ராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் சரித்திரம் இல்லை. அது அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது. இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல் லோகம் என்றும் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரவுக்கு வழியும் இல்லை!

இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?

தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?

எனவே, இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்!

1. இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தமானதோ நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு, பெரும் கற்பனைச் சித்திரமும் ஆகும்.
2. அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணர்ச்சியையும் அக்கால ஆரியப் பண்பாடு – பழக்க வழக்கம் முதலிய அவர்களது அன்றைய கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.
3.அது ஒன்றல்ல; பல இராமாயணங்கள் என்னும் பெயரால் நாட்டில் வழங்கிவருகின்றன.
4. அவை ஒருவரால் ஏற்பட்டவை அல்ல.
5. ஒரே காலத்தில் உண்டாக்கப்பட்டனவும் அல்ல
6. கோர்வை அற்றது.
7. முன்னுக்குப் பின் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.
8. முன்னுக்குப்பின் பொருத்தமற்ற கற்பனைகள் பல
9. மனிதப் பண்பிற்கு ஏற்றதல்ல
10. தெய்வீகம் என்பதற்கு ஏற்றதல்ல
11. மனித தர்ம ஒழுக்கம் காணவும் முடிவதில்லை .
12. உண்மையான வீரம் காண முடிவதில்லை
13. யுத்த முறையிலும் யுத்த தர்மமோ உண்மையான மனித பலமோ தெய்வீக பலமோ அறிவுக்கேற்ற வில்வித்தை முதலிய ஆயுதப் பயிற்சி பலமோ ஆயுதமோ இருந்ததாகத் தெரிய முடியவில்லை . எல்லாம் பொருத்தமற்ற கற்பனைகளே.
14. அதில் காணப்படும் ஆள்கள் உண்மையாய் இருந்தவர்களாக இருக்க முடியாது.
15. ரிஷிகள் முதலியவர்களும், இருந்த மக்கள் என்று சொல்ல முடியாததாகும்.
16. இராமாயணம் சரித்திரத்திற்குச் சம்பந்தப்பட்டதல்லாதது என்பது மாத்திரமல்லாமல், அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் சம்பந்தப்படாததே ஆகும்.
17. தேவர்கள், ராட்சதர்கள் என்ற பிரிவினைக்கு விளக்கம் இல்லை
18. அதில் கடவுளாகக் காணப்படுபவர்கள் ஒரு வரிடத்திலும் (நடத்தையிலும், பேச்சில், எண்ணத்தில்) கடவுள் தத்துவம் என்பதைச் சிறிதும் காணமுடிவதில்லை.
19. மாமிசம் சாப்பிடுவது, மது அருந்துவது இராமாயணத்தில் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.
20. தேவர்கள் தன்மை என்ன? ராட்சதர்கள் தன்மை என்ன? மனிதர்கள் தன்மை என்ன? மிருகங்கள், பட்சிகள் தன்மை என்ன? என்பன இராமாயணத்தில் வரையறுக்கப்படவில்லை.
21. இவர்களது வயதுகளும் வரையறுக்கப்படவில்லை ; வயதுக்கு ஆதாரம் இல்லை என்பதோடு முரண்பாடு கொண்டதுமாகும்.
22. இராமாயணத்தில் வரும் பாத்திரங்களுக்கு ஒரு சமயத்தில் இருக்கும் சக்தி, தன்மை மற்றொரு சமயத்தில் காணப்படுவதில்லை.
23. இராமாயணக் காலம் என்பதில் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமலும், கண்டுபிடிக்க முடியாமலும் இருக்கிறது.
24. வேதங்களுக்குப் பிறகுதான் புராணங்கள் உண்டாகி இருக்க வேண்டும். புராணங்களில் தான் இராமாயணம், பாரதம், கடவுள்கள், அவதாரங்கள் காணப்படுகின்றனவே ஒழிய, வேதத்தில் இல்லை.
25. வேதத்தில் விஷ்ணு ஒரு சாதாரண, மூன்றாந்தர, நாலாந்தர தேவன்
26. சிவனும், பிர்மாவும் வேதத்தில் இல்லை . ருத்திரன் தான் காணப்படுகிறான்.(நூலிலிருந்து பக்.5-7)

படிக்க:
பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
கேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் – இராமாயணம் !

இராமாயணம் ஆரிய கலாச்சாரத்தைச் சித்தரிக்கும் இலக்கியம்!

ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள்! எப்படியெனில்,

அவர்கள் குறிப்பிடும் காலக்கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம், லட்சம் சதுர்யுகம், கோடி சதுர்யுகம், என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக்கூடியவர்களாகவே இருப்பார்கள்.

தாசிகள் கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.

ஆண்களைப் பலாத்காரம் செய்த விபச்சாரிகளையும் பதிவிரதை’லிஸ்டில்’ சேர்த்து விடுவார்கள்.

மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.

10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறு கோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.

இப்படியாக இவை போன்ற ஏராளமான பொய்கள், புனை சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.

இராவணனிடமிருந்து மீட்டு வந்த சீதையை பாரத்தவுடன் இராமனுக்குச் சந்தேகம் உண்டாகிறது. ஏன்? சீதை இதுவரைக் கணவனைவிட்டுப் பிரிந்து சோகத்தால் வாடியவளாகத் தென்படவில்லை. அவள் அணிந்திருந்த ஆடைகளும், ஆபரணங்களும், இராமனுக்கு ஆத்திரத்தை மூட்டியது.

சீதையைக் கண்டான்; உன்மீது எனக்கு விருப்பமில்லை என்கிறான். ” நான் எங்கே போவேன்” என்கிறாள் சீதை. ”நீ யாருடனாவது எக்கேடு கெட்டு போ” என்கிறான் ராமன்.

உனக்குத்தான் என் விஷயம் தெரியுமே! ஏன் இராவணனிடமிருந்து மீட்டுவந்தாய்? என்று சீதை இராமனிடம் வாதாடுகிறாள்; சத்தியம் செய்து சீதை தீயில் இறங்க வேண்டும் என்பதாக இறுதியில் சமரசத்துக்கு வருகின்றனர். (நூலிலிருந்து பக்.44-45)

… இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள் ரிஷிகள், பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்? தேவலோகத்தில் என்றால், அங்கிருந்த பூகோலகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்? எனவே, இப்போது பூ தேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள் முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்தரிப்பதே இராமாயணம்! (நூலின் பின் அட்டையிலிருந்து)

நூல் : இராமாயணக் குறிப்புகள்
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : பெரியார் திராவிடர் கழகம்,
29, இதழியலாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர்,
திருவான்மியூர், சென்னை – 600 041.

பக்கங்கள்: 60
விலை: ரூ 10.00 (முதற் பதிப்பு)

இணையத்தில் வாங்க : periyarbooks | panuval
(பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள நூல்கள்தான் இணையத்தில் கிடைக்கின்றன. இப்பதிப்பின் விலை ரூ.30.00)

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

4 மறுமொழிகள்

  1. தனது சிஷ்யனான வீரமணிக்காக மணியம்மையை திருமணம் செய்து மணியம்மையை வீரமணிக்கு கூட்டி கொடுத்த தியாக செம்மல் ஈவே ராமசாமி

  2. நானும் ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கேன் இதே போல் அல்லாஹ் ஜீசஸ் பற்றி ஒரு கட்டுரை வெளியிடுங்கள் என்று ஆனால் இது வரையில் வெளியிடாமல் இருக்கிறீர்கள்.

    அல்லாஹ் பற்றியும் ஜீசஸ் பற்றியும் இப்படி ஒரு அவதூறான கட்டுரையை எழுதினால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும் அதனால் தான் இளிச்சவாயர்கள் ஹிந்துக்களுக்கு எதிராக அவர்களின் கடவுளை இழிவுபடுத்தி கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறீர்கள்.

  3. வினவை படிப்பதற்கு முன்பு பெரியார் அண்ணா பற்றி எல்லாம் பெரிதாக நினைத்து கொண்டு இருந்தேன் ஆனால் வினவு கட்டுரைகளை படித்த பிறகு தான் தெரிகிறது அவர்கள் எல்லாம் எவ்வுளவு பெரிய முட்டாள்கள் மூடர்கள் என்பது, கிறிஸ்துவர்கள் சொல்லி வைத்த பொய்களை உண்மை என்று நம்பி அதை பரப்பி கொண்டு இருக்கிறார்கள்.

    பெரியார் ஒரு வெள்ளைக்கார அடிமை சிந்தனை கொண்டவர் என்று அடையாளப்படுத்துவது தான் சரியாக இருக்கும்.

  4. முட்டாள் பெரியாரே இராவணன் ஒரு பிராமணன், ராமன் ஒரு சத்திரியன்… உங்கள் வழக்கப்படி பிராமணன் என்றால் அவன் ஆரியன், அதன்படி ராமாயணம் ஆரியருக்கு எதிரான போர் என்று தானே சொல்ல வேண்டும் ? பிராமணன் எப்படி திராவிடன் ஆக முடியும் ???

    பெண்களுக்கு எதற்கு கற்பு என்று கேட்ட பெரியாரால் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லும் ராமாயணத்தை ஏற்க முடியாது தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க