வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொடி அகற்றிய அலுவலர் கிரண் டாம்லே பதவி பறிப்பு! காவிக் கும்பலிடமிருந்து உயர்கல்வி நிறுவனங்களை மீட்டெடுப்போம்!

த்திரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகமானது ஆர்.ஆர்.எஸ். சித்தாந்தவாதியான மதன் மோகன் மால்வியாவால் தோற்றுவிக்கப்பட்டது என்றால், அங்கு இந்து ராஜ்ஜியம்தானே!

பனாரஸ் இந்துப் பல்கலை கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சாகா நடைபெறுவது வாடிக்கையான ஒன்று.

இதனை பறைச்சாற்றும் விதமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘ஷாகா’ கூட்டம் அப்பல்கலைக்கழகத்தில் தினமும் நடக்கும். வழக்கம்போல் நேற்றும் அக்கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மாணவர்கள் தங்களது கொடியை நட முயன்றுள்ளனர்.

கிரண் டாம்லே.

‘இப்போதுள்ள சூழலில், ஒரு மதம் சார்ந்த கொடியை நடுவதற்கு அனுமதியில்லை’ என பல்கலைக்கழக அலுவலர் கிரண் டாம்லே கூறியுள்ளார். அதனையும் மீறி நடப்பட்ட கொடியினை பிடிங்கி எறிந்த கிரண் டாம்லேவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கையை ஏற்ற பல்கலைக்கழக நிர்வாகம் கிரண் டாம்லேவையே ராஜினாமா செய்ய வலியுறுத்தியுள்ளது. வேறுவழியில்லாமல் கிரண் டாம்லே ராஜினாமா செய்தார்.

அதோடு விட்டுவிடவில்லை, மிர்ஷாபூர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் புகார் தெரிவிக்க, அவர்கள் போலீசில் புகார் தெரிவித்து கிரண் டாம்லே-வை அச்சுறுத்தி வருகிறார்கள்.

இந்து – இந்தி – இந்தியா என்ற இந்து ராஷ்டிரத்தை அடையத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல், முதல் கட்டமாக உயர்கல்வி நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.

”பாதுகாப்பற்றச் சூழலில் பனாரஸ் இந்துப் பல்கலை” – மாணவர்கள் போராட்டம்.

இங்கு, சென்னை ஐ.ஐ.டியில் மத – நிர்வாக ஒடுக்குமுறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட ஃபாத்திமா லத்தீஃப்பின் தாய் கூறியதை நினைவுக் கூறவேண்டும். “முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம்”. அந்த தாய் கூறியது தற்போது நமது கண்முன்னே சான்றாகிவிட்டது.

படிக்க:
பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்
அன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் !

இப்படி மாணவர்களை சாதி, மத, இன, மொழி ரீதியாக ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை கல்வி நிறுவனங்களில் இருந்து விரட்டியடிப்போம்!


த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.