிரத்தை புரிந்துகொண்டால் தற்போதைய கட்டமைப்பு எவ்வளவு அழிவுகரமானது என்பது புரியும். அனுபவிக்கட்டும்.

    • @Barthipan – உங்களுடைய கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.

      மேலும் பாசிஸ்ட்டுகளுக்கு பொருளாதாரத்தைப்பற்றிய அறிவு என்பது பெருமுதலாளிகளுடன் கூட்டுறவில் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள மக்களுக்குப் பிச்சை பெற்றுத்தருவதற்கான ஏற்பாடு மட்டுமே.

      நடப்பு அரசில் பொருளாதாரத்தைப்பற்றிய அறிவுள்ள அமைச்சர் எவருமில்லை. அது முதலாளித்துவமாகவோ, சோசலிசமாகவோ, கலப்புப் பொருளாதாரமாகவோ, ஏதோ ஒருவித அல்லது இதுவரை அறியப்பட்டுள்ள பொருளாதார நடைமுறைகளில் ஒன்றுதான் தங்களுடைய வழிமுறை என்று கூறுவதற்குக்கூட ஆளில்லாத கட்சிதான் இன்றைய ஆளும் கட்சி. ஏனெனில் இது பாசிஸ்ட் கட்சி. இவர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒட்டோ உறவோ கிடையாது.

      பாசிஸ்டுகளுக்கான இனிப்பு – மதவாதம், தேசியவாதம் அல்லது இரண்டும் கலந்த கலவை. இவைகளின் மூலமாகத்தான் பொய்யான பரப்புரைகளை வெகுமக்களை ஈர்க்குமாறும், இலகுவாகச்சென்றடையுமாறும் செய்ய முடியும்.

      உதாரணம் – கீழே மணிகண்டன் என்பவர், இந்தப்பதிவும் அது கூற வருகிற கருத்தும் பொருளாதாரம் பற்றியதே என்கிற சாதாரண புரிதல்கூட இல்லாமல், இரண்டு வெவ்வேறான (ஒன்று ஒரே மதத்திற்குள் பெண்களுக்கான வழிபாட்டுரிமை, மற்றது இரண்டு கிறித்தவக்குழுக்களுக்கிடையேயான சொத்துரிமை) பிரச்சனைகளைத் தேவையில்லாமல் பொருளாதாரத்தைப்ப்ற்றிய இந்தப்பதிவிற்கு பின்னூட்டமிட்டிருக்கிரார். (போகட்டும், பரவாயில்லை, அவருடைய பின்னூட்டத்திற்கான இன்றைய கூலி உறுதிப்பட்டிருக்கக்கூடும்!)

  2. உங்களை போன்றவர்கள் எல்லாம் இப்படி புலம்புவதற்கு மூலம் காரணம் யார் தெரியுமா ? வினவு (கம்யூனிஸ்ட்கள்), கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஹிந்து விரோதம் மற்றும் தேசவிரோத செயல்களை தான் காரணம்.

    பிஜேபி என்ற ஒரு கட்சியை தவிர ஹிந்துக்களுக்காக பேசுவதற்கு வேறு எதாவுது ஒரு கட்சி இந்த நாட்டில் இருக்கிறதா ?

    காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்தியாவில் கிறிஸ்துவர்கள் தாராளமாக மதமாற்றம் செய்வதற்கு வசதியாக “Missionary visa” கொடுக்க ஆரம்பித்தார்கள்.

    கேரளாவில் சபரிமலை பக்தர்களின் நம்பிக்கையை உடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தானே கம்யூனிஸ்ட்கள் அனைத்து கீழ்த்தரமான செயல்களையும் செய்து ஹிந்துக்களின் மனதை புண் படுத்தினார்கள்.

    அதே கேரளாவில் கிறிஸ்துவ சர்ச் பற்றி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொன்னது அது பற்றி இன்று வரையில் கேரளா ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்காக உச்சநீதிமன்றம் கேரளா தலைமை செயலர் சிறை செல்ல வேண்டும்மா என்று கேட்ட போது உங்களை போன்றவர்கள் அது பற்றி வாய் திறக்காமல் மூடி கொண்டு இருந்திர்கள்.

    இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு எதிராக அனைத்து காரியங்களையும் செய்து விட்டு இப்போது அந்த மக்கள் இப்படி வாக்கு அளித்து விட்டார்கள் அப்படி வாக்கு அளித்து விட்டார்கள் என்று புலம்பவேண்டியது.

    இந்த நிலை உருவானதற்கு மூல காரணங்களில் ஹிந்து விரோத செயல்களும் ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.

    • கட்டுரை முழுக்க இன்றைய இந்தியாவின் சவால்கள் பற்றி பேசப்பட்டுள்ளது, அதை பற்றி எதையும் பேசாமல், ஹிந்து மதம் சபரிமலை என்று தனி வழியில் போகும் மூத்திரம் குடிக்கும் பக்தாளாகிய உங்களை என்ன என்று சொல்வது? ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதில்லை என்று உறுதி மொழி எடுத்தது போல் தெரிகிறது

    • திரு மணிகண்டன் “இந்த நிலை உருவானதற்கு மூல காரணங்களில் ஹிந்து விரோத செயல்களும் ஒன்று” என்று முடித்திருக்கிறார். அவர் கூறும் “இந்த நிலை” என்பது என்ன?… என்று அவரும் தெளிவாகப் புரிந்திருக்கிறார். அதாவது, மதபோதையில் மக்கள் தவறான முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று வருந்துகிறார். நன்று… மிக நன்று… நாம் மணிகண்டனோடு இனைந்து செயல்பட்டு அந்தத் தவறை மக்களுக்குப் புரிய வைப்போம். மதவாதம் எப்போதும் தீயவர்களின் ஆயுதமாகத்தான் இருக்கிறது என்று புரியவைப்போம் – காங்கிரஸ் உள்பட. எனவே மதவாதத்தை நிராகரிக்கும் கட்சிகளுக்கு, குறிப்பாக பிராந்தியக் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவோம்.

  3. Exactly KKN. பாசிஸ்டுக்களின் பிரச்சினையே இதுதான். நீங்கள் சொன்னதுபோல ஆண்டாள் அடிமை மனோபாவத்துடன் பொருளாதாரத்தை அணுகுவது.
    இரண்டாவது மணிகண்டனின் கருத்து இப்போதிருக்கிற துவேசம் பிடித்த பாமரத்தனமான வாதங்கள். முதலில் இவர் தெரிந்து எழுதிக்கிறாரா தெரியாமல் எழுதுகிறாரா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் இந்தியாவிலும் உலக அளவிலும் கடுமையாக எதிர்த்து எழுதிய பத்திரிகை வினவுதான். இதை ஆதாரத்துடன் சுட்டிகளை இணைத்தால் இன்றைய பொழுது எனக்கு அதோடு போய்விடும். இங்கே வினவு எல்லா மத தீவிரவாத்தையும் சமமா எதிர்த்துள்ளது. ஆனால் கண்ணை மூடிக்கொண்டு கருத்து சொல்பவர்களுக்கு எழுதுவது எனது வேலை அல்ல.

    இரண்டாவது சபரிமலை விவகாரம். என்ன அநியாயம் இது. பினராயி விஜயன் அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறது. அப்போது சபரிமலைக்கு போவதற்கு அனுமதிக்கும் படி பெண்கள் கேட்கக்கூடாது என்கிறீர்களா? எனக்கு நினைவு வருவது உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ராஜாராம் மோகன் ராய் எதிர்த்தபோது அவருக்கு வராத எதிப்புக்களா? அவரும் இன்றைய சீர்திருத்தவாதிகள் போல படாத பாடு பட்டார். அவரது இயக்கத்தின் சீர்திருத்த நோக்கத்தை சட்டமாகியது ஆங்கிலேய கிறிஸ்தவ கவர்னர். அப்போ இப்பிடித்தான் மோகன் ராய் கிறிஸ்தவர்கள் இந்துக்களின் வழக்கத்தில் தலையிடக்கூடாது என்று மோகன் ராய் சொன்னாரா ? சொல்லியிருந்தால் இப்போதும் பெண்களை கொளுத்தியிருப்பார்கள். அப்பிடி சொல்லமாட்டார். என் என்றால் மோகன் ராய் ஒரு மானிட நேயர். உடன்கட்டை ஏறும் பழக்கத்தால் தனது குடுப்பதிலேயே பாதிக்கப்பட்டதால் அவருக்கு அந்த மனித நேயம் ஏற்பட்டது. இங்கே பலர் பாசிசத்தால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று உச்ச நீதிமன்றில் சபரிமலை நுழைவுக்கு எதிராக சனாதனிகள் மீளாய்வு செய்கிறார்கள். இதே போல அன்று வங்காள கவர்னரின் சட்டத்துக்கு எதிராக மன்னர்களும் வேத பண்டிதர்களும் பிரிவியூ கவுன்சில் வரைக்கும் அப்பீலுக்கு போனார்கள். பாருங்கள் வரலாற்றில் இவர்களின் நடவடிக்கை ஒரே மாதிரிதான். போகவில்லை என்று சுப்பிரமணிய சுவாமி சொல்ல முடியாது இன்று. சகல ஆதாரங்களும் இந்தியாவில் மிக பத்திரமாக இருக்கின்றன. இணையத்திலேயே தேட கிடைக்கிறது .
    இரணடாவது இவர்களின் வழிமுறை KKN சொன்னதுபோல திசை திருப்பவது. சுப்பிரமணிய சுவாமியிடம் நாட்டின் பொருளாதாரம் ஏன் இப்போது மந்தமடிகிறது என்று கேட்டால் அதற்கு பதில் கொடுப்பதை விட்டு விட்டு பாபர் மசூதிக்கு திரும்புவது. ஏன் ஐயா உமக்கு தெரிந்த விடயத்தில் ஒரு விஷயத்தை கேட்டால் அதற்கு பதில் தராமல் என்ன சுற்றி வளைப்பு. வாதித்தால் நிறைய விடங்களை இங்கே சொல்லிக்கொண்டே போகலாம். விரிவு அஞ்சி தவிர்க்கிறேன்.

    • என்னமோ சதி இந்தியாவில் மட்டுமே நடந்த கொடுமை என்பது போல் பேசுகிறீர்கள்… இது உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்த செயல்… மிக பழமையான கிரேக்க மற்றும் அன்றோனோவோ (Andronovo) கலாச்சாரத்திலும் இருந்து இருக்கிறது. சீனாவிலும் இது பின்பற்ற பட்டது. என்னமோ வெள்ளைக்காரர்கள் வந்து தான் எங்கள் நாட்டிற்கு கலாச்சாரம் கற்றுக்கொடுத்தது போல் பேசுகிறார்கள்… கிறிஸ்துவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் சதி நிறுத்தப்பட்டு இருக்கும். உங்களின் கதையலப்பை எல்லாம் வேறு யாரிடமாவுது சொல்லுங்கள்.

      உச்ச நீதிமன்ற தீர்ப்பை பற்றி பேச்சை திசை திருப்பாமல் நேர்மையாக பதில் சொல்லுங்கள்… கேரளாவில் உள்ள St Mary’s Church பற்றி 3ம் ஜூலை மாதம் 2017 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. இன்று வரையில் அந்த தீர்ப்பை செயல்படுத்த கேரளா எதையும் செய்யவில்லை.

      அதே உச்ச நீதிமன்றம் 28 செப்டம்பர் 2018 சபரிமலை பற்றி தீர்ப்பு சொன்னது, அதை செயல்படுத்த காட்டிய வேகத்தில் ஒரு துளி கூட ஏன் சர்ச்க்கு எதிராக கேரளா அரசு காட்டவில்லை.

      அதை ஏன் வினவு போன்றவர்கள் கேள்வி கேட்கவில்லை ?

      கேரளா அரசு ஏன் சர்ச்க்கு எதிரான தீர்ப்பை நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை இந்த கேள்விக்கு பதில்லை சொல்லி விட்டு பிறகு பேசுங்கள்… சர்ச்க்கு எதிராக மட்டும் சட்டங்கள் வேலை செய்யது ?????

      இந்த செயல் உங்களுக்கே வெட்கமாக இல்லையா ?

      • அதாவது மணிகண்டன் அவர்களது கேள்வி என்னவென்றால்… “கிறித்தவர்களுக்கு எச்சி இலையில் உருளவும், உடன்கட்டை ஏறவும் அனுமதிக்கிறீர்கள். இந்துக்களை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்”.

        • கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை போல் (மதத்தின் பெயரால்) பெரும் கொலை கொள்ளைகளை ஹிந்து மதத்தில் நடந்தது இல்லை… கிறிஸ்துவராக மதம் மாறினால் தான் உயிர்வாழ முடியும் இல்லையென்றால் சித்தரவதை கொலைகள்(கோவா) ஹிந்து மதத்தில் நடந்து இல்லை… இதை இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் இருவருமே இரக்கமே இல்லாமல் பல நாடுகளில் செய்து இருக்கிறார்கள், இன்றும் இந்த பாவங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

          அதனால் முதலில் உங்களை போன்ற கிறிஸ்துவ இஸ்லாமியர்கள் முதுகில் இருக்கும் அழுக்கை துடைத்து விட்டு பிறகு ஹிந்து மதத்தை பற்றி பேச வாருங்கள்.

    • //எனக்கு தெரிந்து இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் இந்தியாவிலும் உலக அளவிலும் கடுமையாக எதிர்த்து எழுதிய பத்திரிகை வினவுதான்/// அப்படிங்களா 🙂 🙂 🙂

      ஹிந்து மத கடவுள்களை பற்றியும் வேதங்களை பற்றியும் ஹிந்துக்களின் நம்பிக்கைகளை பற்றியும் வினவு எவ்வுளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

      இயேசுவை பற்றியோ அல்லது அல்லாஹ் அல்லது முகம்மது அல்லது பைபிள் அல்லது குரான் பற்றியோ ஏன் வினவு ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை ?

      நானும் பல காலமாக வினவிடம் கேட்டு கொண்டு இருக்கிறேன் ஹிந்து மதத்தை விமர்சனம் செய்வது போல் குரான் அல்லது பைபிள் பற்றி ஒரு எழுதுங்களேன் என்று கேட்டு கொண்டு இருக்கிறேன், இன்று வரையில் வினவு அது பற்றி வாய் திறந்ததே இல்லை.

      இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மாதங்களில் உள்ள தனிமனிதர்களை வினவு விமர்சனம் செய்வது வேறு, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத்தை விமர்சனம் செய்வது என்பது வேறு.

      குரான் அல்லது பைபிளை விமர்சனம் செய்தால் என்ன ஆகும் என்பது வினவிற்கு தெரியும் அதனால் எந்த காலத்திலும் குரான் பற்றியோ அல்லது பைபிள் பற்றியோ வாய் திறக்க மாட்டார்கள்.

      ஊருக்கு இளிச்சவாய மத நம்பிக்கைகளை பற்றி யார் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாம், ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையின் மீது தான் இத்தனை காலம் கிறிஸ்துவர்கள் இஸ்லாமியர்கள் கம்யூனிஸ்ட்கள் விளையாடி கொண்டு இருந்தார்கள் இப்போது மக்கள் விழிப்படைந்து இருப்பதால் பிஜேபியை ஆதரிக்கிறார்கள்.

      கம்யூனிஸ்ட்கள் மேல் வெறுப்படைந்து நாட்டின் அனைத்து இடங்களிலும் அவர்களை ஒதுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள், அவர்களின் தேசவிரோதம் மக்கள் விரோத செயல்களால் மக்கள் வெறுத்து போய் இருக்கிறார்கள்.

      • மணிகண்டன் சார்,
        “கடவுள் வறுமையை வாழ வைக்கிறார். வறுமை கடவுளை வாழ வைக்கிறது.”
        “மதம் ஒரு அபின்” எனும் நிலைப்பாட்டில் வினவு தளம் தொடர்ந்து எழுதிவருகிறது. அந்த வகையில் இன்றைய பவுத்தத்தைக் கூட விமர்சிக்கவே செய்கிறது.
        பாகிஸ்தானிலோ ஆப்கானிலோ அரேபியாவிலோ ஆதிக்கத்தில் இருக்கும் எந்த முஸ்லிம்களுக்கோ ஆதரவாக நம் வினவு தளம் பேசுவதில்லை. அவர்களை கடுமையாக விமர்சிக்கிறது. இந்திய முஸ்லிம்களின் மோசமான நிலைக்கு வருந்துவது உங்களுக்கு உறுத்தினால் உங்களைப் போன்றவர்களைத்தான் வினவு தளம் விமர்சிக்கும். விமர்சிக்க வேண்டும்.

        அது ஒரு புறம் இருக்கட்டும். உலக மக்கள் அனைவரும் ஆதாம் ஏவாளின் (ஓருதாயின்) பிள்ளைகள் என்று கூறும் கருத்துக்கு நிகராக உங்கள் சனாதனம் என்ன சொல்லும். மக்களை பிரம்மனின் மார்பிலே பிறந்தவன் காலிலே பிறந்தவன் என்று கேவலப்படுத்துமே.

        • அப்படிங்களா… பிறகு ஏன் மதவெறி பிடித்து திரியும் காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கு (பாகிஸ்தானுக்கு) ஆதரவாக வினவு பேசுகிறது… அல்லாஹு அக்பர் என்று சொல்பவர்கள் மட்டும் தான் காஷ்மீரில் வாழலாம் என்று சொல்லி ஆயிரக்கணக்கான ஹிந்துக்களை கொலை செய்த இஸ்லாமியர்களை இன்று வரையில் வினவு ஆதரித்து கொண்டு தானே இருக்கிறது… அல்லாஹு அக்பர் என்று சொல்லும் இஸ்லாமியர்கள் சரி என்றால் பிறகு எப்படி ஜெய் ஸ்ரீராம் தவறாக இருக்க முடியும் ?

          காஷ்மீரில் இஸ்லாம் வந்தது சிக்கந்தர் மன்னர் காலத்தில் நடந்த பெரும் கொலை கொள்ளை அழிவிற்கு பிறகு தானே, அதற்கு முன்பு அங்கே ஹிந்து (சைவ) மதம் தானே இருந்தது.

          சும்மா வினவு எல்லா மதங்களையும் எதிர்க்கிறது என்ற கட்டுக்கதைகளை வேறு யாரிடமாவுது சொல்லுங்கள், வினவு பாக்கிஸ்தான் சீனாவின் கைக்கூலி… காஷ்மீர் பிரிவினையை ஆதரித்து பேசும் இவர்களால் என்றுமே திபெத் மக்களுக்காக பேச மாட்டார்கள், அங்கே நடக்கும் சீனா ராணுவ அட்டூழியங்களுக்கு எதிராக பேச மாட்டார்கள்.

          இது தான் வினவு மற்றும் உங்களை போன்றவர்களின் மிக கேவலமான நேர்மை…

    • காங்கிரஸ் கட்சி வாட்டிகனுக்காக செயல்படும் கட்சி என்பதற்கு ஆதாரம் அவர்கள் உருவாக்கிய “மிஷனரி விசா” எவ்வுளவு பெரிய மோசடி செயல் இது.

      காங்கிரஸ் ஆட்சியில் நடந்து போல் மிக பெரிய ஊழல்கள் பிஜேபி ஆட்சியில் இல்லை அதனால் தான் ரபேல் ஊழல் என்று வினவு போன்றவர்களும் காங்கிரஸ் கட்சியினரோடு சேர்ந்து கொண்டு பலரும் பொய்க்ளை பரப்பினார்கள். இத்தனைக்கும் நீதிமன்றத்தில் இவர்களால் ரபேல் பேரத்தில் ஊழல் நடந்து இருக்கிறது என்பதை நிரூபிக்க முடியாமல் தோற்றார்கள், இது பற்றிய நீதிமன்ற தீர்ப்பு ஒரு முக்கிய காரணி (பிஜேபி வெற்றிக்கு)

      காங்கிரஸ் ஆட்சியின் நாட்டின் பொருளாதாரம் கீழ்மட்டத்திற்கு சென்றது மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டது. ஆதாரம் Time பத்திரிகையின் செய்தி

      மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஒரு செயல்படாத அரசு மத்தியில் இருந்தது போல் ஒரு பிம்பம் இருந்தது ஆனால் மோடியின் ஆட்சியில் செயல்படும் அரசு என்ற பிம்பத்தை வினவு போன்ற கம்யூனிஸ்ட்கள் மற்றும் மிஸ்சோனரிகள் சேர்ந்து கொண்டு உருவாக்கினார்கள். ஆதாரம் இவர்கள் GSTயில் ஆரம்பித்து தூய்மை இந்தியா திட்டம் உட்பட அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் எதிர்த்தன் மூலம் மோடி தலைமையிலான அரசு செயல்படும் அரசு என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள்.

      மக்கள் பிஜேபியை ஆதரிப்பதற்கு இப்படி பல காரணங்கள் உள்ளது…

      நான் பிஜேபியை ஆதரித்தற்கு முக்கிய காரணம் அவர்கள் இந்த நாட்டிற்காக செயல்படுகிறார்கள், வினவை போல் பாக்கிஸ்தான் சீனாவிற்காக பிஜேபி செயல்படவில்லை. இந்தியா சீனாவின் போரின் போது சீனாவை ஆதரித்த துரோகிகள் தானே கம்யூனிஸ்ட்கள், இன்றும் கூட காஷ்மீர் பிரிவினை வடகிழக்கு மாநில பிரிவினை செயல்களை ஆதரித்து கொண்டு இருப்பவர்கள் தானே இந்த அயோக்கிய கம்யூனிஸ்ட்கள்.

      ******************
      ஆனால் உங்களை போன்ற ஆட்கள் இது பற்றி எல்லாம் மூடி மறைத்து விட்டு என்னமோ இந்திய மக்களை முட்டாள்களாக நினைத்து கொண்டு இந்த மாதிரியான கட்டுரைகளை எழுதி கொண்டு இருக்கிறீர்கள்.
      ******************

  4. ஏண்டா இப்படி மக்களை ஏமாற்றி – பசப்பு வார்த்தைக்கூறி அவர்களது உரிமைகளை தனியாருக்கும் — அந்நிய முதலாளிகளுக்கும் தாரைவார்த்து சுதந்திர இந்தியாவை மீண்டும் அந்நியனிடம் அடகு வைக்க துடிக்கிறீர்கள் என்று கேட்டல் — இவனுங்க நேரடியா பதில் சொல்ல தெரியாமல் இன்னமும் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு — ஆண்டு ஓரங்கட்டப்பட்ட கட்சியையும் மற்ற மதங்களையும் உள்ளிழுத்து குளிர் காய்வதையே பிழைப்பாக கொண்டு திரிவதுதான் இவர்களின் வாடிக்கை … ! உதாரணத்திற்க்கு இவர்களின் ஏமாற்றுகிற பசப்பு வார்த்தைகளுக்கு : — ஒரு செய்தி

    // பிரதான் மந்திரம் கரம் யோகி மன் தன் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ .1.5 கோடிக்கும் குறைவான வர்த்தகம் கொண்ட 3 கோடி சில்லரை வணிகம் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படும். // ….

    ஓய்வு ஊதியம் என்று கூறி இவர்களை ஓரங்கட்டிவிட்டு — தனியார் கார்பொரேட்களை சில்லறை வணிகத்தில் புகுத்த நினைக்கும் இவர்களின் உண்மை முகம் புரிகிறது …!!

  5. // கிறிஸ்துவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் சதி நிறுத்தப்பட்டு இருக்கும். உங்களின் கதையலப்பை எல்லாம் வேறு யாரிடமாவுது சொல்லுங்கள்.// அதுதான் ராஜாராம் மோகன் ராய்க்கு எதிராக அன்று பார்ப்பனர்களும் சனாதனர்களும் சாதி இந்துக்களும் திரண்டார்களா? 1987 இல் நடந்த சதிக்கு பிறகு ரூப்கன்வர் ஆண்டு விழாகொண்டாடத்தில் பாஜக தலைவர் கலந்துகொண்டு சிறப்பித்தார். சுதந்திரத்துக்கு பிறகும் பல மடாதிபதிகள் சதிக்கு ஆதரவு தெரிவித்தார்கள். 32 ஆண்டுகளுக்கு முன்புகூட சதிக்கு ஆதரவான போது கருத்தை உண்டாக்க சனாதனிகள் முயற்சி செய்தன. இவர்கள் தான் சொல்கிறார்கள் சாதி தான ஒழிந்திருக்குமாம். வாக்கு வாங்கி அரசியலுக்கு பலம் குடுக்குமென்றால் இப்போது கூட சதி கொண்டாத்தை சதி விருப்பத்துடன் நடப்பதை என்று பல சட்டங்களை பிஜேபி கொண்டுவர தயங்காது. ராஜபுத்திரர்களின் கலாசார புஸ்பம் என்று நியாயம் பேசி கொள்ளலாம். யாரிடம் உங்கள் கதைகளை அழக்கிறீர்கள். உண்மை சொன்னதும் எரிகிறதா. உங்களை சொல்லி குற்றம் இல்லை. இந்தியாவில் நடந்த இந்து மத சீர்திருத்தங்களுக்கு அதன் வரலாறு முழுவதும் கடும் எதிரி சனாதன மடங்களும் உங்கள் பிஜேபி இன் மூதைதையர்களும்தான். கவனம். இப்போதும் நீங்கள் சதிக்கு ஆதரவாக தனிநபர் தீர்மானம் கொண்டுவர முயற்சிப்பீர்கள் என்று நன்கு தெரியும்.

    //உச்ச நீதிமன்ற தீர்ப்பை பற்றி பேச்சை திசை திருப்பாமல் நேர்மையாக பதில் சொல்லுங்கள்… கேரளாவில் உள்ள St Mary’s Church பற்றி 3ம் ஜூலை மாதம் 2017 ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. இன்று வரையில் அந்த தீர்ப்பை செயல்படுத்த கேரளா எதையும் செய்யவில்லை.// என்ன கரைச்சல் ஐயா இது. உச்ச நீதிமன்றம் சொன்னால் கேரளா அரசு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உடனடியாக அவதூறு வழக்கை போடு. பிரச்சினை முடிந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரளா அரசு நிறைவேற்ற தான் வேண்டும். அது எதுவாக இருந்தாலும். உங்களுக்கு அந்த வாய்ப்பு அரசியலமைப்பு தந்தது. அதை பயன்படுத்த யாருக்கும் தடை இல்லை. அதை பயன்படுத்தி அரசை தண்டிப்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை.

    //இயேசுவை பற்றியோ அல்லது அல்லாஹ் அல்லது முகம்மது அல்லது பைபிள் அல்லது குரான் பற்றியோ ஏன் வினவு ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை ?//

    //இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மாதங்களில் உள்ள தனிமனிதர்களை வினவு விமர்சனம் செய்வது வேறு, இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத்தை விமர்சனம் செய்வது என்பது வேறு.//

    இது சோம்பேறித்தனம் என்பதா அல்லது அயோக்கியத்தனம் என்பதா என்று நமக்கு தெரியவில்லை.

    “குரானோ, ஷரியத்தோ சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் கொண்டவையும் அல்ல.”

    “இது 21ம் நூற்றாண்டு. பங்குச் சந்தை சூதாட்டங்கள் பற்றியோ, இணைய வக்கிரங்கள் பற்றியோ, பாலியல் திரைக்காட்சிகள் பற்றியோ அல்லது விலையேற்றம், மின்சாரத் தடை, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சமகால வாழ்க்கைச் சிக்கல்களுக்கு குரானிலோ பைபிளிலோ என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தேடிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.”

    “இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் மாட்டிக் கொண்டால் தமிழ்நாட்டில் ஏழை முஸ்லிம்கள், தலையில்லாமல் வாழும் கலையைக் கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணக்கார முஸ்லீம்கள், பி.ஜே யிடம் பணம் கட்டி, சொர்க்கத்துக்கு நுழைவுச்சீட்டு வாங்கிவிடுவார்கள்.”

    “வெளி வேலைக்கு ஒரு பெண் விமானமேறுவதை ஷரியா அனுமதிக்கவில்லையென்றால், வளைகுடா ஷேக்குகள், இசுலாமிய ஏழைச் சிறுமிகளை எப்படி இறக்குமதி செய்கிறார்கள்? ஆண்கள் கூப்பிடுவது குற்றமில்லை, பெண்கள் போவதுதான் குற்றம் என்கிறதா இவர்களது சட்டம்? பரவாயில்லையே, நம்மூர் விபச்சார தடை சட்டம் மாதிரியே “நடுநிலையாக” இருக்கிறதே!”

    இவை எல்லாம் வினவில் வந்த சில துணுக்குகள் (Glimpse of articles). நிறைய இருக்கிறது. இவை ஒன்றும் தனிமனித தாக்குதல் சார்ந்த கட்டுரைகள் அல்ல.முதலில் தேடி படியுங்கள். பிறகு உங்கள் விமர்சன புஸ்பங்களை எறியலாம்.

    //காங்கிரஸ் ஆட்சியின் நாட்டின் பொருளாதாரம் கீழ்மட்டத்திற்கு சென்றது மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட்டது. ஆதாரம் Time பத்திரிகையின் செய்தி //
    அடப்பாவிகளா இப்பிடியா பொய் சொல்வது. கடந்த காங்கிரஸ் ஆட்சியை கழுவி ஊத்தியது வினவு. பல நூறு கட்டுரைகள். மீண்டும் சோம்பேறித்தனமா?

    காஸ்மீர் என்றைக்கும் இந்தியாவுக்கு சொந்தம் அல்ல. காஸ்மீர் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கேவலமான சீயோனிஸம். இதன் வரலாறு சுதந்திரத்தின் போது தொடங்கியது. வரலாறு காசுமீருக்கு சாதகமானது. சு.சாமிக்கு சொந்தமானது அல்ல. நீங்கள் எனக்கு எதிராக சு. சாமியிடம் சொல்லி ஒரு தேச துரோக வழக்கை போடலாம். செய்து பாருங்களேன்.

    இந்திய அரசியலைப்புக்கு விரோதமான பேர்வழிகள் இந்த சங்பரிவாரங்களும் பிஜேபிம். முதலில் இவர்களைத்தான் தடை செய்ய வேண்டும்.
    இறுதியாக 120 கோடி மக்களும் ஹிந்தி படித்து ஹிந்துவாக மாறினாலும் பிஜேபியின் ஒரே நாடு ஒரே கடசி என்பது நடக்காது. மோகன் பகத் பிரதமரானாலும் அதுதான் நிலை. இல்லை மாநில அரசுகளை முழுங்கிவிட்டு ஒரே ஆட்சியை நடைமுறைப்படுத்தினால் மிக மோசமாக நிர்வாக சீரழிவு ஏற்படும். அதுதான் நிர்வாக விதி.

    உதாரணமாக மணிகண்டனின் ‘மக்கா’ அமெரிக்காவையே எடுப்போம். அமெரிக்காவில் ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே இனம் (மிக பெரும்பான்மையாக ) மற்றும் ஒரே கனவு. பொருளாதாரம் சொல்லவே வேண்டாம். இந்தியாவின் தனியார்மயமாக்கல் எல்லாம் கால் தூசுக்கு சமம். அங்கே Private Army, Private prison எல்லாம் உண்டு. Federal Reserve (Central Bank of America) கூட பெருமளவுக்கு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. (அப்பிடி இல்லை என்பவர்கள் இங்கே வந்து பொங்க வேண்டாம். விடயத்தை நன்கு படித்து விட்டு வரவேண்டும்).பின் என்ன புஸ்பத்துக்கு அங்கே மாகாணங்களுக்கு அதிகார பரவல். கவனிக்கவும்; அமெரிக்க மாகாணங்கள் இந்திய மாகாணங்களை விடவும் மிக அதிக அதிகாரங்கள் கொண்டவை. உதாரணமாக சில மாகாணங்களில் மரண தண்டனை உண்டு. சிலவற்றில் இல்லை. அதன் அர்த்தம் கூட்டசி என்பது அமெரிக்காவுக்கு அத்தியாவசியம். இந்தியாவுக்கும் மிக அத்தியாவசியம்.
    ஆனால் நான் முன்பு குறிப்பிட்டது போல இந்தியா முழுவதும் பிஜேபி அதன் ஒரே நாடு ஒரே மதம் கொள்கையை அமுல்படுத்துவது நல்லதுதான். அதுதான் இவர்களின் அகண்ட பாரத கொள்கையை சவக்குழிக்கு அனுப்பும். எனவே வரலாற்றில் பிஜேபி முதுகெலும்பு உள்ள அமைப்பு என்றால் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மதம் ஒரே இனம் ஒரே புஸ்பம் கொள்கையை அமுல்படுத்தட்டும். புற்று நோயாளி சீல் வடிந்து துன்பப்படுவதை விட அவயவங்களை அகற்றுவது நல்லது.
    இறுதியாக இனி பதில் அளிக்க மாட்டேன். வரலாறு தெரிந்து, பொருளாதாரம் தெரிந்து அரசியலமைப்பு தெரிந்து Compelling Arguments முன்வைக்க வேண்டும். ஆய்வு சோம்பேறிகளுடன் விவாதிக்க முடியாது. நன்றி

    • //இரண்டாவது சபரிமலை விவகாரம். என்ன அநியாயம் இது. பினராயி விஜயன் அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறது. // இது உங்களின் வார்த்தை தான், சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்த காட்டிய ஆர்வத்தில் ஏன் ஒரு துளிகூட சர்ச் விவகாரத்தில் காட்டவில்லை என்று கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லாமல் என்னை குறை சொல்கிறீர்கள் 🙂 இது தான் கிறிஸ்துவர்களின் அயோக்கியத்தனம் என்பது.

      //இது சோம்பேறித்தனம் என்பதா அல்லது அயோக்கியத்தனம் என்பதா என்று நமக்கு தெரியவில்லை./// இதில் யார் அயோக்கியன் நீங்களா இல்லை நானா ? என் கேள்வி ஹிந்து கடவுள்களை பற்றி (உதாரணம் ராமனை) கீழ்தரமாகவும் அவதூறாகவும் பேச முடிந்த வினவால் ஏன் முகம்மது நபி பற்றியோ அல்லது இயேசுவை பற்றியோ பேச முடியவில்லை என்பது தான்… அதற்கு பதிலை சொல்லாமல் சில நபர்களை (இயக்கங்களை) பற்றி வினவு செய்த விமர்சங்களை எடுத்து காட்டாக சொல்லி கொண்டு இருக்கிறீர், உங்களின் அய்யோக்கியத்தனத்திற்கு ஒரு அளவே கிடையாதாபா ?

      ஆங்கிலேயர்கள்(கிறிஸ்துவர்கள்) வந்து எங்கள் நாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது, ராமானுஜரை போல் எத்தனையோ பேர் எங்கள் நாட்டில் இருக்கிறார்கள்.

      மேலும் சதி என்பது ராஜஸ்தான் பகுதியில் அதிகமாக இருந்த விஷயம் மேற்கு வங்கத்தில் அந்தளவுக்கு கிடையாது, இது கிறிஸ்துவ மிஷனரிகள் செய்த பல பொய் பித்தலாட்டங்கள் ஒன்று…

      இன்றும் கூட ISIS தீவிரவாதிகளிடம் சிக்கிய பெண்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள், பலர் தற்கொலை செய்ய முயற்சித்தேன் என்று பேட்டியும் கொடுத்து இருக்கிறார்கள். இஸ்லாமிய படையெடுப்பினால் இந்தியா அனுபவித்த எத்தனையோ கொடுமைகளில் பெண்களை அடிமைகளாக தூக்கி சென்றதும் ஒன்று… அவர்களிடம் இருந்து தப்பிக்க பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள் அல்லது உடன்கட்டை ஏறி இருக்கிறார்கள். மேலும் உடன்கட்டை என்பது இந்தியாவில் மட்டும் நடந்த விஷயம் கிடையாது இது உலகின் பல பகுதிகளிலும் நடந்த விஷயம் (சீனாவில் 1963ல் நடந்து இருக்கிறது)

      இப்போதும் கேட்கிறேன் வினவு முகம்மது நபி பற்றியோ அல்லது இயேசு பற்றியோ ஹிந்து கடவுள் ராமனை விமர்சனம் (விமர்சனம் என்ற பெயரில் அவதூறு) செய்தது போல் ஒரு கட்டுரை காட்டுங்கள் பார்ப்போம் ???

      ஹிந்து மதத்தை விமர்சனம் செய்தது போல் வினவு கூட்டங்கள் என்றுமே மற்ற மதங்களை விமர்சனம் செய்ய மாட்டார்கள், அதிகபட்சம் மயில் இறகால் தீண்டுவது போல் வலிக்காத மாதிரி ஒரு கட்டுரை எழுதி தங்கள் கடமையை முடித்துக்கொள்வார்கள்.

      தலாக் பற்றி வினவின் விமர்சனம் இது தான்

      //சரியத் சட்டம் என்பது இந்திய பீனல்கோடு போல வரிசையாக தெளிவாக எழுதி வைக்கப்பட்ட புத்தகம் அல்ல. குர்ஆன் வசனங்களிலும் நபிமொழிகளிலும் ஆங்காங்கே காணப்படுபவைகளைக் கொண்டு எடுத்தாளப்படுபவைகள். அவற்றில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இன்று சுன்னத் ஜமாத்தினரும் தவ்ஹீத் ஜமாத்தினரும், முரண்பாடுகளை அவரவருக்குப் பிடித்த மாதிரி எடுத்துக் கொண்டு சண்டையிடுவதும், தமக்குத்தாமே அக்மார்க் முத்திரைக் குத்திக் கொள்வதும் போல அன்று முதல் இன்றுவரை தர்க்கமும் சண்டையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு அரபிமொழியின் வளமின்மையும் ஒரு காரணம்.//

      இது தான் வினவு மற்றும் உங்களை போன்றவர்களின் அயோக்கியத்தனம்.

  6. அடடா தேவையில்லை என்று இருந்தேன் ஆனால் ஒரு கருத்து என்னை இழிவுபடுத்துகிறது.
    /////இரண்டாவது சபரிமலை விவகாரம். என்ன அநியாயம் இது. பினராயி விஜயன் அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துகிறது. // இது உங்களின் வார்த்தை தான், சபரிமலை தீர்ப்பை நடைமுறைப்படுத்த காட்டிய ஆர்வத்தில் ஏன் ஒரு துளிகூட சர்ச் விவகாரத்தில் காட்டவில்லை என்று கேட்ட கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லாமல் என்னை குறை சொல்கிறீர்கள் 🙂 இது தான் கிறிஸ்துவர்களின் அயோக்கியத்தனம் என்பது.///

    இதற்கு எனது பதில் //என்ன கரைச்சல் ஐயா இது. உச்ச நீதிமன்றம் சொன்னால் கேரளா அரசு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உடனடியாக அவதூறு வழக்கை போடு. பிரச்சினை முடிந்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு கேரளா அரசு நிறைவேற்ற தான் வேண்டும். அது எதுவாக இருந்தாலும். உங்களுக்கு அந்த வாய்ப்பு அரசியலமைப்பு தந்தது. அதை பயன்படுத்த யாருக்கும் தடை இல்லை. அதை பயன்படுத்தி அரசை தண்டிப்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை.// இதிலே நான் எங்கே மணிகண்டனை குறை சொன்னேன். இந்த கருத்தில் நான் கேரளா அரசு பிழை செய்கிறது என்றுதான் சொல்கிறேன். அதனால் தான் சட்டப்படி அவதூறு வழக்கு போட்டு தண்டியுங்கள் என்கிறேன். இதிலே எனக்கு எனது கருத்து தவறாக தெரியவில்லை. DOD.

  7. //இஸ்லாமிய படையெடுப்பினால் இந்தியா அனுபவித்த எத்தனையோ கொடுமைகளில் பெண்களை அடிமைகளாக தூக்கி சென்றதும் ஒன்று… அவர்களிடம் இருந்து தப்பிக்க பல பெண்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள் அல்லது உடன்கட்டை ஏறி இருக்கிறார்கள்.//

    இது நான் எப்போதோ எதிர்பார்த்தேன் வந்துவிட்டது.அதுசரி இந்த கதை உங்களுக்கு எச் .ராஜா சொன்னதுதானே. தெரியும் எனக்கு. அவர் தான் இந்த கதை அடிக்கடி சொன்னவர். அப்போ தமிழ்நாட்டில் நடந்த சதிகளுக்கு யார் கரணம் என்று பாண்டே குறிக்கிட கதை மாற்றிவிட்டார். பொதுவாக சித்தூர் படையெடுப்பின் போது நடந்தவற்றை குறித்து நாடு முழுமைக்கும் பொதுமைப்படுத்தி சொல்லப்படுகிற கதை இது. புகழ் பெற்ற காதல் ஜோடி சம்யுக்தை பிருதிவிராஜ் என்பவர்களில் சம்யுக்தை எப்பிடி இறந்தாள். உடன்கட்டை ஏறித்தான் இறந்தாள். அப்போது முஸ்லீம் படையெடுப்பு நடக்கவில்லை. பிற்காலத்தில் அக்பர் சதியை தடை செய்தார். என்ன ஐயா வரலாறே படிக்கவில்லையா? அப்போதுகூட காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து உடன்கட்டை ஏறுதல் இடம்பெற்றது.

    //மேலும் சதி என்பது ராஜஸ்தான் பகுதியில் அதிகமாக இருந்த விஷயம் மேற்கு வங்கத்தில் அந்தளவுக்கு கிடையாது, இது கிறிஸ்துவ மிஷனரிகள் செய்த பல பொய் பித்தலாட்டங்கள் ஒன்று…// -முற்றிலும் தவறு. 1815-1828 இடைப்பட்ட காலத்தில் நாட்டில் இடம்பெற்ற சதிகளில் 63 சதவீதம் மேற்கு வங்கத்தில் ஆங்கில ஆடசிகாலத்தில் நடந்தவை. அதுதான் மோகன் ராய் கடுமையாக எதிர்வினையாற்ற, ஆங்கில அரசு சட்டம் இயற்ற காரணமாக இருந்தது. இது காந்தியவாதி தரம்பால் பதிவு செய்தது. (காந்தியை பின்தொடர்தல் -தரம்பால்). [ஓ சாரி காந்தியின் பெயரை உங்களுக்கு சொல்லி விட்டேன். சரி கோட்ஸே பிறந்தபோது கோட்ஸே அதை எதிர்த்தார் என்றும் தரம்பால் ஒரு கிறிஸ்தவர் என்றும் நீங்கள் தாராளமாக சொல்லலாம்: 🙂 ].

    இரண்டாவது உடன்கட்டை ஏறுவது ராஜபுத்திர குலவழக்கம் மட்டுமே என்பதுபோல ஒரு கதை அடிபடுகிறது. அது ஒரு வடிகட்டிய பொய். உடன்கட்டை ஏறுதல் ஒரு இந்து மத வழக்கம். சதி எனும் சொல் பராசக்தி தக்கன் யாகத்தில் தீக்குள் விழுந்து மாண்டதை குறிக்கும் வார்த்தை. இங்கே நமதூரில் வானவன் மாதேவி உடன்கட்டை ஏறினாள் (ராஜராஜ சோழனின் தாய் ). எனக்கு தெரிந்து வானவன்மாதேவி ராஜபுத்திர வம்சம் அல்ல.

    //மேலும் உடன்கட்டை என்பது இந்தியாவில் மட்டும் நடந்த விஷயம் கிடையாது இது உலகின் பல பகுதிகளிலும் நடந்த விஷயம் (சீனாவில் 1963ல் நடந்து இருக்கிறது)// அதுசரி நீங்கள் ஏன் சீனாவை பற்றி கவலைப்படுகிறீர்கள். பிறகு எங்களை சீனாவுக்கு ஆதரவு என்று கூறுவது. ஆனால் நீங்கள்தான் சீனாவைப்பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். எனக்கு சிரிப்புதான் வருகிறது. “பயப்பிடுறியா குமாரு” .

    சரி போய் துலைகிறது. எப்போது சதியை மீண்டும் அமுல்படுத்த தனிநபர் மசோதா தாக்கல் செய்ய போகிறீர்கள். அதை மட்டும் சொல்லிவிடுங்கள். போதும்.

    • அய்யய்யோ..! நரகலை ஏன் நோண்டிவிடுறீங்க Barthipan..!! 😢😣😥

    • ///இந்த கதை உங்களுக்கு எச் .ராஜா சொன்னதுதானே/// உங்களின் அறிவு இதில் தான் தெரிகிறது… இதை சொன்னது ராஜா அல்ல, இது பற்றி இஸ்லாமிய அரசர்களோடு வந்த மத குருமார்களே நேரடியாக பார்த்து எழுதி இருக்கிறார்கள், அந்த புத்தகங்கள் மிக கொடூரமாக இருக்கும், படிப்பதற்கே பதறும் அளவிற்கு மிக மோசமானதாக இருக்கும். ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஹிந்து குஷ் மலையின் பெயரே ஹிந்துக்கள் மரணம் மலை என்று தானே அர்த்தம். அதன் வரலாறு இன்னும் கொடுமையானது.

      இந்தியாவில் இஸ்லாமிய வரலாறு என்பது மிக கொடூரமான வரலாறு.

      நான் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களை எதிர்ப்பதற்கு இந்திய வரலாறு முக்கிய காரணம், இஸ்லாமியர்களுக்கு சற்றும் குறையாமல் மிக கொடூரமாக கிறிஸ்துவர்களும் நடந்து கொண்டு இருக்கிறார்கள் (அதற்கு இன்றைய கோவா உட்பட ஏராளமான ஆதாரங்கள் உள்ளது)…

      கிறிஸ்துவ இஸ்லாமிய மாதங்களுக்கு சற்றும் குறையாமல் அதே சகிப்பின்மையோடு இருப்பது கம்யூனிசம்…

      //முற்றிலும் தவறு. 1815-1828 இடைப்பட்ட காலத்தில் நாட்டில் இடம்பெற்ற சதிகளில் 63 சதவீதம் மேற்கு வங்கத்தில் ஆங்கில ஆடசிகாலத்தில் நடந்தவை// இது கிறிஸ்துவ மதமாற்றிகளின் பல பொய்களில் மேலும் ஒரு பொய்.

      ///உடன்கட்டை ஏறுதல் ஒரு இந்து மத வழக்கம்/// இல்லை இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது, அதில் ஒன்று மஹாபாரதத்தில் பாண்டவர்களின் தாய் குந்தி தேவி, கணவர் இறந்த பிறகு 5 பிள்ளைகளோடு காட்டில் விட பட்ட அவர் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினார்… மாத்ரி தனது கணவனின் மரணத்திற்கு தானே காரணம் என்ற காரணத்தால் உடன்கட்டை ஏறினார்… கணவனின் மீது இருக்கும் அன்பால் சில பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்… ஆனால் இது ஹிந்து மத பழக்கம் கிடையாது ஆதற்கு ஆதாரம் குந்தி தேவி உட்பட ஏராளமான ஆதாரங்கள் உள்ளது.

    • //1815-1828 இடைப்பட்ட காலத்தில் நாட்டில் இடம்பெற்ற சதிகளில் 63 சதவீதம் மேற்கு வங்கத்தில் ஆங்கில ஆடசிகாலத்தில் நடந்தவை. அதுதான் மோகன் ராய் கடுமையாக எதிர்வினையாற்ற, ஆங்கில அரசு சட்டம் இயற்ற காரணமாக இருந்தது. இது காந்தியவாதி தரம்பால் பதிவு செய்தது.// ஒன்று வரலாறு தெரிந்து கொண்டு பேச வேண்டும் இல்லையென்றால் வாய்மூடி இருக்க வேண்டும்.

      ஆங்கிலேயர்களின் (கிறிஸ்துவர்களின்) பொய்களின்படி மேற்கு வங்கத்தில் உடன்கட்டை ஏறுதல் மிக அதிகமாக இருந்தது அவர்கள் சட்டம் இயற்றியவுடன் உடனே உடன்கட்டை பழக்கம் நின்று விட்டதாம் (இதை வடிகட்டின முட்டாள்கள் தான் நம்புவார்கள்), இதற்காக அவர்கள் சர்ச்சில் ஒரு கல்வெட்டு வைத்து இருக்கிறார்கள், அதில் இருக்கும் சிலுவை தான் உங்களின் பொய் பித்தலாட்டங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

      கிறிஸ்துவர்களுக்கு இந்தியாவில் மக்களை மதம் மாற்ற காரணம் வேண்டும் அதற்கு உடன்கட்டை ஏறுதலில் ஆரம்பித்து பல பொய்களை பரப்பி இருக்கிறார்கள் (தலித் கடவுளின் பாதத்தில் இருந்து தோன்றியவன் என்ற பொய் உட்பட)

      கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வார்த்தை “Civilizing mission” (இதை விட பெரியதாக இந்தியர்களை யாரும் அவமதிக்க முடியாது) அதற்காக அவர்கள் பயன்படுத்திய காரணம் உடன்கட்டை ஏறுதல்… ஜேர்மன் மற்றும் பல நாடுகளின் கிறிஸ்துவ மிஷனரிகளை உள்ளே விடாமல் தடுக்க இதை ஒரு காரணமாக பயன்படுத்தினார்கள். உடன்கட்டை ஏறுதல் உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் சொல்வது போல் மிக பெரிய அளவில் மேற்கு வங்கத்தில் இல்லை என்பது தான் உண்மை.

      நாடுகளை பிடித்து மதம் மாற்றம் செய்ய கிறிஸ்துவ மிஷனரிகள் தான் முதலில் செல்வார்கள், அதன் பிறகு அந்த நாட்டு மக்களின் கலாச்சாரம் பண்பாட்டில் உள்ள குறைகளை காட்டி நீங்கள் பாவிகள் காட்டுமிராண்டிகள் நீங்கள் வணங்கும் கடவுள் சாத்தான் அதனால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள் (இது இன்றுவரையில் இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது)

      இதன் மூலம் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் பல நாடுகளை இனங்களை கிறிஸ்துவர்கள் அழித்து இருக்கிறார்கள்.

  8. இந்திய பொருளாதார பிரச்சனையை மதப்பிரச்னையாக மாற்றிய மணிகண்டன், இப்ப புரியுதா ஏன் இந்தியா முன்னேறவில்லை என்று?

    • ஐநா அறிக்கையின்படி இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரம்… உங்களை போன்றவர்களுக்கு உண்மையோ பொய்யோ பிஜேபி மீது அவதூறு பரப்ப வேண்டும் அவ்வுளவு தான்.

      அதெல்லாம் இருக்குட்டும் அது எப்படியா கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இப்படி ஒரு தலைப்பை வைத்து விட்டு “ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள்” இது பொருளாதார கட்டுரை என்று சொல்கிறீர்கள். கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாலே உங்களுக்கு எல்லாம் இருக்காதா ?

      • வேகமா வளர்ந்தா ஏன் பெட்ரோல் விலையை ஏத்துறீங்க? ஓ ஆண்டை அமெரிக்காவை எதிர்த்து ஈரானிடம் இந்திய ரூபாயில் பெட்ரோல் வாங்க முடியாததால், பெட்ரோல் விலையை ஏத்துறீங்க, அதை மறைக்க ஐ நா வின் ஆண்டை அமெரிக்க சொல்ல சொன்னதை ஐ நா சொல்லுது

        • ஹைட்ரோகார்பனை உங்கள் இஸ்லாமிய நாடுகள் குறைந்த விலையில் விற்றால் எங்கள் நாட்டிலும் விலை குறையும்.

          • ஈரான் தயார் தானே, ஏன் வாங்க முடியல, ஓ அமெரிக்க அடிமைகளால் எப்படி சுயமாக இயங்க முடியும், சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷாரின் காலை நக்கினார்கள், இப்ப அமெரிக்க காலை , காலை நக்குவதில் வல்லவர்களாயிற்றே

  9. Ashak நீங்க வேற ! என்னது பெருளாதாரமா ? அப்பிடின்னா ? அதெல்லாம் நாங்க வடிவா செய்துபோடுவோம். சென்சஸ் department கிட்ட சொல்லி GDP growth 15 சதவீதம் Unemployment 0.1 சதவீதம் என்று சொல்லிவிட்டா சரி. இதெல்லாம் ஒரு பிரச்சினையா. எவன் கேட்பான்…:) 🙂 🙂

  10. பிஜேபி ஒரு சாதிக்கட்சி. அது மதவாதக்கட்சி என்று சொல்வது மகா முட்டாள்தனம். தன் பார்ப்பன சாதிக்கு மட்டுமே அது செயல்படும். அதிலும் கார்பரேட் பார்ப்பனர்கள்/பனியாக்கள்/பார்சிகள் இவர்களுக்கு மட்டுமே செயல்படும். இவர்கள் அனைவரும் தரகு முதலாளிகளாக இருப்பதால் ஒரிஜினல் முதலாளியான அமெரிக்க ஐரோப்பிய கார்பரேட்களுக்கு கால் கழுவும் கட்சி பிஜேபி. மணிகண்டன் போன்றோர் அதைப் புரிந்து கொள்ள மறுப்பதனால் அவர் மட்டும் பாதிக்கப்பட்டால் பரவாயில்லை. நாம் எல்லோரும் நம் குழந்தைகளும் பாதிக்கப் படுகின்றன.
    முழுசா சந்திரமதியா மாறி இருக்கும் அவரோடு மோதுவது வீன்வேலை. அவர் ஏமாற்றப்பட்டது போல மேலும் அதிக மக்கள் ஏமாற்றப்படாமல் நாம் பிரச்சாரம் செய்வோம். (அவரும் செய்யட்டும்.)

    • ஜெகதீசன் – நீங்கள் குறிப்பிட்டுள்ளது சரியே. பிஜேபி – பாரதீய ஜனதா பார்ட்டி அல்ல. பிராமின் ஜனதா பார்ட்டிதான். இதை எந்த அரசியல் கட்சியும் சொல்வதில்லை. மக்களும் புரிந்து கொள்வதில்லை.

    • கடைசியில் உங்களால் வாதிட முடியவில்லை என்றால் உடனே பார்ப்பான் அது இது என்று ஜாதியின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டியது. ராமதாஸ் வன்னிய ஜாதியை வைத்து அரசியல் செய்கிறார் என்றால் உங்களை போன்ற வினவு கூட்டங்கள் தலித் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறீர்கள் அதற்கு புரட்சி போராட்டம் கம்யூனிஸ்ட் மார்க்சிசம் என்று முலாம் பூசி கொள்கிறீர்கள்.

      நான் பிஜேபியை ஆதரிக்க முக்கிய காரணம் அது தேச ஒற்றுமையை பேசுகிறது, கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரிவினையை தூண்டி விடுகிறார்கள்.

      நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவை இணைக்கும் முக்கிய சங்கிலி ஹிந்து மதம் மற்றும் சமஸ்கிரதம், அதனால் தான் உங்களை போன்ற கிறிஸ்துவர்களில் ஆரம்பித்து கம்யூனிஸ்ட்கள் வரையில் அனைவருமே ஹிந்து மதம் மற்றும் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறார்கள் (பிரிவினைவாதிகள் தேசவிரோதிகள் அத்தனை பேரிடமும் இந்த ஹிந்து விரோத ஒற்றுமை இருக்கும் அதை வைத்தே இவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ளலாம்)

      தமிழகத்தில் தமிழன் ஹிந்து இல்லை என்று சொல்லும் பிரச்சாரத்தில் பின்னணியில் இருப்பவர்கள் இதே கிறிஸ்துவ மற்றும் கம்யூனிஸ்ட்கள் தான். இது நாட்டை பலவீனப்படுத்த நடப்படும் பிரச்சாரம்.

      • ஹிந்துமத அடிப்படைவாதத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும், அதன் வரலாற்றையும் சரியாகப்படித்தால் மட்டுமே, பிஜேபி என்பது பிராமின் ஜனதா பார்ட்டி என்பது புரியவரும். அவ்வாறு படிப்பதற்கு காவிக்கண்ணாடியைக் கழற்றிவைத்துத்தொடங்குவது மிக மிக அவசியமானது. ராமதாஸ் வன்னியசாதியை அடையளப்படுத்தித்தான் அரசியல் செய்கிறார் என்பது ஊரறிந்தது. பார்ப்பன ஜனதா கட்சி என்பதுதான் சரியான பெயராகும்!

        ஆனால், பாஜக என்பது பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக பார்ப்பனீயத்தைப் பாதுகாக்கத் தொடங்கப்பட்டதுதான் என்பதை எவ்வளவு மக்கள்திரள் அறியும்?

        ஹிந்து என்பது ஒரு மதமே அல்ல. இந்தியாவை ஆள்வதற்கு வசதியாக, வெளிநாட்டினரால் – குறிப்பாக பாரசீகத்தினராலும், பின்னால் வந்த வெள்ளையினராலும், குறிக்க்கப்பயன்படித்திய பொய்யான அடையாளச் சொல் மட்டுமே. இந்தச்சொல்லுக்குள் மேலும் உட்புகுந்து உறித்துப்பார்த்தால், இந்து, இந்துமதம், இந்துத்துவம் என்பது பார்ப்பனீயமே.

  11. Indeed, BJP is a Bramin Party. It does not mean that all leaders and activists of BJP are Bramins. It really means BJP stand for braminism Ideology. That is all. No matter who preside the party. Why don’t people understand this phenomenon. Simply, That is Cultural hegemony. We have to work on this issue in the future to break down the ideology of BJP.

  12. வினவு..!
    இந்த ஈன சூத்திரப் பய மணிகண்டனோட தொல்லை தாங்க முடியல..!
    வர்ற தோழர்களும் இவன ஒரு மனுசனா மதிச்சு விவாதம் பண்ணி சின்னாபின்னமாகிடுறாங்க! எல்லாரோட நேரத்தையும் வீணடிக்கிற இவனோட மறுமொழிகளை மட்டும் கொஞ்சம் “ஸ்பெசலா” மட்டறுத்தீங்கன்னா உங்களுக்கு புண்ணியமாப் போகும்..!

    • கார்த்திகேயன் சார், நீங்கள் சொல்வது தவறு!
      மணிகண்டன் சாருடைய எல்லாக் கருத்துக்களும் பிற்போக்கானது, ஆதிக்கத்துக்கு ஆதரவானது. விளக்கில் விட்டில் பூச்சி போல அவர் விழுந்து கொண்டிருக்கிறார். அதற்கு ஆதரவும் தேடிக்கொண்டிருக்கிறார்.
      ஆனால் பெரும்பாலான சங்கிகளைப் போல அவர் வெறிகொண்டு கெட்ட வார்த்தை பேசவில்லை என்பதும், அவரது பிஜேபி ஆதரவு கருத்துக்களை வினவுதளம் அப்படியே வெளியிடுகிறது என்பதும் ஜனநாயகத்தன்மை கொண்ட செயல்களாக நான் பாராட்டுகிறேன்.
      அவர் இடதுசாரி மக்களோடு பேசட்டும், வரவேற்போம். எந்தக் கருத்தையும் யாரும் ஒரு நாளிலோ ஒரு விவாதத்திலோ மாற்றிக்கொள்ள முடியாது. அவர் சுரண்டப் படுவதை ஒருநாள் உணர்வார்.
      உங்கள் ஆதங்கத்துக்கு ஆறுதலாகத்தான் சொன்னேன். “கோணல் மானலான அவரது கருத்துக்களுக்கு நாம் மறுப்பு சொல்ல மெனக்கெட முடியவில்லை என்று வருந்தாதீர்கள். இன்னும் திறந்த புத்தகமாக எவ்வளவோ மக்கள் இருக்கிறார்கள். அவர்களை சிந்திக்க வைப்போம்.”

      • நண்பர் ஜெகதீசன்,
        வினவு மறுமொழிகளை மட்டறுப்பதில்லை என்று முடிவெடுத்தபோது அதனை நான் வரவேற்றேன். குறிப்பாக மணிகண்டனை குறிப்பிட்டு அவர் நம்மை புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்தேன். ஆண்டு திரும்பியும் மாற்றமில்லாததாலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையினாலும் என் மனம் சலிப்புற்றிருக்கலாம் என்று உணர்கிறேன். நீங்கள் கூறிய வார்த்தைகள் நிச்சயம் ஆறுதல் அளிக்கிறது. எதிரியையும் அன்பு செலுத்தும் தோழமைகள் இருக்கும் போது எனக்கு என்ன பிரச்சினை..!
        மணிகண்டன் விவாதங்களை தாராளமாக தொடரட்டும்….!

        • என் பார்வையில் கம்யூனிசம், இஸ்லாம், கிறிஸ்துவம் இவை மூன்றுமே இந்த நாட்டின் குணநலனுக்கு எதிரானது. இந்த மூன்று கொள்கைகளும் அடிப்படையில் சகிப்புத்தன்மை இல்லாதவை மாற்று கருத்துக்களை ஏற்காதவை.

          எங்கள் கொள்கை தான் உயர்ந்தது மற்றவை தாழ்ந்தது அவைகளை அழிப்பதால் எந்த தவறும் இல்லை என்று நினைக்கும் சிந்தனை இந்த மூன்று கொள்கைக்கும் உண்டு. அதனால் தான் கம்யூனிசம், இஸ்லாம், கிறிஸ்துவம் உலகம் முழுவதும் தங்கள் கொள்கையை பரப்புகிறோம் பெயரால் பெரும் அழிவுகளை செய்து இருக்கிறார்கள்.

          கிறிஸ்துவம் இஸ்லாம் செய்த மனித இன அழிவிற்கு சற்றும் குறைவில்லாதது கம்யூனிஸ்ட்களின் வன்முறை… இந்த மூன்று கொள்கைகளும் மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததால் அடிப்படையில் மனிதத்தன்மை இல்லாமல் இருக்கிறது ஆனாலும் இவர்கள் மூவருமே நாங்கள் மனிதம் பற்றி தான் பேசுகிறோம் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பொய் பேசுவார்கள்.

          இஸ்லாமியர்களை பொறுத்தவரையில் சவூதி பாக்கிஸ்தான் இந்தியாவை விட உயர்வானது.
          கிறிஸ்துவர்களை பொறுத்தவரையில் இஸ்ரேல் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை விட உயர்வானது.
          கம்யூனிஸ்ட்களை பொறுத்தவரையில் சோவியத் யூனியன், சீனா இந்தியாவை விட உயர்வானது.

      • நான் கம்யூனிஸ்ட்களை ஆதரிக்க ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது ஹிந்து மதத்தில் இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்களில் உள்ளது போல் மதவெறி அடிப்படைவாதம் வளராமல் இருக்க கம்யூனிஸ்ட்கள் இந்த நாட்டிற்கு தேவை. அந்த ஒரு காரணத்தை தவிர கம்யூனிஸ்ட்களின் ஏற்க எந்த காரணமும் இல்லை.

        அதற்காக ஹிந்து மதத்தை பொய்களை பரப்பி அவமதிப்பதை என்னால் ஏற்க முடியாது.

        மகாத்மா காந்தி அடிப்படையில் ஒரு ஹிந்துவாக இந்தியனாக இருந்ததால் தான் அவரால் அகிம்சை கொள்கையை கொண்டு வர முடிந்தது இந்தியா மக்களும் பெரும்பான்மையாக ஹிந்துக்களாக இருந்ததால் தான் அவர்களாலும் அகிம்சை கொள்கையை ஏற்க முடிந்தது.

        இதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் உலகம் முழுவது தங்களின் கொள்கையின் பெயரால் செய்த அழிவு செயல்களை எல்லாம் பார்க்கும் அந்த கொள்கைகளை ஏற்க என்னால் முடியவில்லை.

        • இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், இந்து என்றால் மதம் என்கிறீர், இதுல இவர் உண்மையை மட்டும் பேசுறாராம், அது அப்படியே எல்லோரையும் சுடுதாம்

          • சரி அப்படியென்றால் இந்தியாவை ஹிந்து தேசம் என்று அறிவித்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது, ஏன் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என்று அறிவிக்க பிஜேபி சதி செய்கிறது என்பது போல் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

            மேலும் ஹிந்து என்ற பெயர் கிறிஸ்துவர்களோ அல்லது இஸ்லாமியர்களோ கொடுத்தது அல்ல… சமஸ்கிரத்தின் சிந்து என்ற பெயர் தான் மருவி ஹிந்து என்று ஆனது… இஸ்லாமிய கிறிஸ்துவ படையெடுப்பிற்கு முன்பே கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியா என்றே பெயர் சொல்லி இந்த நாட்டை அழைத்தார்கள்… Megasthenes கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த பெயரால் இந்தியாவை அழைத்தார்.

            • அறிவிப்பதில் ஒரு பிரச்னையும் இல்லை, ஆனால் ஆர் எஸ் எஸ் முஸ்லிம்கள் அல்லாத இந்து ராஷ்டிரத்தை உருவாக்க பார்க்கிறது, அது எப்படி சாத்தியம்

              • அது உங்களின் பொய் குற்றசாட்டு… இஸ்லாமியர்களை பொறுத்தவரையில் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நினைப்பவர்கள், கிறிஸ்துவர்களை பொறுத்தவரையில் இந்தியாவை முற்றிலும் கிறிஸ்துவ மயமாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். கம்யூனிஸ்ட்களும் இந்தியாவை ஜனநாயகம் இல்லாத கம்யூனிஸ்ட் (சீனாவின் அடிமை) நாடாக மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள்

                பிரச்னை கிறிஸ்துவ இஸ்லாமியர்களின் நிலைப்பாட்டால் தான் நீங்கள் அல்லாஹவை வணங்குவதை யாரும் தடுக்கவில்லை, அதேபோல் கிறிஸ்துவர்கள் இயேசுவை வணங்குவதையும் யாரும் தடுக்கவில்லை ஆனால் ஹிந்து மதத்தை அவமதித்து பொய்களை சொல்லி ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்கிறோம் என்று நீங்கள் கிளம்பும் போது தான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

                இந்த நிலையில் RSS இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும். இஸ்லாமியர்களுக்கு என்று தனியாக பாக்கிஸ்தான் தேசத்தை கொடுத்த பிறகு இந்தியாவை ஏன் ஹிந்து நாடாக அறிவிக்க கூடாது ?

                ****************
                ஒன்று மட்டும் நிச்சயம் சொல்வேன், இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரையில் தான் மதசார்பின்மை எல்லாம் பேச முடியும், இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்துவர்களோ பெரும்பான்மையாக மாறிவிட்டால் மதசார்பின்மை குப்பைக்கு போய்விடும்.
                *****************

                • ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும்போது எப்படி பல கடவுள் பல மதம் ?

                  • உங்களுக்கு ஒரு சவால் கிறிஸ்துவ இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் எத்தனை நாடுகள் உண்மையிலேயே மதசார்பற்ற நாடுகளாக இருக்கிறது என்று உங்களால் சொல்ல முடியுமா ?

                    எனக்கு தெரிந்து பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகள் தங்களை மதச்சார்பு நாடாகவே சட்டப்படி அறிவித்து இருக்கிறார்கள், இஸ்லாமியர்களை தவிர மாற்று மதத்தினர் அந்த நாடுகளின் பிரதமராகவோ அல்லது அதிபராகவோ வர முடியாது… இஸ்லாமிய நாடுகளின் அரசியல் சட்டப்படியே மாற்று மதத்தினர் இரண்டாம் தர குடிமக்கள் தான்.

                    விரல்விட்டு என்ன கூடிய கிறிஸ்துவ பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் அரசியல் சட்டத்தில் மதசார்பின்மை இருந்தாலும் அந்த நாடுகளில் வேற்று மதமே கிடையாது, இஸ்லாமியர்களை போல் அவர்களும் அந்தந்த நாடுகளில் இருந்த மற்ற மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை முற்றிலும் அழித்து விட்டார்கள்.

                    *************************
                    80 சதவீதம் பெரும்பான்மையாக, ஹிந்துக்கள், வாழும் இந்தியா மட்டுமே உலகின் ஒரே உண்மையான மதசார்பின்மை நாடு… அதற்கு அடிப்படை காரணம் ஹிந்து தர்மம், இதை தான் இப்போது வினவு, கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதவாதிகள் மாற்ற பார்க்கிறார்கள்.
                    **********************

                • பாகிஸ்தானை பிரிக்க முக்கிய காரணம் பாசிஸ்டுகள் தன லாலா லஜபதி முதல் கோழை சாவர்க்கர் வரை வரலாறு தெரியாமல் உளறவேண்டாம்

                  • யாருக்கும் ஒன்றுமே தெரியாது என்று பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்…

                    இஸ்லாமியர்களால் என்றுமே மாற்று மதத்தினரோடு ஒன்று சேர்ந்து வாழ முடியாதவர்கள்… இன்றைய காஷ்மீர் அதற்கு உதாரணம், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி மிக தெளிவாக இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சட்டத்தின் கீழ் எங்களால் வாழமுடியாது பாக்கிஸ்தான் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின் கீழ் தான் வாழ விரும்புகிறோம் என்று மிக தெளிவாக சொல்லியிருக்கிறார். இந்தியா ராணுவமோ அல்லது அரசியலோ அவர்களுக்கு பிரச்சனையில்லை, இந்தியா இஸ்லாமிய நாடாக இல்லை என்பது தான் காஷ்மீரிகள் பிரச்னை, அது தான் பாக்கிஸ்தான் உருவானத்திற்கு காரணம்.

                    என்னை பொறுத்தவரையில் பாக்கிஸ்தான் தனியாக பிரிந்து சென்றவரையில் நல்லதே இல்லையென்றால் இஸ்லாமியர்களின் மதவெறி இந்தியாவை மேலும் அழித்து இருக்கும்.
                    ******************
                    இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் மாற்று மதத்தினரை மதித்து நடந்துகொள்வது சமூக அமைதிக்கு நல்லது அவர்களின் “காபிர்” கொள்கையில் இருந்து வெளிவர வேண்டும்… உலகத்தில் நடந்த பல அழிவுகளுக்கு முக்கிய காரணம் இஸ்லாமிய கிறிஸ்துவ மாதங்களில் உள்ள “காபிர்” கொள்கை தான்.
                    ******************

    • உங்களிடம் கம்யூனிஸ்ட் பாசிச சிந்தனை முழுமையாக இருக்கிறது, என் கருத்தின் உண்மைகள் நேர்மை உங்களை ரொம்பவே சுடுகிறது.

  13. நவீன அறிவியல் அதன் உச்சாணிக் கொம்பில் இருக்கும் இந்தக் காலத்தில் கூட பார்ப்பன புரட்டுகளை ஓர் அடிமையைப் போல எந்தவித கேள்விக்கும் உட்படுத்தாமல் அதை சிரமேற்கொண்டு கடைபிடிக்க நினைக்கும் கூட்டம் அறிவும் மானமும் பெற வழி இருக்கின்றதா? இதைப் பரப்பி மக்களை முட்டாள்களாக்கி அதன் மூலம் பணம் பிடுங்க நினைக்கும் கூட்டத்தையும், எந்தவித சுய அறிவும் இல்லமால் பகுத்தறிந்து சிந்திக்கும் ஆற்றல் இல்லாமல் வெட்கக்கேடான முறையில் மூட நம்பிக்கையில் வீழ்ந்துகிடக்கும் கூட்டத்தையும் அறிவு நாணயமற்ற அயோக்கியர்கள் என்று சொன்னால் அதில் நிச்சயம் தவறில்லை என்றே தோன்றுகின்றது. இந்திய நாட்டில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையில் வாழும் பார்ப்பனர்கள் ஒரே குறிக்கோளு டைய, உயர்சாதிய எண்ணம் கொண்டவர்கள். பார்ப்பனியம் என்கிற பிறரை அடிமை கொள்ளும் தன்மையும், தகுதியும் தங்களுக்கும் இருக்கிறது என்ற போலியான மனநிலையோடு வாழும் பார்ப்பனரல்லா தார், பார்ப்பனியம் என்றால் என்னவென்றறியாதார், பார்ப்பனியத்தை எதிர்க்கின்ற பார்ப்பனரல்லாதார் யாவருமே-பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட, பழங்குடிகளைச் சேர்ந்த மக்களேயாவர். கடவுள் இருந்தால் அது அனைவராலும் பார்க்கப்பட வேண்டும்; ஆத்மா இருந்தால் அது அனைவராலும் உணரப்பட வேண்டும். மாறாக, அவை இருப்பதாகப் பாசாங்கு செய்வதைக் காட்டிலும் இல்லையென்பதே சிறந்தது என்பதுதான் நாத்திகக் கொள்கையாகும். சாதியிருந்தால் அது அனை வருக்கும் சமத்துவத்தைத் தரவேண்டும்.
    மதங்கள் இருந்தால் அவை அனைவர்க்கும் சமமான அதிகாரத்தைத் தரவேண்டும். கடவுள் இருந்தால் அது அனை வரிடத்தும் ஒற்றுமையைத் தரவேண்டும். இல்லையேல் சாதி, மதம், கடவுள் என்பவையெல்லாம் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்கான கருவிகளேயாகும்.

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க