சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா தற்கொலை, கண்டனக் கூட்டம் நடத்த தர்மபுரி போலீசு தடை !

டந்த 8-ம் தேதி சென்னை ஐ.ஐ.டி.-யில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் முதுகலை பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்டார். இது அவருடைய பெற்றோர் மட்டுமல்ல அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது தற்கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன்தான் காரணம் என்று தனது செல்போன் குறிப்பில் ஃபாத்திமா எழுதி வைத்துள்ளார். அப்படியிருக்க பேராசிரியர் சுதர்சன் பத்மநாதன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. அதாவது, கடந்த எட்டாம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை ஏறக்குறைய 17 நாட்கள் கடந்தும் இன்று வரை சுதர்சனை போலீசு கைது செய்யவில்லை.

இதனைக் கண்டித்து, ஐ.ஐ.டி ஆசிரியர் சுதர்சன் பத்மநாதனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தர்மபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் 26-11-2019 அன்று மாலை கண்டன கூட்டம் நடத்துவதற்கு தர்மபுரி B1 போலீசு நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால் ஆய்வாளர் இல்லை என்று போலீசு நிலையத்தில், மனுவைக் கூட வாங்க மறுத்துவிட்டார்கள். அதன்பின் மாவட்ட துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. அவரோ மீண்டும் B1 போலீசு நிலையத்திற்கே மனுவை அனுப்பினார். அங்கு போலீசு ஆய்வாளர் மனுவைக் கூட படிக்காமல், உங்களுக்கு அனுமதி கிடையாது என்று அராஜகமாகக் கூறி தெருமுனைக் கூட்டத்திற்கு தடை போட்டிருக்கிறார்.

தர்மபுரி போலீசு தொடர்ந்து பல போராட்டங்களுக்கு அனுமதி கேட்டாலும் அனுமதி வழங்குவதில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு இருப்பதாக சொல்லிக் கொள்ளும் போலீசு, அதை காலில் போட்டு மிதிக்கிறது. குறிப்பாக தருமபுரி போலீசு ஆய்வாளர் திரு. ரத்தனகுமார்; “என்ன தொடர்ந்து மனு கொடுக்கிறீங்க… ரிமாண்ட் பண்ணிருவேன்.. பாக்குறியா.. ” என்று மிரட்டுகிறார்.

படிக்க:
பாத்திமா தற்கொலை : பேராசிரியர் சுதர்சன் பத்மனாபனை கைது செய் ! புமாஇமு கண்டனம்
♦ ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் !

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை – பேச்சுரிமையை மறுத்துவிட்டு போராடுபவர்களை ஒடுக்கும் தருமபுரி போலீசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் இந்த அடக்குமுறையை அனைத்து ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் கண்டிக்குமாறும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கோருகிறோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு : 63845 69228.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க