கேள்வி : //தரகு முதலாளித்துவம் தரகு ஏகாதிபத்தியமாக வளருமா? இரண்டிற்கும் என்ன வேறுபாடுகள்?//

– காலன்

ன்புள்ள காலன்,

ரகு முதலாளித்துவம் என்பது ஏகாதிபத்தியங்களின் கீழ் நிதி, தொழில் நுட்பம் இதர வகைகளில் அவர்களைச் சார்ந்து இருக்கும் முதலாளித்துவம் ஆகும். தரகு என்ற சொல்லே அதைத்தான் உணர்த்துகிறது.

ஏகாதிபத்தியம் என்பது உற்பத்தியில் ஏகபோகம்; ஆலை மூலதனத்துடன் வங்கி மூலனதனம் கலந்து நிதி மூலதனம் உருவாதல்; நிதிமூலதன ஆதிக்க கும்பல்களின் தோற்றம், மூலதனத்தை ஏற்றுமதி செய்வது, சர்வதேசியக் கூட்டுக் கம்பெனிகள் உருவெடுத்தமை, நாடுகளுக்கிடையே பிரதேச வரையறைக்கான, செல்வாக்கு மண்டலத்திற்கான போட்டி, உலகைப் பங்கீடு செய்து கொண்டது பூர்த்தியாகி இருந்தால், இனி மறுபங்கீடு செய்து கொள்ளப் போட்டி தொடங்குதல், உலகப் போரில் இறங்குதல் என்பவை ஆகும்.

2015 -ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின் போது வரிசையில் நின்று அவரைச் சந்தித்த இந்திய தரகு முதலாளிகள். (கோப்புப் படம்)

நமது நாட்டில் இருக்கும் தரகு முதலாளிகள் தற்போது தேசங்கடந்து தமது தொழில் விரிவாக்கத்தைக் கொண்டிருந்தாலும், அன்னிய நிறுவனங்களை விலைக்கு வாங்கினாலும் அடிப்படையில் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கும்பல்களிடம் கடன் வாங்கியும், தொழில் நுட்ப ரீதியாக சார்ந்துமே செயல்படுகின்றனர். எனவே இவர்கள் ஏகாதிபத்திய நாட்டின் ஏக போக முதலாளிகள் எனும் வகையினத்திற்குள் வரமாட்டார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //how to study socialism & communism? சோசலிசம் – கம்யூனிசத்தை எப்படி கற்பது?//

– காலன்

ன்புள்ள காலன்,

மார்க்சியம் கற்பது குறித்து இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவி செய்யும் :

♦ மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

இதைத் படியுங்கள், பிறகு எங்களது மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் தோழர்களோடு இணைந்து நீங்களும் மார்க்சியம் கற்கலாம்.

♦ ♦ ♦

கேள்வி : // கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சி கூட்டணிகளை தவிர்க்க – கட்சிகள் “தனித்தே போட்டியிட வேண்டும்” என்று உத்தரவு இட தேர்தல் கமிஷனுக்கு திராணி உண்டா.. ? //

– எஸ். செல்வராஜன்.

ன்புள்ள செல்வராஜன்,

இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரம் தேர்தலை தேர்தல் விதிமுறைகள், வழிமுறைகளோடு நடத்துவதை மட்டுமே கொண்டிருக்கிறது. நீங்கள் கூறுகின்றபடி நடக்க வேண்டுமென்றால் அரசியல் சாசன சட்டத்தில் திருத்தங்கள் போடப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

மற்றபடி தேர்தல் கூட்டணிகள், விலகல்கள், பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஆளுங்கட்சி அரசாங்கத்தின் அதிகார வர்க்கங்கள், உளவுத்துறைகளை வைத்து நடத்துகின்றன. சென்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் எப்படி பாஜக கமிஷனாக செயல்பட்டது என்பதை அறிவோம்.

♦ ♦ ♦

கேள்வி : //வரும் தேர்தலில் இந்திய அளவில் பாஜக வெற்றியை தக்க வைக்குமா?//

– திலீபன் மோகன்

ன்புள்ள திலீபன் மோகன்,

தற்போது பாஜக வெற்றியடைந்திருப்பதை நீங்களே அறிவீர்கள். வெற்றிக்கு பிறகு மோடி அரசு தனது முந்தைய ஆட்சிக் காலத்தில் செய்த அடக்குமுறைகளை தீவிரமாக செய்யத் துவங்கியிருக்கிறது.

வெளிப்படையான பயங்கரவாதிகளே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு உறுப்பினர்களாக ஆகியிருக்கிறார்கள். பாஜக உறுப்பினர்கள் கீழவையில் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது ஜெய் ஸ்ரீராம் என முழங்குகிறார்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //உங்களது தளத்தில் நம் நாட்டின் குறைகள் மட்டுமே வெளிவருகின்றன. ஏன் நம் நாட்டில் நிறைகள் எதுவும் நடக்கவில்லையா, ஏன் அவற்றை பதிவிடுவதில்லை?//

– விஷ்ணுகுமார்

அன்புள்ள விஷ்ணுகுமார்,

நாடு என்பது என்ன? அது அங்கே இருக்கும் மக்களைக் குறிக்கிறது. அந்த மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை வினவு போன்ற மாற்று ஊடகங்கள் தெரிவிக்க விரும்புகின்றன.

அதில் அம்பானி, அதானி, டாடா, அகர்வால் போன்ற முதலாளிகள் சீரும் சிறப்புமாக வாழும்போது பெரும்பான்மை மக்கள் இந்த கோடை காலத்தில் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த முரண்பாட்டை உள்ளது உள்ளபடி வெளியிடுவது சரிதானே? அடிப்படை குடிநீருக்கே இந்தக் கதி என்றால் கல்வி, சுகாதாரம், வேலை, இருப்பிடம் அனைத்திலும் நமது மக்கள் நிற்கதியாகத்தானே நிற்கிறார்கள்.

அண்டப்புளுகன் அர்னாப்

இந்தக் குறைகளை வெளியிடுவதன் நோக்கம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு எதிர்காலத்தில் அவர்கள் தமக்கான வாழ்வை நிர்ணயம் செய்யும் வண்ணம் புரட்சி செய்ய வேண்டும் என்பதே. ‘நல்லதொரு குடும்பம், ஹார்லிக்ஸ் குடும்பம்’ போன்றவை விளம்பர மாயையகளே!

ஆளும் வர்க்க ஊடகங்களோ இதற்கு நேர்மாறான செய்திகளை வெளியிடுகின்றது. மோடி அரசு அமெரிக்க அடிவருடியாக செயல்படுகிறது என்று நாம் சொன்னால், தினமலரோ, அர்னாப் கோஸ்வாமியோ வெளிநாடுகளில் மோடி சுற்றுப் பயணம் செய்து நம் நாட்டின் மதிப்பை பன்மடங்கு உயர்த்திருக்கிறார் என்பார்கள். இறுதியில் நேர்மறை செய்திகள் என்பது இப்படித்தான் பொய்யும் புரட்டுமாக இருக்கின்றன.

♦ ♦ ♦

கேள்வி : //தமிழ்த் தேசியம் இங்கு சாதிய தேசியமாக, பிற்போக்குத் தேசியமாக (தியாகு போன்றவர்களைத் தவிர) இருக்கும் நிலையில், முற்றிலும் மாறுபட்ட ஒரு வடிவத்தையும் விமர்சனங்களையும் முன்வைத்து தமிழ்த்தேசியம் பேசும் தேவேந்திர குல வேளார்களின் (உள் நோக்கத்துடன் சாதியை குறிப்பிடவில்லை) கண்ணோட்டம், குறைபாடு, சிக்கல்கள் பற்றி வினவின் பார்வை என்ன?//

– மோகன்

ன்புள்ள மோகன்,

தேவேந்திர குல வேளாளர்கள் மாறுபட்ட வடிவத்தில் முன் வைக்கும் தமிழ் தேசியம் என்ன? எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்? அதன் இணைப்பு ஏதும் அனுப்ப இயலுமா?

புதிய தமிழகம் – டாக்டர் கிருஷ்ணசாமி நேரடியாக பாஜக அடிமையாக மாறியதுதான் சமீபத்திய செய்தி. இதைத்தாண்டி தமிழ்த்தேசியம் பேசும் தேவேந்திர குல வேளாளர்கள் யார்?

♦ ♦ ♦

கேள்வி : //ராமன் கொன்றது அவரது மகன்கள் லவ, குசா என்ற செய்தி உண்மையா?அதன் ஆதாரம் என்ன?//

– அபுசார்

ன்புள்ள அபுசார்,

தோராயமாக ஒரு கணக்கீட்டின் படி இராமயணக் கதையினைக் கூறும் நூல்கள் பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவை இருக்கின்றன. அவற்றில் வால்மீகி ராமாயணம் பழமையானது.

இந்தியாவிலேயே தமிழில் கம்பர், இந்தியில் துளசிதாசர், மலையாளத்தில் எழுத்தச்சன், அசாமியில் மாதவ் கங்குனி, ஒரியாவில் பலராம்தாஸ் போன்றோர் அதை மறுபடைப்பாக்கம் செய்துள்ளார்கள்.

இதன்றி பர்மா, இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், இலங்கை, நேபாள், தாய்லாந்து, மலேசியா, ஜப்பான், மங்கோலியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இயற்றப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் வால்மீகி இயற்றிய ராமாயணத்திலிருந்து சிறிதோ, பெரிதோ மாறுபட்டும் இருக்கின்றன. வால்மீகி ராமாயணத்திலேயே முதல் காண்டமான பால காண்டம், இறுதி காண்டமான உத்தர காண்டம் இரண்டும் வால்மீகியால் எழுதப்பட்டதல்ல என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மற்ற காண்டங்களோடு உள்ள மொழிநடையும், கதையிலும் மாறுபாடு இருப்பதால் அப்படி கூறுகின்றனர்.

உத்தரக் காண்டத்தின் படி இராமன் சீதையின் மேல் சந்தேகம் கொண்டு காட்டில் விட்டுவிடுகிறான். அங்கே வால்மீகி ஆசிரமத்தில் சீதைக்கு லவன், குசன் எனும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர். ராமனின் அசுவமேத யாகக் குதிரையை அவர்கள் கானகத்தில் கட்டி வைக்க, பிறகு ராமனின் சகோதர்களான இலக்குமணன், பரதன், சத்துருக்கனன் ஆகியோர் இரட்டையர்களோடு போரிட்டு தோற்க, பின்பு ராமனே வந்து சண்டை போடுவதாக ஒட்டக்கூத்தர் கதை சொல்கிறார்.

இராமனின் கதை இப்படி வெவ்வேறு நாடுகளின் பண்பாடுக்கேற்ப வேறு வேறு வடிவங்களை எடுக்கின்றன. ஒரு ராமாயணத்தில் ராமனும் சீதையும் சகோதர சகோதரிகளாக இருக்கின்றனர். எனவே நீங்கள் கேட்டிருப்பது போல ஏதாவது ஒரு இராம கதையில் இருந்திருக்கலாம். எங்களுக்குத் தெரியவில்லை.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

5 மறுமொழிகள்

  1. அன்பு தோழர் காலன் அவர்களுக்கு … // கம்யூனிசம் என்பது மன்னம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வது அல்ல .. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்விமூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும் // என்று தோழர் லெனின் அவர்கள் கூறியுள்ளார் … வினவு மேற்கோள் காட்டியுள்ள பதிவில் எமது பின்னூட்டம் இருக்கிறது -அதையும் படியுங்கள் உங்கள் கேள்விக்கான விளக்கம் புரியும் …!

  2. வினவு தோழமைக்கு,
    அம்பேத்கரை பார்ப்பனியம் உட்செரிக்க முயல்வது எப்படி சாத்தியமாகிறது? அம்பேத்கரினுடைய சித்தாந்தம் பலவீனமானதா?
    அம்பேத்கரை பார்ப்பனமயமாக்குவதில் தலித் NGO க்களின் பாத்திரம் பற்றி விளக்குங்களேன்?

  3. நமது தீண்டாமை ஒழிய வேண்டுமாயின்,நமது மக்களின் பொருளாதாரத் தாழ்வை முதலில் போக்க முயலுங்கள்.மத மாறுதலால் நமது தாழ்ந்த நிலைமை உயரா…புதுவுலகம்/அக்டோபர் 1935 ,(தோழர் ம.சிங்காரவேலு-‘டாக்டர் அம்பேத்கருக்கு நமது வேண்டுகோள்’என்ற கட்டுரையின் குறிப்பில்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க