சென்ற நான்கு நாட்களின் நம்மை கடந்து சென்ற பல செய்திகளை நாம் கவனிக்கவில்லை. அல்லது முக்கியத்துவம் கொடுக்கவில்லை. டோல்கேட் ஒரு நாள் வருமானம் 24 கோடியில் இருந்து 84 கோடியாக உயர்ந்திருக்கிறது. (செய்தி : தினமலர்) இன்னும் 60% பேர் பாஸ்ட்டேக் செய்யவில்லை. இருமுனை கட்டணம் என்பது இனி இல்லவே இல்லை. எல்லாமே சிங்கிள் எண்ட்ரிதான். அதனால் கூடுதலாக வந்த வருமானம் இது. விரைவில் ஒரு நாளைக்கு 98 கோடியை தொடும் என்கிறார்கள். அப்படியெனில் வாரத்திற்கு ? மாதத்திற்கு ?

இவ்வளவு பணம் யாருக்கு ? இழப்பீடாக மக்களுக்கு கொடுத்த பணம், சாலை மேம்படுத்திய பணம் ஆகியவைகளை எத்தனை ஆண்டுகள் கொடுப்போம் ? வாங்கிய கடனை கொடுக்க கொடுக்க குறையத்தானே செய்யும் ? இங்கே ஏன் அதிகரிக்கிறது ? இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி கொடுக்க போகிறோம் ? அதுவும் கழிப்பறை வசதி கூட இல்லாத கேவலமான சுங்கவரி நிலையங்களுக்கு ?

காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை, குடியுரிமை சட்டத்தை, ஜி.எஸ்.டி. -யை கேவலமாக திருத்தி நம் மீது திணித்தார்களோ அப்படியே இப்போது இன்னொரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இனி நிலத்தின் அடியில் சோதிக்க யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை என திருத்தம் செய்திருக்கிறார்கள்.

அதாவது மாநில அரசிடம் கூட, என அதன் ஷரத்துகள் சொல்கின்றன. ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளால் ஒரு டாஸ்மாக் கடையைக் கூட அப்புறப்படுத்த முடியாமல் அரசின் கொள்கை முடிவு என பேசியவர்கள், இனி அவைகளால் ஏதும் செய்ய முடியாது நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதை தவிற வேறு ஒன்றுமில்லை என்றொரு சூழலை உருவாக்கியுள்ளார்கள். இதுவரை இதற்கு மாநில அரசு ஒரு மூச்.. கூட எதிர்க்கவில்லை.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி தொகை அதிகரித்துகொண்டே செல்கிறது. மம்தா ஒவ்வொரு மாதமும் போராடி வாங்குகிறார். மத்தியரசு ஏதேனும் காரணம் சொல்லி கொடுக்க மறுக்கிறது. தமிழ்நாட்டில் 4500 கோடிகளுக்கு மேல் ஜிஎஸ்டி மட்டும் கொடுக்கவில்லை.

படிக்க :
முதுகெலும்பில்லாத ரஜினி மன்னிப்பு கேட்க மாட்டார் !
♦ CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை !

இதுபோக மதுரை எய்ம்ஸ் -க்கு இப்போது வரை நில ஆர்ஜித தொகை கூட கொடுக்கவில்லை. இன்னும் பல்கலைகழக நிதி, உள்ளாட்சி உள்ளிட்ட எந்த நிதியும் கொடுத்த மாதிரி தெரியவில்லை. ஜி.எஸ்.டி வந்தால் மாநில அரசுக்கு வரிவருவாய் கூடும் என்ற எச்சைகள் அவர்களின் அடிமைகள் இப்போது வாய் திறக்க மாட்டார்கள். இப்படி ஒரு செய்தி வந்ததே அவர்களுக்கு தெரியாத மாதிரி இருப்பார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி சட்டப்பேரவை கொடுத்த மனுவை குப்பைக்கு தள்ளிய பிஜேபி இப்போது ஐந்தாம் வகுப்பு மாணவர்களை பொது தேர்வு, அதுவும் வேறு பள்ளியில் சென்று எழுதச் சொல்கிறது. பத்தாம் வகுப்பு மாணவன் சைக்கிள், அல்லது கல்லூரி பேருந்தில் செல்வான். ஐந்தாம் வகுப்பு மாணவன் எப்படி செல்வான் ? அரசு பள்ளி மாணவர்களை யார் அழைத்து செல்வார்கள் ? இந்நிலை தொடர்ந்தால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என கல்வியாளர்கள் சொன்ன போதும் ஏன் மத்தியரசு திணிக்கிறது. ஒரே காரணம் ‘நீ படிக்க வராதே’ என்பதையே இந்த பிஜேபி அரசு நீட் முதல் பொதுத்தேர்வு வரை திரும்ப திரும்ப சொல்கிறது.

பிஜேபி -யின் மூடர் கூட அரசும், அதிமுகவின் அடிமை அரசும் சேர்ந்து ஒட்டுமொத்த சீரழிவை செய்துகொண்டிருக்கின்றன. இவர்கள் இருவரின் சித்தாந்தங்களும் மண்ணில் இருந்து அழித்தொழிக்கப்படவேண்டியவை. அது ஒன்று தான் எதிர்கால இந்தியாவை மீட்டெடுக்க ஒரு வழி.. ஒரே வழி…

நன்றி : ஃபேஸ்புக்கில் பா. சரவண காந்த் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க