காதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி சார்பாக கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் வாழ்க என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம். தொடர்புக்கு : 97888 08110.

படிக்க:
பகத்சிங் வழியில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் : பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம்
♦ பகவத்கீதை – புராணக்கதைகளை பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கு ! CCCE கண்டனம்

***

கோவை அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி கல்லூரி (ITI) ஆகிய இரண்டு இடங்களில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங்கை நினைவு கூறும் வகையில் அவரது 113-வது பிறந்தநாள் அன்று, பகத்சிங் பற்றிய கூட்டங்கள் பு.மா.இ.மு சார்பில் நடைபெற்றது.

இன்றைய காலகட்டங்களில் பாடத் திட்டங்களிலும் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் மற(றை)க்கப்பட்ட தலைவர்களில் ஒருவரான தோழர் பகத்சிங் பற்றி, வரலாற்றுரீதியான விஷயங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரைப் பற்றி வரலாற்று விவரங்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டன.

பகத்சிங் ஒரு தீவிரவாதி என்று சித்தரிக்கப்படும் போலி வரலாற்றிலிருந்து உண்மை தன்மையை எடுத்துரைக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை, தொடர்புக்கு : 94451 12675.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க